-
பொத்துவில் பாணமையில் 800 ஏக்கர் காணி கடற்படை வசம்
இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள அரச படைகள் பெருமளவான காணிகளை கையகப்படுத்தி தமது முகாம்களை விஸ்தரித்துவருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில இடங்களில் முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் இன்னும் சில இடங்களில் புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
-
உலக நேரக் கடிகாரத்தில் லீப் வினாடி மேலதிகம் சேர்ப்பு
ஒரு நூற்றாண்டில் 18 லீப் வினாடி அளவில் மாற்றம் உலக நேரக் கடிகாரத்தில் லீப் வினாடியாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் திகதி 23 மணி 59 நிமிடம் மற்றும் 60 வினாடியின் போது இந்த மேலதிக வினாடி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகத்திற்கேற்ப சர்வதேச கடிகாரத்தின் நேரம் தெளிவாக பதியப்பட்டுள்ளது. இதற்கமைய நேரத்தை தெளிவாகக் காண்பிக்கும் உலகில் உள்ள அணுக் கடிகாரங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் ஒரு…
-
ஐரோப்பா கிண்ணம் 2012: சாதனைகள் நிறைந்த ஓர் சரித்திர வெற்றியில் ஸ்பெய்ன்
-MJ சற்று முன்னர் இடம்பெற்று நிறைவடைந்த ஐரோப்பா கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் இத்தாலியை 4:0 எனும் மிகப்பெரிய கோல்வித்தியாசத்தில் வெற்றுபெற்று, ஐரோப்பிய உதைப்பந்தாட்ட வரலாற்றில் பல சாதனைகளை படைத்திருக்கின்றது.
-
வரலாறு தெரியாத மனோவின் ஏற்கமுடியாத கூற்று;போராட்டத்தில் பங்குபற்றியது மட்டுமல்ல வேதனைகளையும் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள்
இனப்பிரச்சினையில் தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்ட அளவுக்கு குறைவில்லாத வகையில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப் பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். முஸ்லிம்கள் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாது தீர்வில் பங்கு கேட்பது நியாயமற்ற தென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருப் பது ஏற்றுக்கொள்ளமுடியாத கூற்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
இரு இணையங்களுக்கு சீல்!நீதிமன்ற உத்தரவையடுத்து CID பணியக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு இலங்கை தொடர்பான பொய்யானதும் நெறி முறையற்றதுமான பிரசாரங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட, இரு இணையத்தளங்கள் இயக்கப்பட்ட அலுவலகமொன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சீல் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது,
-
பலத்த எதிர்பார்ப்புடன் ஐரோப்பா கிண்ண இறுதிப்போட்டி இன்று! 300 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பார்த்து மகிழ்வர்!
-MJ ஐரோப்பா கிண்ணத்துக்கான 2012, இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (இலங்கை நேரப்படி) இடம்பெற இருக்கின்றது. ஐரோப்பாவின் உதைப்பந்தாட்டத்தை தங்களது காலடியில் வைத்திருக்கும், உலக உதைப்பந்தாட்ட அணிகளுள் 1வது அணியாக அறிவிக்கப்பட்ட, கடந்த ஐரோப்பா கிண்ண சம்பியன் மற்றும் நடப்பு உலகக்கிண்ணச் சம்பியன் என்று வர்ணித்தே போகும் பலமிக்க ஸ்பெய்ன் ஐ எதிர்த்து இத்தாலி விளையாட இருக்கின்றது.
-
வடக்கு துணுக்காய் நகர எழுச்சித்திட்டத்துக்கு 451 மி. ஒதுக்கீடு!
–MMS முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் நகர எழுச்சி திட்டதத்துக்கு 451 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இத்திட்டங்களுக்கென 2011ஆம் ஆண்டில் 130 மில்லியன் ரூபாவும் 2012 ஆம் ஆண்டுக் கென 200 மில்லியன் ரூபாவும் 2013 ஆம் ஆண்டுக்கென 121 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
முஸ்லிம் மீடியா போரத்தின் 16 வருட வளர்ச்சிப் படிகள்
இன்று வருடாந்த மாநாடு கொழும்பில் இந்நாட்டின் ஊடகத்துறை வரலாற்றில் குறிப்பாக முஸ்லிம் ஊடக வரலாற்றில் “ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்” முத்திரை பதித்த ஒரு பலம் வாய்ந்த அமைப்பாகும். சமுதாயப் பற்று மிக்க நல்லவர்களின் பூரணமான ஆசீர்வாதத்துடனும், ஆதரவுடனும் 16 வருடங்களுக்கு முன்னர் உருவான இந்த “முஸ்லிம் மீடியா போரம்” அடைந்த வளர்ச்சிப் படிகளை வரலாற்றுப்பதிவுகள் என்றும் கூறலாம்.
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவோருக்கு நேர்முகப் பரீட்சை
கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் அனைவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்துக்கு வருமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு நேர்முகப் பரீட்சைகளை நடத்துகிறது.
-
ஒரே நாளில் இரண்டு போட்டிப் பரீட்சைகள்! குழப்பத்தில் பட்டதாரிகள்
இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சை நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பில் நடக்கவுள்ள நிலையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையை கிழக்கு மாகாணத்தில் நாளை நடத்துகிறது. கிழக்கில் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 3500 பட்டதாரிகளுள் சுமார் 1200 பேர் இலங்கை நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கும் விண்ணப்பித்து இருந்தனர்.
-
ஸ்ரீ லங்கா மிரர் மற்றும் ‘X நியூஸ்’ இணையத்தள அலுவலகங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் சோதனை! 9 ஊடகவியலளார்கள் கைது!!
-MMS ஸ்ரீ லங்கா மிரர் (srilankamirror) மற்றும் ‘X நியூஸ்’ உடகங்களின் அலுவலகங்கள் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினரின் சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலுவலக கனணிகளும் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா மிரர் இணையத்தள பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
-
ஹதீஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
தொகுப்பு – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ اْلعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَ دُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِِيْ، اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِىْ، وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ. 1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும்…