-
க.பொ.த. உயர்தர பரீட்சையின் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல்
2011ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையின் திருத்தப்பட்ட தேசிய மற்றும் மாவட்ட மட்ட தரவரிசை பட்டியல் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக இதனை பார் வையிடலாமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
காத்தான்குடியில் இரு குழுக்களிடையே மோதல்: 4பேர் கைது
காத்தான்குடி நகரல், இரு குழுக்களிடையே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தேடப்படுகின்றனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மெத்தைப்பள்ளியடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் அது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது துண்டுப்பிரசுரம் விநியோகித்த நான்கு பேரில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு PMGGயினால் அனுப்பிவைக்கப்படுள்ள பகிரங்கக் கடிதம்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை இன்று காலை அவசரத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. இக்கடிதம் இன்று காத்தான்குடியின் சகல ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின்னர் பொமக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்போது PMGGயின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
-
துண்டுபிரசுரம் விநியோகித்தவர்கள் கைது
காத்தான்குடியில் இன்று வெள்ளக்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகித்த இருவரை காத்தான்குடி கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு மாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் அமைப்பொன்றினால் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
-
மூன்று மாகாண சபைகளுக்கும் நாளை தேர்தல்: 3336417பேர் வாக்களிக்க தகுதி
108 பேரை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி! கிழக்கு சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து. 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
-
காத்தான்குடி தேர்தல் களம்….
– விஷேட ஊடுறுவல் எதிர்வரும் 8ம் திகதி சனிக்கிழமை கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தல் மேடைகள் தற்பொழு ஓய்ந்து போயிருந்தாலும் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் குறையவில்லை! காத்தான்குடியில் குறிப்பாக 1988ற்குப் பின்னர் முஸ்லிம் தலைமைத்துவக் கட்சிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன. அதற்கு முன்னர் பெரும்பான்மை கட்சிகளோடு சேர்ந்து அல்லது சுயேட்சையாக எமது வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை வரலாறு (பார்க்க எமது அரசியல் பக்கம்).
-
தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவு: வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம்
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான இறுதிக்கட்ட சூறாவளி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத்தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்றவர்களுக்கு ௭திராகக் கடுமையான நடவடிக்கைகளை ௭டுக்குமாறு திணைக்களம் பொலிஸாருக்கு பணித்துள்ளது.
-
மதவாத போஸ்டர்களின் மொழியாக்கம்
-MJ தற்பொழுது இலங்கையின் பேரினவாதக் குழுக்களால் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு வெளியிடப்படும் இன உணர்வுகளைத் தூண்டும் புகைப்படங்கள், போஸ்டர்கள் தற்பொழுது முகநூலில் (Facebook) பற்பல விதங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிங்களம் தெரியாத எமது சகோதரர்களுக்காக இதன் கருத்துக்களையும், இவர்களின் நோக்கங்களையும் தெரியப்படுத்தும் முகமாக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது.
-
பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும் லண்டன் பராலிம்பிக் போட்டிகள்!
-MJ லண்டன் ஒலிம்பிக் அரங்கிலும் அதனைச் சூழவுள்ள விளையாட்டு மைதானங்களிலும் தற்பொழுது ‘பராலிம்பிக்’ எனப்படும் வலது குறைந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
-
உள்ளூர் விமான நிலையங்கள் உல்லாச பயணிகள் தொழிற்துறையை மேம்படுத்த உதவும்
நான்கு திசையிலும் கடலால் சூழப்பட்டிருக்கும் இலங்கை நல்ல மண் வளம் பெற்ற நாடாக விளங்குவதனால் எவ்வளவுதான் வரட்சி ஏற்பட்டாலும், எங்கள் நாட்டில் நெல் விளைச்சல் திருப் திகரமான அளவுக்கு இருக்கிறது. இந்தத் தடவை வரட்சியினால் நெற் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டாலும் இன்றும் கூட நாம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுள்ளோம்.
-
முஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு அழிப்பு
இலங்கையின் வடமேற்கே மன்னார் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவில் வசித்து வருகின்ற முஸ்லிம் குடும்பங்களின் குடியிருப்புக்கள் திங்கட்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தச் சம்பவத்தில் கடற்படையினரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 21 வீடுகளைக் கடற்படையினர் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றிருப்பதாகவும், 8 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
‘அக்கரைப்பற்றில் சுதந்திரமான தேர்தலுக்கு வாய்ப்பில்லை’ : கஃபே அமைப்பு
BBC/Tamil இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்களுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கஃபே அமைப்பு எச்சரித்துள்ளது. அங்கு தொடரும் தேர்தல் வன்முறைகள் பற்றி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக கஃபே அமைப்பின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதான இணைப்பதிகாரி அஹமட் மனாஸ் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.