இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் ஒரு படகு கவிழ்ந்ததில் பலர் பலியாகியுள்ளனர்.
இந்திய நேரம் இரவு 11 மணியளவில் குறைந்தது ஐம்பது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக புதுடில்லியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
பலியானவர்களில் பெண்களும் சிறார்களும் அடங்குவர்.
மேலும் பலர் நதியில் மூழ்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடும் காற்று மற்றும் மழையில் இந்தப் படகு சிக்கிக் கொண்டது என்றும் அதன் காரணமாகவே அது பிரம்மபுத்ரா நதியில் கவிழ்ந்தது என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறையினரும், துணை இராணுவப் படையினரும் அரச அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படகில் சுமார் 350 பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
-BBC
Leave a comment