Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்

    அலரி மாளிகையில் ஜனாதிபதி வழங்குகிறார் 1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும் டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களும் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறு கிறது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா மற்றும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு எம்.பி. மொஹான் கிரேரோ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

  • ஜேர்மனி அதிர்ச்சித் தோல்வி! இத்தாலி Vs ஸ்பெய்ன் இறுதிப்போட்டி!

    -MJ ஐரோப்பா கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பலமிக்க ஜேர்மனியை இலகுவாக 2:1 என்ற கோல்வித்தியாசத்தில் இத்தாலி வெற்றியீட்டியது.

  • குர்ஆனிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

    -மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201 رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ…

  • புலமைப் பரிசில் நிதி ஜனாதிபதியிடம் கையளிப்பு!

    ஐந்தாம் ஆண்டு புலமைப்  பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை 75 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தது. இந்த தொகைக்கான காசோலையை ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையின் தலைவர் கே.எம்.ஏ கொடவத்த அலரி மாளிகையில் நடைபெற்ற  வைபவத்தில் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

  • அதிரவைக்கும் மற்றுமொரு அரை இறுதிப் போட்டியும் இன்று!

    -MJ இம்முறைக்கான ஐரோப்பாக் கிண்ணப் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு இன்றும் இரண்டு போட்டிகள் மாத்திரமே மீதமிருக்கின்றன. இன்று வியாழக்கிழமை இரண்டாவது அரை இறுதிப்போட்டியானது, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையில் போலண்ட்-வார்ஸோ மைதானத்தில் இன்று மாலை  இடம்பெற இருக்கின்றது.

  • புனித ஹஜ்கடமையை நிறைவேற்ற தெரிவானோரின் பெயர் விபரங்கள் விரைவில் வெளிவரும்

    புனித ஹஜ் கட மையை நிறைவேற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் யாத்திரிகர்களின் பெயர் விபரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹஜ் குழுத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பெளசி தெரிவித்தார். ஹஜ் கடமையை நிறைவேற்றுவத ற்கு பணத்தை செலுத்தி முன் கூட்டி பதிவு செய்யப்பட்ட வரிசைகிரமப்படியே அந்த பெயர் பட்டியல் அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  • கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகள் கலைப்பு

    -வேட்புமனுத் திகதி ஒருவாரத்துள் அறிவிப்பு – 114 ஆசனங்களுக்கு செப்டெம்பரில் தேர்தல் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் நேற்று கலைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மூன்று மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளி யிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  • விபத்தில் ஏறாவூர் இளைஞர் மரணம்

    -MMS நேற்று புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் பதுளை – கரடியனாறு வீதியில் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்  ஏறாவூரைச் சேர்ந்த 31 வயதான அஸனார் சனூஸ்  எனும் இளைஞர் மரணமானதாகவும் ,  காயங்களுக்குள்ளான நிலையில் மற்றுமொருவர்  கரடினாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் சடலம் கரடியனாறு வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

  • இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தெரிவு! பயிற்றுநரின் தவறால் போர்த்துக்கல் பரிதாபத் தோல்வி!!

    -MJ சற்று முன்னர் பலத்த போட்டிக்கிடையில்  முடிவடைந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் இரண்டரை மணித்தியால போராட்டத்தின்பின் ஸ்பெய்ன் வெற்றி பெற்றுள்ளது. முதல் 90 நிமிட ஆட்டத்தில் போட்டி 0:0 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தது. பின்னர் 30 நிமிட மேலதிக நேரம் வழங்கப்பட்டது. எனினும் போட்டி சமநிலையிலேயே நிறைவு பெற்றிருந்தது. இதனால் 3ம் சுற்றுக்கு போட்டி சென்றது. பெனால்டி உதைகள் மூலமான வெற்றி-தோல்வி சுற்றில் 4:2 கோல் முன்னிலையில் ஸ்பெய்ன் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குச்…

  • முதலமைச்சர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை விடவும் எந்தத் தரத்தை உடையவர் என்பதே அதிமுக்கியமானதாகும்! பொறியிலாளர் M.M. அப்துர் ரஹ்மான்

    ‘முதலமைச்சர் என்கின்ற பொறுப்பு மிக்க பதவியோடு தமிழ் அல்லது முஸ்லிம் என்கின்ற இன ரீதியான அடையாளங்களை முக்கியத்துவப்படுத்துவதும் அதனை ஒரு பிரம்மாண்டமான அசியல் கோசமாக மாற்றுவதும் கவலையளிக்கின்றது. சிறுபான்மை மக்களின் அரசியல் தமது அடிப்படை இலட்சியங்களை மறந்து கடந்த காலங்களில் ஒரு இனவாத அரசியலாக மாறிவிட்டிருக்கும் ஒரு துரதிஸ்டவசமான நிலையின் மற்றுமொரு பிரதிபலிப்பு என்றே தமிழ் முதலமைச்சர் அல்லது  முஸ்லிம் முதலமைச்சர் கோசத்தினைப் பார்க்கவேண்டியிருக்கிறது’. மக்களுக்கான மாகாண சபை எப்படி அமைய வேண்டும்…? கிழக்கு மாகாண சபைத்…

  • ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் அணிகள் ஏலத்திற்கு!

    ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் அணிகளுக்கான ஏலத்திற்கு சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் அறிவித்துள்ளது. அணிகைள குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கான ஏலத்தினம் நேற்று முன்தினம் நிறைவடைந் ததை அடுத்தே இலங்கை கிரிக்கெட் இந்தத் தகவலை வெளியிட் டுள்ளது. இத்தொடரில் 7 அணிகள் பங்குகொள்ளவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிக்கு சராசரியாக 4. 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஏலத்தொகையாக கோரப்பட்டுள்ளது. எனினும் வெற்றிபெற்ற ஏலத் தொகையாளர்கள் பற்றிய விபரம் இலங்கைக் கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே…

  • கிழக்கு உட்பட 3 மாகாணசபைகள் இன்றிரவு கலைக்கப்படும்?

    –MMS குறிப்பாக கடந்த 3 மாதங்களாக கிழக்குமாகாணசபை கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பாக அவை இருக்கவில்லை. எனினும் கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு கலைக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

←Previous Page
1 … 1,244 1,245 1,246 1,247 1,248 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar