-
இலவச கண்பரி சோதனையும்-மூக்கு கண்ணாடி விநியோகமும்
-டீன் பைரூஸ் காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டினில் பொது மக்களின் நலன் கருதி இலவச மூக்கு கண்ணாடி பரிசோதனை முகாம் ஒன்று இன்று காலை பதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் குர்ஆன் மதரசா கட்டிடத்தில் நடைபெற்றது.
-
உலக சிறுவா் தினமும்-ஆசிரியா் தினமும் – 2012
-டீன் பைரூஸ் மட்-மம-காத்தான்குடி பாத்திமா பாலிகா வி்த்தியாலயத்தின் உலக சிறுவா் தினமும்-ஆசிரியா் தினமும்.கடந்த 12.10.2012 பாடசாலை மண்டபத்தில் அதிபா் எம்.எம்.எம்.யூனுஸ் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வுக்கு பெற்றோர் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனா்.
-
காத்தான்குடி கடற்கரைவீதி அபிவிருத்தி
– டீன் பைரூஸ் காத்தான்குடி கடற்கரை வீதி அபிவிருத்தி வேலைகள் தற்பொழுது கடற்கரைப் பக்கமாக இருந்து மெது மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிரசவம்: மூன்று ஆண்கள், இரு பெண்கள்
கண்டி போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக பெண்மணியொருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
-
தாலிபன்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு பிரிட்டனில் சிகிச்சை
பாகிஸ்தானில் பெண் பிள்ளைகளின் கல்விக்காக குரல் கொடுத்துவந்ததால் தாலிபன் இயக்கத்தால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுஃப்சாய் (14 வயது சிறுமி) மேலதிக சிகிச்சைகளுக்காக பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். பர்மிங்ஹாம் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ள மலாலாவுக்கு தலையில் மண்டையோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
-
சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கையில் புதிய ஆலோசனைகள் சேர்ப்பு
சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை திட்டத்தில் புதிதாக ஐந்து முக்கிய ஆலோசனைகளை உள்ளடக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. அன்பு, சமாதானம், நேர்மை, நற்செயல் மற்றும் அஹிம்சை ஆகிய ஐந்து முக்கிய ஆலோசனைகளே இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
-
அரச தாதிமார் பத்து வருடங்களுக்கு சொந்த பகுதியில் சேவை
அரசாங்க தாதிமார் சேவைக்கும், துணை மருந்தாளர் சேவைக்கும் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் தொடராக தாம் வாழும் பிரதேசத்தில் பத்து வருடங்கள் சேவையாற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடமையாற்றுவதைக் கட்டாயப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
-
கவிஞர்களுக்கு ஓர் சந்தர்ப்பம்
உங்கள் மனங்களில் சுரக்கும் எண்ணங்களை பேனா மைகொண்டு காகிதத்தில் பதித்து, கைவிரல்கொண்டு அழுத்தி கணனித்திரையில் பதிவேற்றி மின்னஞ்சில் தூதாய் அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் நான்கு வரிகள் கவிதைகளாய் உலகை வலம் வரட்டும். அவை மக்கள் மனங்களில் நிலைக்கட்டும். உங்களுக்கு ஓர் தனியிடம் கிடைக்கட்டும். ஆம், அன்புள்ள எமது இணையத்தள கவிப்பிரியர்களுக்கு,
-
ஓய்வு பெறும் ‘சட்டில் எண்டீவர்’
-MJ அமெரிக்க விண்வெளி ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘சட்டில் எண்டீவர்’ (Shuttle Endeavor) எனும் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆகாய விமானம் 12-10-2012 அன்றைய தினத்துடன் தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறது.
-
விருப்புவாக்கை ஒழிக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது
இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக நீரோட்டத்திற்கு இழுக்கை ஏற்படுத்திய விருப்பு வாக்கு முறைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் கடந்த வியாழக்கிழமையன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திருத்த மசோதா சாவுமணி அடித்து இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய் வதற்கு ஒரு புதிய யுகத்தை ஆரம்பித்தது.
-
முஸ்லிம் வாக்குகளை சிதைக்க கிழக்கு வந்ததாக மக்கள் ஆவேசம்!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா வேட் பாளராகப் போட்டியிட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் துணைமேயர் அஸாத் சாலி நேற்று முன் தினம் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள வளவொன்றில் நடத்திய அரசியல் கூட்டம் களேபரத்தில் முடிந்தது. ‘சமகால அரசியல்’ என்ற கருப் பொருளில் இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இடை நடுவில் புகுந்த இனந்தெரியாத சிலர் ஆஸாத் சாலியை தூஷித்தவண்ணம் கோஷங்களை எழுப்பியதுடன் அங்குள்ள கதிரை மேசை களையும் அடித்து நொருக் கினர்.
-
அரசியல் அடாவடித்தனத்திற்கு அடிபணியேன்!
வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெறவிருந்த அஸாட்சாலியின் கூட்டம் குறிப்பிட்ட அரசியல் பிரதிநிதியின் ஆதரவாளர்களால் நேற்று நடாத்த விடாமல் தடுக்கப்பட்டது. என்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளினாலேயே காத்தான்குடி கூட்டம் குழப் பப்பட்டது. அரசியல் கட்சியொன்றின் அடி யாட்களின் கைங்கரியமே இது வென்று அரசியல்வாதி அஸாத் சாலி குற்றஞ் சாட்டியுள்ளார்.