-
இவ்வருட க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 277,097 பரீட்சாத்திகள்!
-MMS இவ்வருட ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 77ஆயிரத்து 97 பேர் விண்ணப்பித்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.என்.எம்.ஜே.குமாரசிறி தெரிவித்துள்ளார். பழைய பாடதிட்டத்தின் கீழ் 41, 323 பேரும் புதிய பாடதிட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் 220, 535 பேரும் இவ்வாறு விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
-
எமது பர்மா முஸ்லிம் சகோதரர்களின் கண்ணீரை துடைக்க விரும்பினால்..
– அஹமட் இஸ்ஸத் எமது பர்மா முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் அநியாயாங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30000 (முப்பதாயிரம் ) முஸ்லிம் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். (இது மேலும் அதிகரித்திறுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது).
-
3 வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு டெஸ்ட் தொடர் வெற்றி!
சரிந்துள்ள பாகிஸ்தான் அணிக்குள் மீண்டும் ரஸாக், அக்மல், இம்ரான் தெரிவு! இந்தியாவை சந்திக்க இலங்கை சவால்? -MJ நேற்று கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், போட்டி சமமானதால் இலங்கை 1:0 எனும் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது.
-
மட்டக்களப்பு மாவட்ட ஊடகக் கருத்தரங்கு நாளை!
‘மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு” என்ற தொனிப் பொருளில் அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள அம்மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான கருத்தரங்கு நாளை 13ஆம் திகதி மு.ப.9.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும். இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்- மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் -கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.
-
மட்டக்களப்பில் சுவரொட்டிகள்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனந்தேரியாதோரினால் நேற்றிரவு 10.00 மணிக்குப் பின்னர் “ தமிழரசுக்கட்சியின் தலைமைக்குழுவுக்குப் பகிரங்கமான வேண்டுகோள் “ என்ற தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளில் வீசப்பட்டிருந்தன.
-
2013 தேசத்துக்கு மகுடம் – ஜுலை 16
2013ஆம் ஆண்டுக்கான தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்ச்சி ஜுலை 16ஆம் திகதி மஹஒய அரலகம்வில நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகளுடன் ஆரம்பித்து வைக்கப்படும். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரஞ்சித் சியலாப்பிட்டிய திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொள்வர்.
-
வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பம்!
கிழக்கு- சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பமாகின்றது. மூன்று மாகாணங்களிலுமுள்ள ஏழு மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுமெனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை உறுதி செய்யும் வகையில் வேட்பு மனுத் தாக்கலின் பின் சர்வ கட்சி செயற்பாட்டுக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தவும் தேர்தல் செயலகம் உத்தேசித்துள்ளது.…
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு தனித்தே போட்டி
-BBC/Tamil இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்த மாகாண சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் கிடைக்காத காரணத்தால, இன்றுவரை தனித்து போட்டியிடுவது என்கிற முடிவையே தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர்…
-
இலங்கையில் முஸ்லீம்களின் சனத்தொகை 9.3 வீதமாக வளர்ச்சி!
-MMS 2012 இல் நாடு முழுவதமாக எடுக்கப்பட்ட இலங்கை சனத்தொகை புள்ளிவிபரங்கள் அண்மையில் இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இம்முறை வடக்கு மாணாணமும் புள்ளிவிபரக் கணிப்பில் உட்பட்டதால் ஓர் நிறைவான புள்ளிவிபரத்தை பெற முடிந்திருப்பதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
இங்கிலாந்து 4:0 எனும் தொடர் வெற்றி!
-MJ நேற்றைய 5வது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலியாவை வெற்றிபெற்றதன் மூலம் 4:0 எனும் பெரு வெற்றியை இங்கிலாந்து பெற்றிருக்கின்றது. ஒரு போட்டி மழைகாரணமாக முடிவு கிடைக்கவில்லை. இத்தொடர் வெற்றிகளின் மூலம் சர்வதேச ஒருநாள் தொடரில் தொடர்ந்தும் முதலாவது அணியாக இங்கிலாந்து இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
-
சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க முப்படை, பொலிஸ் கூட்டு நடவடிக்கை
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து ஆட்களை கடத்துவதை தடுப்பதற்கான பாரிய நடவடிக்கையொன்றை பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்களைத் தேடி புலனாய்வுத்துறையினரும் பொலிஸாருடன் இணைந்து இராணுவம், கடற்படை, விமானப்படையினர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
-
சமூக ஒருமைப்பாட்டு வாரம் ஜுலை 16 முதல் 22வரை!
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு எதிர் வரும் ஜுலை 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சமூக ஒருமைப்பாட்டு வாரமாக கொண்டாடவிருக்கிறது. இந்த சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜுலை 16ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறுமென தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் எஸ்.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.