WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • SAMSUNG GALAXY SIII இலங்கையில் அறிமுகம்

    டிஜிடல் ஊடகம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிடல் தொழில்நுட்பத்தில் சர்வதேச முனைவர்களாக விளங்கும் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் கம்பனி லிமிடட் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கலக்ஸி SIII இனை இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இயற்கையினால் தூண்டப்பட்டு மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கலக்ஸி SIII  ஸ்மார்ட்போன், உங்கள் குரலை அடையாளம் கண்டு, எண்ணங்களைப் புரிந்துகொண்டு, ஒரு கணத்தில் உடனடியாகவும், இலகுவாகவும் பகிர்ந்து கொள்வதற்கு வழியமைக்கின்றது.

  • சிம்பாப்வே முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று

    -MJ சிம்பாபேயில் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்த 3 நாடுகள் கலந்துகொண்ட T20 முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டியில் (Final)  தென்னாபிரிக்காவும் சிம்பாபேயும் இன்று (24) ஹராரேயில் விளையாடுகின்றன. 3வது அணியாக பங்களாதேசும் பங்கேற்றது. நேற்றை முதல் சுற்று முடிவின்படி 3 அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்று சம நிலையில் இருந்தன. இந்நிலையில் ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் பங்களாதேஷ் 3ம் இடத்தைப் பெற்றதால் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகவில்லை.

  • அஸ்வருக்கு கொலை மிரட்டல்; பிரதான சந்தேக நபர் C.I.D வசம்!

    பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரதான சந்தேக நபரை சி.ஐ.டி பொலிஸார் பேருவளை தர்கா நகரில் வைத்துக் கைது செய்துள்ளனர். அரசியலிலிருந்து ஒதுங்குமாறும், முஸ்லிம் விவகாரங்களில் தேவையற்ற விதமாக தலையிட வேண்டாமெனவும் கூறிச் சில அநாமதேய தொலைபேசி அழைப்புகள் அஸ்வர் எம்.பியின் கைபேசிக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.

  • மட்டக்களப்பில் நேற்று நேர்முகப்பரீட்சை: பல இளைஞர், யுவதிகள் பங்கேற்பு

    கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை நேற்று மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

  • சளைக்காத வெற்றியில் ஸ்பெய்ன்! போர்த்துக்களுடன் அரை இறுதிப் போட்டியில்…

    –MJ நேற்றிரவு இடம்பெற்ற ஐரோப்ப கிண்ணத்துக்கான 3வது  கால் இறுதிப் போட்டியில் 2:0 எனும் கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் அணியை வெற்றி கொண்ட ஸ்பெய்ன் அணி, எதிர்வரும் 27ம் திகதி புதன்கிழமை இரவு போர்த்துக்கல் அணியுடன் முதலாவது அரை இறுதிப் போட்டியில் மோதுகின்றது.

  • கிழக்கு மாகாண விளையாட்டு விழாவினை ஊடகவியலாளர் பகிஷ்கரித்து வெளியேற்றம்

    கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் ஏற்பாட்டாளர்களால் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி, நிகழ்வினைப் பகிஷ்கரித்து விட்டு குறித்த இடத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்தனர்.

  • இஸ்ரேலிய வான் தாக்குதல்: இருவர் பலி! 17 பேர் காயம்

    -MJ காசா மீது இன்று இஸ்ரேலிய வான்படை மேற்கொன்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 17 பேர் காயமடைந்திருக்கின்றனர். நேற்றிரவு இத்தாக்குல் இடம் பெற்றதாக அல் ஜஸீரா உறுதிப்படுத்தி இருக்கிறது.

  • தன் பலத்தை நிறூபித்த ஜேர்மனி அரை இறுதிக்குத் தெரிவு!

    -MJ  இன்றிரவு நடைபெற்று முடிந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான 2வது கால் இறுதிப் போட்டியில் ஜெர்மனி, கிறீஸ் அணிகள் மோதின. முதல் 45 நிமிட நேரத்தில் 1:0 என ஜேர்மனி முன்னிலையில் இருந்தது. போட்டி நிறைவடையும் போது 4:2 கோல் அடிப்படையில் ஜேர்மனி பெரு வெற்றி பெற்று தனது பலத்தை ஏனைய நாடுகளுக்கு மீண்டும் தெரியப்படுத்தி இருக்கின்றது.

  • முக்கோண இருபது20 தொடர்: பங்களாதேஷ் வெற்றி

    -MJ சிம்பாபே இல் நடைபெற்றுவரும் சிம்பாபே, பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் இருபது20 முக்கோண தொடரில், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி தென் ஆபிரிக்கா அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

  • படகு விபத்து: இலங்கையர்கள் இல்லை; 90 பேரின் நிலைமை தெரியாது

    இந்தோனேஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடல்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போயுள்ள 90 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. பல உடல்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணியளவில், அறிவித்தது.

  • இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

    -MJ இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற திஸ்ஸர பெரேராவுக்கும் இத்தொடரில்  சிறப்பாகப் பிரகாசித்த நுவான் குலசேகர மற்றும் ஜீவன் மென்டிஸ் ஆகியோருக்கும்  இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்ளிக்கப்பட்டிருக்கின்றமை ஓர் விசேட அம்சமாகும்.

  • ஐரோப்பா கிண்ணம்: போர்த்துக்கல் அரை இறுதிக்கு தெரிவு

    -MJ நேற்றிரவு இடம்பெற்ற ஐரோப்பா கிண்ண கால் இறுதிப் போட்டிக்கான முதலாவது போட்டியில் போர்த்துக்களும் செக் குடியரசும் விளையாடின. முதல் 45 நிமிட ஆட்டத்தில் 0:0 என சமநிலையில் இருந்த போட்டி, இரண்டாவது ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ‘ரொனால்டோ’ வின் கோலினால் இப்போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி இருக்கின்றது.

←Previous Page
1 … 1,246 1,247 1,248 1,249 1,250 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar