WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • PMGG கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

    காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டம் முடிவுறும் தறுவாயில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கிர் ஆசிரியர் மேடையில் ஏறி கருத்துக் கூற முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது. இக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உரையாற்றுக் கொண்டிருந்த சமயம் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் கடிதத் தலைப்பில் அப்பகுதியில் வாழும் மக்களின் பொய்யான கையெழுத்துக்களை இட்டு பிரதேச…

  • பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும்

    – அணிசேரா நாடுகளின் மாநாட்டில்ஜனாதிபதி- இலங்கை அரசாங்கம் அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான பல்முனை பிரயத்தனங்களுக்கும் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 16 ஆவது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

  • முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி

    கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.

  • கல்முனையில் ஜனாதிபதி தெரிவித்தது வாக்குறுதியா? அல்லது மூளைச்சலவையா?

    -SHM இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த திங்கட்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம்களை கருத்திற்கொண்டு, ‘இந்நாட்டில் பள்ளிவாயல்கள் ஒரு போதும் உடைக்கப்படாது’ என தெரிவித்திருந்தார். இதனை உள்ளுர் ஊடகங்களும், தேசிய, சர்வதேச ஊடகங்களும் அடுத்த நிமிடம் தலைப்புச் செய்தியாக படங்களுடன் வெளியிட்டு இருந்தமையும் அறியத்தக்கது.

  • செல்லப் பிள்ளைகளுக்கு ஒரு செல்போன் தேவையா?

    –  உம்மு அஸ்லம் இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகம் என்பது ஒரு இன்றியமையாத தொலைத்தொடர்பு தகவல் சாதனம் ஆகும். இதன் அடிப்படையான நன்மை என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்ததாலும் யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். ஆக இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

  • கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை! அமைச்சர் ஹக்கீம்

    கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற தேர்தர் பிரச்சார கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஹக்கீம் இந்த கருத்துக்களை தெரிவித்து்ள்ளார்.

  • மூதூர் பிரதேச ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் குண்டர் கும்பலே PMGG யின் கூட்டங்களைக் குழப்பியது! பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீண்டும் படு பொய்யர் என்பதை நிரூபித்திருக்கின்றார்!!

    -வார உரைகல் நேற்றிரவு மூதூர் பிரதேசத்திலுள்ள அக்கரைச் சேனையிலும், தோப்பூரிலும் நடைபெறுவதற்கு முறையான அனுமதிகள் முன்கூட்டியே பெறப்பட்டு ஏற்பாடாகியிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் 2:00 மணியளவில் காத்தான்குடி பிரதேச நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அலுவலகம் முன்பாக இருந்து புறப்பட்ட வேனில் நானும் பயணித்தேன்.

  • பொம்மை ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வருவதே நோக்கம்: ஹக்கீம்

    சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் சம்பந்தமாக ௭ழுந்துள்ள சவால்கள் சர்வதேச ரீதியாகக் கூர்மையாகப் பார்க்கப்படுகின்றன. பிராந்திய வல்லரசுகளும் இந்த விவகாரத்தை மிக அவதானத்துடன் நோக்குகின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மூதூர் பொது மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

  • பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் சவால்!

    திவிநெகும திணைக்களத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. முடிந்தால் இச்சட்டமூலம் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் சவால் விடுத்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றை இணைத்து திவிநெகும திணைக்களத்தை உருவாக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி…

  • புல்மோட்டையில் ஜனாதிபதி

    மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பயணத்தை பின்நோக்கி இட்டுச்செல்ல எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புல்மோட்டையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

  • நிந்தவூரில் கோர விபத்து : 6 பேர் பலி

    நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இன்றிரவு (28.08.2012) 8.35 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸும் அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேராக மோதியதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  • கல்முனையில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள்)

    கிழக்குமாகாணசைபத் தேர்தலில் தமது தரப்பு வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்ற பொ.ஐ.மு யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களைப் படங்களில் காணலாம்.

←Previous Page
1 … 1,218 1,219 1,220 1,221 1,222 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar