-
கி.மா.சபை தேர்தல்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம்!
-MMS விரைவில் நடைபெறவிருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
-
கிழக்கில் வலுப்பெற்றுவரும் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை;
தமக்குள் கூட்டணி அமைத்து ஒருமித்த குரலில் அரசுடன் பேச்சு நடத்த முடிவு பிரசாரங்களில் ஆளை ஆள் விமர்சிப்பதில்லை எனவும் தீர்மானம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை வலுவாக எழுந்துள்ள நிலை யில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சி களான முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சியும் முதலமைச்சர் கோரிக்கையில் ஒருமித்து செயற் படுவதெனவும், தேர்தல்…
-
தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் உடன் கைது செய்யப்படுவர்!
-MMS கலைக்கப்பட்ட மாகாணசபைகளுக்குரிய தேர்தல்கள் நடைபெற இருப்பதற்கு முன்னரே இலங்கை அரசியலிலும் கட்சிகளுக்குள்ளும் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தவகையில் தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்களும் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் கடைப்பிடிக்கவேண்டி தேர்தல் சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் போஸ்டர், கட்அவுட்களை காட்சிபடுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். பசைவாளிகளை மாணவர்களிடத்திலும் தொண்டர்களிடத்திலும் அரசியல்வாதிகள் கொடுத்து நகரத்தை மாசுரச்செய்வது இதவரை நடந்துவந்தவை. எனினும் இவ்வாறான…
-
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி இன்று: நுழைவுச்சீட்டு 4000 பவுண்ஸ்! பலத்த எதிர்பார்ப்புடன் பிரித்தாணியா மக்கள்!
-MJ வருடாவருடம் இங்கிலாந்து, விம்பிள்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது. 6 முறைகள் விம்பிள்டன் சம்பியனை வென்ற சுவிட்சர்லாந்து இளம் நட்சத்திரமான ரோஜர் பெடரர் யை எதிர்த்து ஸ்கொட்லாந்து வீரரான அண்டி முரே எதிர்த்தாட இருக்கின்றார்.
-
அரசு உடன்படாவிட்டால் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
-MMS பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற இருக்கும் கிழக்குமாகாணசபைக்கான தேர்தலில் கில கட்சிகள் அரசுடன் பேரம் பேசும் தனது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்தவகையில் கிழக்குமாகாணசபையை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கு அரசுக்கு இருக்கின்றது. தென்பகுதியைவிட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளை வென்று, வெற்றியை உலகுக்கு மீண்டும் பறைசாற்றுவதற்கே அரசாங்கமும் போராடி வருகிறது.
-
பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடத்தொகுதி
இலங்கை பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய நிர்வாக கட்டிடத்தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மாதிவெல பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
-
விஞ்ஞான உலகில் கடன் அட்டையின் பங்கு
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு மகத்தானது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு பொருட்களை வாங்க மிக முக்கிய பங்காற்றுகிறது. பெரும்பாலான நாடுகளில் கடன் அட்டை வணிகத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் இந்த கடன் அட்டையால் பல தொல்லைகள் ஏற்படுவதும் மறுப்பதற்கில்லை.
-
கைவிடப்பட்ட நிலையில் 15 நாட் குழந்தை கண்டெடுப்பு
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிர்தௌஸ் நகர் கடற்கரையோரத்திலிருந்து கைவிடப்பட்ட நிலையில் 15 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற் சக்கர வண்டியொன்றில் அனாதாரவாக கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த குழந்தையொன்றை அந்த முற்சக்கர வண்டியின் சாரதியும் கடற்கரையிலிருந்த பொதுமக்கள் சிலரும் கண்டெடுத்து காத்தான்குடி நகர சபை தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
-
தேர்தல் நடைபெறமுன்னரே துண்டுப்பிரசுர வேட்டை…….
மாகாணசபைகள் (3) கலைக்கப்பட்டு அவற்றுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வழமைபோன்று துண்டுப்பிரசுர வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்தவகையில் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களை இலக்குவைத்த நீண்ட ஓரு பிரசுரம் சகோ. மர்சூக் அகமட் லெவ்வை அவர்களால் இன்று ஊரில் விநியோகிக்கப்பட்டிருந்து. முகநூல் நண்பர் ஒருவர் மூலமான அனுப்பப்பெற்ற இத்துண்டுப் பிரசுரத்தின் நகலினை எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றுகிறோம். பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும். நன்றி.
-
காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவிகள் தெரிவு
காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரம் போட்டியிலும், 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான செஸ் (சதுரங்கம்) போட்டியிலும் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலை அதிபர் எம்.எம். இஸ்மாலெப்பை தெரிவித்தார்.
-
சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கடும் தண்டனை
கட்சிகளுடன் ஆலோசித்தே மரண தண்டனை பற்றி இறுதி முடிவு முதல் ஆறு மாத காலத்தில் 700 சிறுவர் பாலியல் சம்பவங்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இதுபற்றி தெரிவித்த அமைச்சர்; பாலியல் துஷ்பிரயோகம், போதை வஸ்து விவகாரங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
-
மட்டு வாவியில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
-MMS இன்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாவியில் இருந்து இறந்த நிலையில் காணப்பட்ட பெண் ஒருவரின் உடலை அப்பகுதி மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். மீனவர்களின் உதவியுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.