Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலக முஸ்லிம்களின் ஒருமித்த நோன்புப் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது

    -MJ இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இன்று சனிக்கிழமை ரமழான் மாதத்தின் 30வது நோன்பினை பூர்த்திசெய்கின்றனர். இலங்கையில் இன்று மாலை மன்னார் மாவட்டம் உட்பட ஏனைய சில இடங்களிலும் பிறை தென்பட்டதாக அறியப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (19-08-2012) ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாளை உலக முஸ்லிம்கள் ஓரணியாகக் கொண்டாடுகின்றனர்.      

  • பெருநாள் வாழ்த்தும் பெருநாள் நற்செய்தியும்

    அன்புள்ள உங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இணையங்களால் இணைந்து எமது வலைத்தளத்தில் கைகோர்த்து ஓரணியாக நிற்கும் எமது உள்ளுர் மற்றும் கடல்கடந்து வாழும் அன்பான வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் எமது முதலாவது ‘ஈதுல் பித்ர்‘ நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றோம்.

  • ரமழான் பெருநாள் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்

      இலங்கை உட்பட உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்த நந்நாளில் இந்நாட்டில் நோன்புப் பெருநாளைக் கொண்டா டும் சகல முஸ்லிம் மக்களுக்கும் நாம் எமது இதயபூர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். முஸ்லிம் மக்கள் அதிகாலையிலே எழுந்து, புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் மிகவும் அமைதியான முறையில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களுடன் கூடி இந்தப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

  • உலகின் எப்பாகத்திலும் நேற்று பிறை தென்படாததால் நோன்புப் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    -MJ நேற்று மாலையிலிருந்து உலகின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டதாக அறியப்படவில்லை. இதனால் உலகில் சூரியன் முதலில் உதித்து முதலில் மறையும் நாடுகளான சீனா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிறை தென்பட்டதாக அறியப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பிறை தென்பட்டதாக இதுவரை அறியப்படவில்லை.

  • புதிய சீறுடையுடன் களமிறங்கும் இந்திய அணி

    -MJ எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இந்தி அணி புதிய சீறுடையை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய வீரர்கள் இவ் உடையுடன் குறித்த சுற்றுப்போட்டியில் களமிறங்கவிருக்கின்றனர்.

  • கிழக்கு மாகாணத்திற்கும் வசந்தம் தொலைக்காட்சி சேவை!

    சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வசந்தம் தமிழ் தொலைக்காட்சி சேவை நேற்று முதல் கிழக்கு மாகாணத்திற்கும் பார்க்கக் கூடியதாக அதன் ஒளிபரப்பு சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அலைவரிசை 24ல் கிழக்கு மாகாண மக்கள் நேற்று முதல் வசந்தம் தொலைக்காட்சி சேவை கண்டு களிப்படையும் வாய்ப்பைப் பெற்றார்கள். வசந்தம் தொலைக்காட்சி சேவையில் செய்தி ,இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நாடகங்கள் ,அரசியல் விவாதங்கள் ,கலைஞர் அறிமுகம் மற்றும் அரசியல் சமூக பிரச்சினைகளை அலசி ஆராயும் திறனாய்வு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

  • ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்கள் பாதிப்பு என்பதைத்தவிர ஒன்றுமில்லை : பசீர் சேகுதாவூத்

    கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலே முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒருவரியைத்தவிர முஸ்லிம்கள் பற்றி வேறெதுவுமே அந்த அறிக்கையில் கிடையாது என பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் பசீர்சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.

  • நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

    நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரவம். அது தவிர இரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன. இரத்தினம் என்பது அலுமினியமும், ஒக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17 ஆம் நூற்றாண்டில் இரத்தினக் கற்கள் அரச ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராகக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது.

  • வேறுபாடுகளின்றி சகலருக்கும் சேவை செய்பவர் அமைச்சர் ரிசாத்

    எதிர்க் கட்சியிலிருந்து அரசியல் செய்யும் சில அரசியல்வாதிகள்வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிசாத் பதியுத்தீனுக்கு எதிரான இனவாத துவேஷ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் அதற்கு மாறாக இனம், மதம்,மொழி கடந்து சகலருக்கும் பணியாற்றுபவர் அமைச்சர் என்பதை தமது அமைப்பு உறுதிப்படுத்துவதாக வடக்கு- கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்க தேரர் ஸ்ரீ போதி தக்சினாராமாதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • நோன்புப் பெருநாள் தொடர்பாக அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அறிவித்தல்

    – அஷ்செய்ஹ் CMM அமானி அன்புடையீர்,            அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ புனித றமழான் மாதத்தை அடைந்த நாம் நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்ற நாம் பின்வரும் விடயங்களை கடைப்பிடித்து எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சகல பொது மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

  • ஸதகத்துல் ஃபித்ர்

    மௌலவி KLM. இப்றாஹீம் மதனி 1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

  • பொதுமக்கள் மீதான சிரியாவின் விமானத் தாக்குதலில் 30 பேர் பலி!

    -MJ நேற்று சிரியா அரசாங்கப்படையினரின் ஜெட் விமானங்கள், அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் நகரமான ‘அஸாஸ்’ மீது பொழியப்பட்ட குண்டு மழைகளால் சிறுவர்கள் உட்பட 30 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நகரம் துருக்கியின் எல்லைக்கருகில் இருக்கின்றது.

←Previous Page
1 … 1,222 1,223 1,224 1,225 1,226 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar