WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வானிலையும் மாறுகிறது…!

    -டீன் பைரூஸ் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வானில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் குளிர்காற்றுடன் குளிர் காலநிலை நிகழ்கின்றது. காத்தான்குடியில் இன்று இவ்வாறு வானம் காட்சி தந்தது.

  • காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாணி விழா!

    – எமது விஷேட நிறுபர் தமிழ் மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ‘வாணி விழா’ உலக இந்துக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

  • அரபா தினம் வியாழக்கிழமை: சவூதி அரேபியா

    -MJ புனித ஹஜ் வணக்கத்தின் பிரதான நாளான அரபா தினம் எதிர்வரும் 25ம் திகதி வியாழக்கிழமை என சவுதி அரேபியா உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. இந்தவகையில் உலகில் உள்ள அத்தனை ஹாஜிகளும் இறைவனை நினைவுகூர்ந்து பாவமன்னிப்புக் கோரும் முக்கியமான நாளாகவும் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த நாளாகவும் அன்றைய நாள் அமைகின்றது.

  • காத்தான்குடி வாசிகசாலை வேறு இடத்தில் புதிதாக அமைக்கப்படும்

    – டீன் பைரூஸ் காத்தான்குடியில் தற்பொழுது தற்காலிகமாக இயங்கிவரும் காத்தான்குடி மக்களின் அறிவுப்பொக்கிஸமான வாசிகசாலை, விரைவில் வேறு ஒரு இடத்தில் நவீன வசதியுடன் அமைக்கப்பட இருப்பதாக பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்.

  • நவீன அபிவிருத்தியை நோக்கிய மற்றுமொரு பயணத்தில் கர்பலா வீதி!

    – எமது விஷேட செய்தியாளர் கடந்த கிழக்கு மாகாணபை தேர்தலின் போது பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் இப்பகுதி மக்களுக்கு கூறப்பட்டதற்கிணங்க காத்தான்குடியின் முக்கிய இடங்களையும் வீதிகளையும் தொட்டுச்செல்லும் புதிய காத்தான்குடி கர்பலா வீதி தற்பொழுது நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

  • துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

    – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்:- 1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில்…

  • இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் உள்வாங்கப்படல் அவசியம்

    தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வந்தால் முட்டுக் கட்டைகள் நீங்கும் தேசிய இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்கள் உள்வாங் கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையுமெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ் கூட்டமைப்பு பாராளு மன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் அவசியத்தையும் விளக்கினார்.

  • குளிரில் உறக்கம்!

      மீன் புரளிகளை அடுத்து காத்தான்குடியில் நேற்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் லாவகமாக உறங்கும் இப்பூனையாரை எமது விசேட நிருபர் தமது கமெராவுக்குள் உள்வாங்கிக் கொண்டார். இதில் விசேட அம்சம் என்னவென்றால் இவர் பண் பாய் இல்லாமல் உறங்க மாட்டாராம்!

  • கூட்டு உழ்ஹிய்யா

    – எமது உள்ளுர் செய்தியாளர் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ்வின் அதிபர் அதிசங்கைக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் தலைமையின் கீழ் வருடா வருடம் இடம்பெற்றுவரும் கூட்டு உழ்ஹிய்யா, இம்முறையும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. ஒரு மாடு ரூபா. 37,500 ஒரு பங்கு ரூபா. 5,500

  • ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

    – டீன் பைரூஸ் காத்தான்குடியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்வுகள் நேற்று 20-10-2012 சனிக்கிழமை பி.ப. 2:30 மணியிலிருந்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

  • கரையொதுங்கிய கடற்பிராணிகளின் ‘புலால்’ துர்வாடை: இப்பகுதிகளில் தனித்துச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!

    – எமது விஷேட செய்தியாளர் கடந்த நான்கு நாட்களாக காத்தான்குடி கடற்கரையில் கரையொதிங்கிவரும் உயிரிழந்த கடற்பிராணிகளின் புலால் துர்வாடைகளால் இரவு நேரங்களில் மனித இனமல்லாத வேறு இனத்தின் நடமாட்டங்கள் இப்பகுதிகளில் இருந்துவருவதாக பலர் தெரிவித்து வருகின்றனர். கெட்ட ஜின், செய்த்தான் போன்ற இனங்களின் நடமாட்டங்களை நேரடியாக சந்தித்தவர்கள் இச்சம்பவங்களின் பின்னர் தற்பொழுது காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.

  • கல்லடிப் பாலம் இன்றிரவு மூடப்படுகிறது!

    – டீன் பைரூஸ் துரித அபிவிருத்தியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய கல்லடிப் பாலத்தின்  வேலைகள் காரணமாக இன்றிரவு (20-10-2012)  10 மணி தொடக்கம் 21-10-2012 காலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும்.

←Previous Page
1 … 1,201 1,202 1,203 1,204 1,205 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar