Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு; பாதிப்பைத் தடுப்பதில் இராணுவத்தினர்

    இலங்கையின் மேற்குக் கரைக்கு 10 கிலோமீட்டர் அப்பால் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை செய்வதற்கு இலங்கை அரசு இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. சைப்ரஸ் நாட்டுக்கு சொந்தமான 15 ஆயிரம் டன் எடைகொண்ட தெர்மோபைலே சியெரா என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக வியாழனன்று கடலில் மூழ்கியதிலிருந்து அதிலிருந்து எண்ணெய் கசிந்து வருகிறது.

  • தேசிய உதைப்பந்தாட்டமும் மைதான அபிவிருத்தியும் என்னாச்சு…..?

    -SHM இம்மாதம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருப்பதாக உத்தியோகபூர்வமாக சில அரசியல்வாதிகளால் அறிவிக்கப்பட்டிருந்த தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகள் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை காணமுடியவில்லை!

  • சரத் பொன்சேகாவையே எதிர்த்தவன்! மஹிந்த ராஜபக்ஷ எனக்கு ஒரு பொருட்டே அல்ல: அஸாத் சாலி

    புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் உத்தரவிற்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசலொன்றை மூடிவிடுமாறு, முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக  முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஆசாத் சாலி தெரிவித்தார். சாய்ந்தமருதில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

  • ஓர் ஊரில் வட்டியும் விபசாரமும் பரவிவிட்டால்…!

    இஸ்லாம் வட்டியையும் அதனுடன் தொடர்பான அனைத்து வகையான கொடுக்கல் வாங்கல்களையும் தடை செய்து வியாபாரமும் உட்பட தொழில்சார் நடவடிக்கைகளை அனுமதித்துள்ள ஓர் புனிதமான மார்க்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறு ஏவியுள்ள ஏழு பெரும் பாவங்களில் வட்டியும் அடங்கும் (புகாரி, முஸ்லிம்) தெளராத், இன்ஜீல் போன்ற இஸ்னத்திற்கு முன்பிருந்த வேதங்களிலும் வட்டி தடை செய்யப்பட்டே இருந்தது. அல்குர்ஆன் வட்டியைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

  • பெருமானாரின் வாழ்க்கை குறிப்புகள்

    – மௌலவி அஹமது பாக்கவி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. பிறப்பு முதல் நபித்துவம் வரை. 2. நபித்துவம் முதல் நாடு துறத்தல் வரை. 3. மதீனா முதல் மரணம் வரை. பகுதி ஒன்று கி.பி 571ல் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில்-மக்கா நகரில்-ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.

  • பசீர் சேகுதாவூத் ராஜினாமா: இது ஒரு நாடகமா?

    -SHM கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நோன்பின் பின்னர் முஸ்லிம் பிரதேசங்களில் சூடுபிடித்திருக்கின்றது. நேற்று முன்தினம் மட்டு மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கூட்டங்களில் அலிசாஹிர் மௌலானாவின் நேர்மையையும் அவருடனான நல்லுறவையும் மெச்சித்து அவரை ஆதரித்து பசீர் சேகுதாவூத் அவர்கள் பேசியது மாத்திரமன்றி, அலிசாஹிர் மௌலானாவுக்கும் வாக்களிக்கும்படி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏறாவூரில் இடம்பெற்றிருந்தன.

  • சமுர்த்தி அலுவலர்கள், பயனாளிகள் அச்சம் கொள்ள தேவையில்லை!

    திவிநெகும சட்டத்தினால் பாதிப்பு கிடையாது * 24,000 அதிகாரிகள் உட்பட 26,000 பேரை உள்வாங்க திட்டம் * பணத்தை மோசடி செய்யும் தேவை அரசுக்கு இல்லை சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றை உள்ளடக்கி திவிநெகும திணைக்களத்தை உருவாக்கும் சட்டத்தால் எந்தவொரு சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கும் பாதிப்பு ஏற்படாது எனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

  • அகாஷி- ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

    நேற்று இலங்கை வந்த ஜப்பானின் விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி- நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நேற்று (22) பிற்பகல் சந்தித்து உரையாடினார். கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சரது இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

  • மு.கா. அதிருப்தி குழு உறுப்பினர்கள்இருவரின் கடைகள் தீ வைத்து ௭ரிப்பு

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் பிரதேச அதிருப்திக் குழு உறுப்பினர்கள் இருவரின் கடைகள் நேற்று அதிகாலை ‘‘தீ வைத்து ௭ரிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 2 மணியளவில் இக் கடைகள் ‘தீ வைத்து ௭ரிக்கப்பட்டிருக்க வேண்டும் ௭ன பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் ஏ.கே.௭ம். வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றும் ரி.வி.பழுதுபார்க்கும் கடையொன்றுமே இவ்வாறு பெற்றோல் ஊற்றி ௭ரிக்கப்படடுள்ளது.

  • த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது! ஹக்கீம்

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று கிண்ணியாவில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் மௌலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அஷ்ஹரி) தலைமையில் கிண்ணியா ஹஸனாத்…

  • 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி 26ல்

    அனுமதிப்பத்திரம் கிடையாதோர் ‘1911’ உடன் தொடர்பு கொள்ளவும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக் கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களூடாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் பரீட்சைகள் திணைக்களத்துடன் ‘1911’ என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.

  • பஷீர் சேகுதாவூத்தின் கொடும்பாவி மு.கா. அதிருப்தியாளர்களினால் எரிப்பு

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் கொடும்பாவி ஏறாவூரில் எரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்குழுவொன்றினால் இக்கொடும்பாவி ௭ரிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் யூ.௭ல்.௭ம். முகைதீன் பாவா தெரிவித்தார் ஏறாவூர் பிரதேசத்தில் சமூக ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அரசியல்கட்சிகளின் சின்னங்கள் ௭தனையும் காட்சிப்படுத்தாமல் பெரியதொரு மேடை ஒன்றினை அமைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சுமார்…

←Previous Page
1 … 1,220 1,221 1,222 1,223 1,224 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar