-
தேர்தலும் தடைவிதிக்கப்பட்டுள்ள கட்சிகளின் சின்னங்களும்
-MMS தற்பொழுது எதிர்நோக்கவுள்ள கலைக்கப்பட்ட 3 மாகாணசபைத் தேர்தலுக்குமான முன்னேற்பாடுகள், அறிவித்தல்கள் தேர்தல் சட்டங்கள் மற்றும் ஓழுக்கம் போன்றன கட்சிகளுக்குப் போதிக்கப்பட்டு வருகின்றன. இந்ந வகையில் கட்சியின் சின்னங்ளைப் பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் செயலகம் அறிவித்திருக்கின்றது. தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் சின்னங்களிலிருந்து நாய் மற்றும் புலிச் சின்னங்கள் நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
-
நற்குணம்
உம்மு யாசிர் : இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். இது வெறும் வணக்கம் மற்றும் மறுமையை பற்றி மட்டும் கூறக்கூடிய ஒரு மதமல்ல. மனிதனின் முழு வாழ்க்கை நெறிமுறைகளை கூறக்கூடிய ஒரு முழு வாழ்க்கைத் திட்டமாகும். எப்படி தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை மனிதர்களுக்கு கடமையாக்கி, அவைகளை செய்யும்படி ஆர்வம் ஊட்டுகின்றதோ அவ்வாறே நற்குணம் பற்றியும் மனிதர்களுக்கு ஆர்வம் ஊட்டுகின்றது. நற்குணத்தை முழுமைப்படுத்தவே நான் நபியாக அனுப்பப்பட்டிருக்கின்றேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாளை மறுமையில்…
-
கிழக்கு தேர்தலில் தனித்தா? கூட்டா? மு.கா. வின் கூட்டம் இழுபறியில்
* கட்சிக்குள் கடும் வாதப் பிரதிவாதங்கள் * அரசுடன் இணையும் முடிவுக்கு ஆதரவு அதிகம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா இல்லை தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற கூட்டமும் முடிவுகள் எட்டப்படாது முடிவுற்றது. ஆசனப்பகிர்வு, சக கட்சி வேட்பாளர்களை களமிறக்கும் இடங்கள் என்பவற்றில் ஐ.ம.சு.மு, மு.கா விடையே…
-
விண்வெளி பயணத்தில் முதல் இலங்கை வீரர்
சீனாவுடன் இணைந்து ஒப்பந்தம் கைச்சாத்து இன்னும் 4 ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு இலங்கையர் ஒருவரை அனுப்பி வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நாம் ஏற்படுத்தவுள்ளோம். இலங்கையின் தனியார் நிறுவனமான சுப்ரிம் சட், சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பெரிய செய்மதிகளை தயாரிக்கும் கிரேட் வோல் கோப்பரேசன் நிறு வனத்துடன் இணைந்து ஒரு இலங்கை விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றில் சமீபத்தில் சீனத் தலைநகரமான பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டது. சுப்ரிம் சட் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஆர்.எம். மணிவண்ணன்,…
-
சேறு பூசும் இணைய தளங்கள் அனைத்தும் முடக்கப்படும்: அரசாங்கம்
தனிப்பட்ட நபர்கள் மற்றும் அரச தரப்புக்களுக்கு எதிராக சேறு பூசும் இணைய தளங்கள் அனைத்தையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களில் சேறு பூசும் இணைய தளங்கள் அனைத்துமே முடக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படாத பல இணைய தளங்கள் வெளிநாடுகளிலிருந்து செயற்படுகின்றன.
-
ஏழு மாவட்டங்களில் கடும் காற்று: 466 பேர் பாதிப்பு: 339 வீடுகள் சேதம்
ஏழு மாவட்டங்களில் ஆங்காங்கே வீசிய கடும் காற்றினால் 466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 339 வீடுகள் சேதமடைந்துள்ளன. நுவரெலியா, கம்பஹா, கொழும்பு, மாத்தளை, குருநாகல், காலி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே கடும் காற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
-
மேற்குலகத்துக்கு ஈரான் திட்டமிட்டுள்ள மற்றுமொரு பதிலடி!
