-
மறைந்த சொந்தங்களைத் தரிசிக்க மக்பறாவில்….
இந்நன்நாளில் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு, அதிகளவான மக்கள் தங்ளைவிட்டும் மறைந்து சென்ற உற்றார், உறவினர், நண்பர்களுக்காக மக்பறாக்களில் துஆக்களிலிலும் ஸலாம் கூறுவதிலும் ஈடுபட்டனர்.
-
புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகை
-டீன் பைரூஸ் புதிதாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் அல் அக்ஸா புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று முதன்முறையாக திறந்த வெளியில் ஈதுல் அல்ஹா தொழுகை இடம்பெற்றது.
-
இன்று காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற ‘ஈதுல் அல்ஹா’ பெருநாள் தொழுகை
-நமது செய்தியாளர் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் வருடாவருடம் செயற்படுத்தப்பட்டு வரும் பொதுத்திடல் பெருநாள் தொழுகை, இம்முறையும் ‘அல்ஹா ஹஜ்’ பெருநாள் தொழுகை இன்று (27-10-2012) காலை 06:30 மணிக்கு கடற்கரை அன்வர் மஸ்ஜித் முன்றலில் இடம்பெற்றது.
-
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘இஸ்லாமிய வரலாற்றில் ஒரு குடும்பம் செய்த தியாகம் கியாமநாள் வரை ‘ஹஜ்’ என்ற புனித அமலினால் நினைவூட்டப்படுகின்றது. இந் நன்நாளில் புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்’. அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பிரதியமைச்சர், கொழும்பு
-
முன்னாள் கி.மாகாணசபை உறுப்பினர் பரீட் அவர்களின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
‘தியாகத் திருநாளாம் புனித ‘ஈதுல் அல்ஹா’ ஹஜ் பெருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய இதயங்களுக்கும் எனது ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்’ KLM. பரீட் JP. முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர்.
-
பெருநாளை முன்னிட்டு அதிகளவான மக்கள் வருகை
– எமது செய்தியாளர் இன்று இலங்கையில் கொண்டாடப்படவிருக்கும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அதிகமான காத்தான்குடி மக்களும் அவர்களது நண்பர்களும் உறவினர்களும் நேற்றிலிருந்து வருகை தந்திருந்தனர்.
-
ஹஜ்ஜுப் பெருநாள் சனிக்கிழமையாகும் : அ. இ. ஜ. உலமா அறிவிப்பு
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவும், பெரிய பள்ளி வாசலும் இணைந்து எடுத்த முடிவின் பிரகாரம் இவ்வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தினம் சனிக்கிழமையாகும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மீண்டும் அறிவித்துக்கொள்கிறது.
-
தமிழ் உட்பட 20 இலட்சம் புனித குர்ஆன் பிரதிகள் ஹாஜிகளுக்கு விநியோகம்
புனித ஹாஜிகளுக்கு வழங்கவென தமிழ் உட்பட பல மொழிகளில் மொழியுரை செய்யப்பட்ட இருபது இலட்சம் புனித குர்ஆன் பிரதிகள் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டன. மதீனா நகரிலுள்ள மன்னர் பஹ்த் அச்சகத்தில் இக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்பட்டன.
-
பட்ட மரம் சாய்ந்ததடா….
– நமது செய்தியாளர் மரம் மண்ணுலகுக்கு ஒரு வரம். மனிதா்கள் காடுகளை வெட்டி வீடுகள் அமைக்கும் போது தான் இயற்கையின் சூழல் மாற்ற மடைகின்றுது.
-
திவிநெகும நிகழ்ச்சித் திட்டம்
-டீன் பைரூஸ் திவிநெகும நிகழ்சித்திட்டத்தின் 4ம் கட்ட நிகழ்வு புதிய காத்தான்குடி 167 சீ கிராம சேவையாளா் பிரிவில் சமூா்த்தி உத்தியோகஸ்தா் எம்.எஸ்.எம்.அப்துழ்ழாஹ் தலைமையில் 25.10.2012.வியாழன் காலை 09.10 க்கு இடம் பெற்றது.
-
பிரிட்டன் வீசா விண்ணப்பத்துக்கு புதிய நடைமுறை! கொழும்பு தூதரகம் அறிவிப்பு
கொழும்பில் கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னை பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வீசா விண்ணப்பங்களில் அநேகமானவை 2008 ம் ஆண்டிலிருந்து சென்னையிலேயே பரிசீலனை செய்யப்பட்டன.