WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • 2011 இஸட் புள்ளி சர்ச்சை: பல்கலைக்கழகங்களுக்கு 4,928 மாணவரை மேலதிகமாக சேர்க்க வாய்ப்பு

    2011 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மாவட்ட மற்றும் தேசிய மட்ட புள்ளிகளை எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதிக்கு முன் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவிற்கும் பரீட்சைகள் திணைக்களத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்தர மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மேலதிகமாக 4,928 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது தொடர்பான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்மொழிவிற்கும் நீதிமன்றம் அனுமதி…

  • மதவாத துண்டுப்பிரசுரங்களில் அவதானம் தேவை!

    -MJ நாம் முன்னர் குறிப்பிட்டிருந்ததுபோல் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்நாட்டின் பேரினவாதிகளில் குறிப்பிட்ட சில மதவாதக் குழுக்களால் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அறிந்தவிடயம். இந்தவகையில் நாட்டின் சில பகுதிகளில் பள்ளிவாயல்கள் மற்றும் மத்ரஸாக்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்கான தடங்கல்களும் ஏற்பட்டு வந்தன.

  • மட்டு.விமான நிலைய புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

    உள்ளூர் விமான சேவையை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை புனரமைக்கும் செயற்திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கான பொதுக் கட்டடத்துக்கான பெயர் பலகையைத் திரைநீக்கம் செய்து புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார்.

  • இலங்கையின் 4வது நிலத்தின் கீழ் நடைபாதை காத்தான்குடியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது!

    -MJ நேற்று மட்டக்களப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். தேர்தல் காலத்தை முன்னிட்டு கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அண்மைக்காலங்களில் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • ஆயிரம் போட்டிகளைக் கடந்த சேர் அலக்ஸ் பேர்கிசன்!

    -MJ உலக தலைசிறந்த கழங்களுள் ஒன்றாகவும் இங்கிலாந்தின் கனவு அணியாகவும் திகழும் மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளர் சேர் அலக்ஸ் பேர்கிஸன் நேற்று இடம்பெற்ற சவ்த்தம்டன் அணிக்கு எதிரான போட்டியில் தனது முகாமைத்துவ காலத்தின் 1000 போட்டிகளைக் கடந்த ஓர் சிறந்த பயிற்சியாளரும் முகாமையாளரும் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகின்றார்.

  • மட்டக்களப்பு விமான நிலைய பணிகள் ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைப்பு

    மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று ஆரம்பித்து வைக்கவுள் ளார். இலங்கையிலுள்ள உள்ளூர் விமான நிலையங் ளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக மட்டக்களப்பு விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார்.

  • இலங்கை கால்பந்து அணியை வெளியேற்ற ஜெயலலிதா உத்தரவு

    நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். இந்த இலங்கை கால்பந்து அணியை தமிழகத்துக்கு வர அனுமதித்ததற்காக இந்திய மத்திய அரசாங்கத்தையும் அவர் கண்டித்துள்ளார்.

  • விமர்சையாக இடம்பெற்ற தெற்கு லண்டன் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் இரவு விருந்து!

    தெற்கு லண்டன் இலங்கை  முஸ்லிம் அமைப்பினால் (South London Srilanka Muslim Association ) 02-09-2012 ஞாயிறு மாலை 7 மணிக்கு டூட்டிங் (Tooting), ஜெஸ்மின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெற்கு லண்டன் இலங்கை முஸ்லிம்களுக்கான பெருநாள் இரவு விருந்து (Eid Dinner) மிக விமர்சையாக இடம்பெற்றது.

  • இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் களமும் வன்முறைகளும்

    -BBC/Tamil இலங்கையில் கலைக்கப்பட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்க இன்னும் ஒருவாரமே இருக்கின்ற நிலையில், அங்கு தேர்தல் சட்ட மீறல்களும் வன்முறைகளும் கடந்த சில தினங்களில் அதிகரித்துவருவதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான பஃப்ரல் அமைப்பு கூறுகிறது. அனுராதபுரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் இரண்டு தினங்களுக்கு முன்னர் கடுமையாக தாக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

  • பிரதியமைச்சரின் தந்திரமும் … பாக்கீரின் நாடகமும்…

    A.L.M. இஸ்மத் வெள்ளிக்கிழமையன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி பின்னர் இறங்கிச் சென்ற பாக்கீர் ஆசிரியர் தாக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை தற்பொழுது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும், பாக்கிர் ஆசிரியரும் தெரிவித்து வருகின்றமை வேடிக்கையான ஒரு விடயமாகும்.

  • என்ன.. ஓர் வில்லத்தனம்…? இவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர்கள்?

    பள்ளிகள் உடைக்கப்பட்டதாக நிரூபித்தால் பதவி விலகுவேன்: அஸ்வர் எம்.பி. ‘இலங்கையில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலுள்ளவர்களாவது அப்பள்ளி உடைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்துப் பதவியையும் விட்டு இராஜினாமாச் செய்வேன். இந்தச் சவாலை ஏற்று என்னை எந்தப் பள்ளிக்காவது கூட்டிச் செல்லுங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று சவால் விடுத்தார்.

  • PMGG மேடையில் வைத்து நகரசபை உறுப்பினர் பாக்கீர் தாக்கப்படவில்லை! அவரை நல்லாட்சிப் பிரமுகர்கள் முழுமையாகப் பாதுகாத்தனர்!!

    – வார உரைகல் நேற்று 31.08.3012 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரை வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சார மேடையில் வைத்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியர் தாக்கப்பட்டதாக பொய்ச் செய்தியொன்று பரப்பப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறு எந்த விதமான அசம்பாவிதங்களும் இப்பிரச்சார மேடையில் இடம்பெறவில்லை என்பதை ‘வார உரைகல்’ அதன் வாசகர்களுக்கு உறுதிப்படுத்துகின்றது.

←Previous Page
1 … 1,217 1,218 1,219 1,220 1,221 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar