-
மாபெரும் இரத்ததான நிகழ்வு
–MMS எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவும் இணைந்து இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மாதாந்தத் தேவையான 600 அலகுகளை நோக்காகக் கொண்டு இந்த ஏற்பாடு நடைபெறுகிறது. ‘இரத்தம் கொடுத்து உயிர்காப்போம்’ எனும் மனிதாபிமான அடிப்படையில் அண்மைக்காலமாக மட்டு மாவட்டத்தில் பல இடங்களில் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-
ஐநா வாகனத்தில் மோதுண்டு தாய் பலி, பிள்ளைகளுக்கு காயம்
‘இதேவேளை குறித்த பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளையில் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனால் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன’. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் இன்று மாலை ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் மோதியதில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது இரு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளனர். வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தினையடுத்து பொதுமக்கள் வாகனத்தை தாக்கி…
-
தோப்பூர் வைத்தியசாலையில் இருக்கும் அடையாளம் காணப்படாத ஜனாஸா..
-அல்-மனார், காத்தான்குடி தோப்பூரில் நேற்று இ.போ.ச. பஸ் வண்டியின் சில்லுக்குள் அகப்பட்டு அகால மரணமாகிய இம் முஸ்லிம் சகோதரர் சம்பந்தமான அடையாளங்கள் அல்லது இந்த ஜனாஸாவுக்கு உரிமை கோரல் என்பன இதுவரையில் மேற்கொள்ளப்படாது இருக்கும் இந்நிலையில், இச் சகோதரரின் ஜனாஸா தற்பொழுது தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி ஜனாஸா நல்லடக்கத்துக்கு முஸ்லிம் சகோதரர்கள் முன்நின்று, குறித்த ஜனாஸா முஸ்லிம் சமயப்படி நல்லடக்கம் செய்ய உறுதுணை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
-
இந்த ஆண்டின் மிகப் பெரிய முழு நிலவு மே 5 இல்
இந்த ஆண்டின் மிகப் பெரிய முழு நிலவு எதிர்வரும் 5 ஆம் திகதி தோற்றமளிக்கவுள்ளது. சந்திரன் பூமிக்கு அருகில் வரவுள்ளதாக முழு நிலவு தோற்றமளிக்கவுள்ளதாக வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை ‘சுப்பர்மூன்’ என அழைக்கப்படுகிறது. பூமியில் இருந்து 221,802 மைல் அருகில் வரவுள்ளதால் எதிர்வரும் சனிக்கிழமை நிலவு வழமையைவிடவும், பெரிதாகவும் அதிக பிரகாசம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். சந்திரனின் சுற்றுப் பாதை சரிசமமாக இல்லாததனாலேயே அது பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர் ஜெரவு குறிப்பிட்டுள்ளார்.
-
தொழிலாளர் தின ஊர்வலம்
இன்று காலை காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வாகண ஊர்வலம் காத்தான்குடியை அலங்கரித்துச் சென்றது.
-
ஹாபீஸ் நசீர் மு. காவில் இணைந்தார்; பிரதித் தலைவர் பதவியும் ஒப்படைப்பு
ஜனநாயக ஐக்கிய முன்னணி (துவா), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் இணைந்து எதிர்காலத்தில் செயற்பட முன்வந்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனநாயக ஐக்கிய முன்ன ணியின் தலைவர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் அக்கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட கட்சியின் உறுப்பி னர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டிருப்பதாக நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்…
-
அசாமில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 70 பேர் பலி
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் ஒரு படகு கவிழ்ந்ததில் பலர் பலியாகியுள்ளனர். இந்திய நேரம் இரவு 11 மணியளவில் குறைந்தது ஐம்பது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக புதுடில்லியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
-
தம்புள்ளை பள்ளிவாசல் இடமாற்றப்படக் கூடாது: காத்தான்குடி நகரசபையில் தீர்மானம்
தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டும் எனும் பிரேரணையொன்று காத்தான்குடி நகர சபையின் விசேட கூட்டத்தின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையின் விசேட கூட்டம் நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
-
அடோல்ஃப் ஹிட்லரின் கழுத்தை நெறுக்கிய “பெட்டில் ஓஃப் பேர்லின்”
முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து, ஜெர்மனியில் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
-
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இலங்கை வருகிறது!
ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்று 30ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட்- ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ் மற்றும் லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவே இன்று இலங்கை வருகிறது.
-
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் தொடர் இலங்கையில்…
பாகிஸ்தான் கிரிக்கட் அணி எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கைக்கு விளையாட்டு விஜயம் செய்யவுள்ளது. T20, ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஓர் நிறைவான தொடராக இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் இத்தொடர் சம்பந்தமாக தற்பொழுது அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
-
20 நாடுகளில் இலங்கையருக்கு கூடுதல் தொழில் வாய்ப்புகள்
பொறியியலாளர், தாதிமாருக்கு வெற்றிடங்கள் 20 நாடுகளுக்கு வெளிநாட்டு தொழில்களுக்காக நாம் இலங்கையர்களை அனுப்பி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் உலகின் வளர்முக நாடுகளுக்கும் இலங்கையில் இருந்து ஆட்களை தொழில்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம்.