ஹோர்முஸ் கால்வாய் ஊடாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை கண்கானிக்கும் ஓர் ஈராணிய படை வீரர். -MMS வளைகுடாவை தன் காலடியின் ஆதிக்கத்தின் வைத்திருக்கும் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு, அடிபணியாத சிக்கலுக்குரிய நாடாக இன்னும் இருந்துவருவது ஈரான் ஆகும். தலையிடிக்கு மேல் தலையிடியாக பதிலுக்கு பதில் ஈரான் அமெரிக்காவுக்கு அன்று முதல் இன்றுவரை தலைசாய்க்காது பதிலடிகளை தெரிவித்து அல்லது செயற்படுத்தி வகின்றது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று குற்றம் சுமத்தியதுடன், அமெரிக்கா,…
-
மியன்மார் முஸ்லீம்களும் இன்றைய நிலைமைகளும்….
-அஹ்மட் இஸ்ஸத் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாத இயக்கங்கள் மேற்கொள்ளும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
மட்டு பெரியபோரதீவில் பொலிசார் தாக்கப்பட்டனர்
-MMS இலங்கையில் கிறீஸ் மனிதப்பதட்டம் ஏற்பட்டு ஒருவருடகாலமான நிலையில் தற்பொழுது அது ஓய்ந்திருக்கின்றது. இந்நடவடிக்கையில் பொலிசாரும் இராணுவத்தினரும் பொதுமக்களால் வெளிப்படையாக சந்தேகிக்கப்பட்டிருந்ததும் ஞாபகமிருக்கலாம். களுவாஞ்சிக்குடி பெரியபோரதீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீது தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேரியபோரதீவு – பழுகாமம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
-
கிழக்கில் சுழன்ற சுழல்காற்று! மக்கள் பதட்டம்!!
-MMS நேற்று திங்கட்கிழமை கிழக்கில் திடீரென எற்பட்ட புயல்காற்றால் மக்கள் பெரிதும் பதட்டமடைந்தனர். சிறுவர்களையும் குழந்தைகளையும் இழுத்துச் செல்லுமளவுக்கு இச்சுழற்காற்று வீசியது. மட்டக்களப்பில் நேற்று பிற்பகல் வீசிய சுழல் காற்றினால் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கலந்து கொண்டு ரையாற்றிய மேடை சரிந்து விழுந்ததுடன் மேடை முற்றாக சேதமடைந்தது.
-
கடலில் கரையும் பணமும், உயிர்களும்! சட்டவிரோத படகுப் பயணங்கள்!
படகுகளில் ஏறிவிட்டால் சரி என்று பயணத்திற்கு தயாராகுபவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் பின்னாலான அளவிடமுடியாத சவால்களை எவரும் எண்ணிப்பார்த்து விடுவதில்லை இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் நாளாந்தம் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. நாளுக்கு நாள் புலத்தில் தஞ்சம் அடைவதற்காக பயணிப்பவர்களும் கைது செய்யப்படுபவர்களும் என நீண்டு செல்லும் பட்டியலுக்குள் இன்னமும் ஈழத்தமிழர்களின் அவலம் தொடர் கதையாக மாறியிருக்கின்றது.
-
தேர்தல் சட்டத்தை வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்
– தினகரன் ஆசிரியர் தலைப்பு கிழக்கு மாகாணசபை, சப்ரகமுவ மாகாண சபை, வடமத்திய மாகாண சபை ஆகியவற்றுக்கான தேர்தலை அரசியல் சாசனத் திற்கு அமைய நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால், இந்த மூன்று மாகாண சபைகளை சார்ந்த பிரதேசங்களில் ஏற்கனவே தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு கட்சியின் சார்பில் யார் யாரை வேட்பாளர்களாக அமர்த்துவது, கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் அங்கத்தவர்களாக இருந்தவர் களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதா? போன்ற முக்கிய தீர்மானங்களை இப்போது அரசியல்…