-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: முஸ்லிம் கட்சிகளிடையே அடிதடி!
அறியாத விடயங்கள்…. அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடந்த திங்கட்கிழமை(13.8.12) இரவு நிலவிய அமைதியற்ற சூழலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் பிரச்சார காரியாலயமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. அட்டாளச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மற்றுமொரு காரியாலயம் தீ வைக்கப்பட்டுள்ளதோடு மோட்டார் வாகனங்கள் உட்பட சில வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
-
ஒப்பந்தம் கைச்சாத்து!
சுவாஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார- வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
-
யாழ். முஸ்லிகளின் பிரச்சினைகள் தீர்க்க உயர் மட்ட மாநாடு! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு
உயர்மட்ட மாநாடொன்றின் மூலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு உரியவகையில் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார். யாழ்ப்பாணம் மொஹிதீன் ஜூம் ஆப் பள்ளிவாசலில் நேற்று திங்களன்று இடம்பெற்ற இன ஐக்கியத்திற்கான ஒன்றுகூடல் நோன்பு திறக்கும் ‘இப்தார்” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
சிரியாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
-MJ சிரியாவின் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் நேற்று திங்கட்கிழமை சிரியாவின் அரசுக்குச் சொந்தமான விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர். எனினும் தொழிநுட்ப தடங்களால் இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாக சிரியாவின் அரசாங்க தொலைக்காட்சி அறிவித்திருக்கின்றது.
-
இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கு சவூதி 50 மில்லியன் டொலர் உதவி
சகோதரியின் கவிதைக்குக் கிடைத்த பதிலோ….? மியான்மார் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு 50 மில்லியன் டொலர் பெறு மானமுள்ள உதவிகளை வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது. மியன்மார் நாட்டில் பங்களாதேஷ் எல்லையையொட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில், கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.
-
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு மீண்டும் ஒரு தடவை விருது வழங்கும் கொமர்ஷல் வங்கி
கடந்த ஏழு ஆண்டுகளில் வங்கியின் சிறுவர் கணக்கு 24 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளது. இவ்வாண்டிலும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுள் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைப்பவர்களை மீண்டும் ஒரு முறை கெளரவிக்கவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
-
அமைச்சர்களுக்கு பம்பலப்பிட்டியில் அரச வீடுகள்!
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு பம்பலப்பிட்டியில் உத்தியோகபூர்வ வீடுகளை வழங்கப்படும் . அரசாங்கம் இதற்காக பம்பலப்பிட்டியில் 20 மாடிகளைக் கொண்ட வீட்டுத்தொகுதியை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
-
மட்டு. வெல்லாவெளி பிரதேசத்தில் மினி சூறாவளி
-MMS மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் பலவீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச்சம்பவத்தில் எவரும் காயங்களுக்குட்படுத்தப்பட்டதாக அறியப்படவில்லை.
-
லண்டன் ஒலிம்பிக் 2012: நிறைவு நிகழ்ச்சிகள்
-MJ கடந்த இரு வாரங்களாக லண்டனில் இடம்பெற்றுவந்த லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது.
-
போஸ்டர்- பதாகைகளை அகற்ற 7.3 மில்லியன் ரூபா!
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் போஸ்டர் உள்ளிட்ட தேர்தல் பதாகைகளை அகற்றவென 7.3 மில்லியன் ரூபா பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளததென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென பொலிஸ் திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
-
கருமலை ஊற்று பள்ளிவாசல் மீண்டும் திறப்பு
கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டிருந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலை ஊற்று பள்ளிவாசலை மீண்டும் திறக்க கிழக்கு மாகாண சபை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ஈரான் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை 250ஆக உயர்வு! 2000 பேர் காயம்.
-MJ சனிக்கிழமை அதிகாலை ஈரானின் வடமேற்கு மாநிலமான தப்ரீஸ் இல் இடம்பெற்ற இரு பூகம்பங்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது. இதுவரைக்கும் 2000க்கும் அதிகமானோர் காயத்திற்குள்ளாகி இருக்கின்றனர். கட்டட இடிபாடுகளுக்குள்ளும் இன்னும் பல உயிர்கள் பொறிவைக்கப்பட்டிருப்பதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெஹ்ரான் அறிவித்திருக்கின்றது.