-
மட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டு, மீள வரையறை செய்யப்படுகின்ற நடவடிக்கை அப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள சில தமிழ்ப் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
-
என் மகளை கொன்ற சவூதியின் ஒரு செப்பு காசுகூட வேண்டாம்
ரிசானாவின் தாயார் கவலை! எனது மகளை படுகொலை செய்த சவூதி அரேபியாவிடமிருந்து எனக்கு ஒரு செப்புக் காசு கூட வேண்டாம் என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் பணத்தைப் பெற்று ரிசானாவை அகெளரவப்படுத்தாதீர்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.
-
ஹாபிழ் MR.முகம்மது றிஸ்கான் காத்தான்குடி சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்
– டீன் பைரூஸ். சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடம் பெற்ற அல்ஹாபிழ் MR. முகம்மது றிஸ்கான் 18.01.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
-
பாக். பிரதமரின் ஊழல் வழக்கை விசாரித்த பொலிஸ் அதிகாரி மரணம்
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
-
மீன் ஏற்றுமதித் துறைமுகம் இன்று திறப்பு
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதித் துறைமுகமான திக்கோவிட்ட மீன் ஏற்றுமதித் துறைமுகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.
-
ரிஸானாவின் வீட்டுக்கு அமைச்சர்கள் குழு இன்று விஜயம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் இல்லத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழு இன்று வெள்ளிக் கிழமை (18) மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புக்கமைய இந்தக்குழு இன்று விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிய வருகிறது.
-
தௌஹீத் உலமாக்களுக்கான விஷேட தர்பியா நிகழ்வு
MACA. நாஸர் ஜமாலி காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினால் கடந்த 16-01-2013 புதன்கிழமை இரவு 8.45 மணி அளவில் தௌஹீத் உலமாக்களுக்கான விஷேட தர்பியா நிகழ்வொன்று மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளி வாயலில் நடைபெற்றது.
-
மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால் துண்டுப்பிரசுரம்!
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் அனைவரும் நாளை 18-01-2013 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து அலுவலகங்கள் , பாடசாலைகள், வியாபார நிலையங்கள் என்பவற்றை புறக்கணித்து போக்குவரத்து
-
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா
டீன் பைரூஸ். காத்தான்குடி மண்ணுக்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கும் அல்மனார் அறிவியற் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 18.01.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பி்.ப. 6.00 மணிக்கு அதன் தலைவா் அல்ஹாஜ் கலாநிதி அஷ்ஷெய்ஹ் UL. அஹ்மத் அஷ்ரப் (PhD Assistant Professor – Najran University KSA ) அவா்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
தேசிய மீலாத் விழா தொடர்பில் கலந்துரையாடல்
2013ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை இம்முறை திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவில் கொண்டடுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.
-
புத்துயிரளிக்கப்பட்ட பஸ் வண்டியை ஜனாதிபதி பாரவையிட்டார்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட பஸ் வண்டிகளை நீர்கொழும்பு பஸ் டிப்போ பொறியியலாளர்கள் மறுசீரமைத்துள்ளனர்.
-
சகோதரி றிஸானாவின் மரண தண்டனையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்
கடந்த 2013-01-09 புதன் கிழமை சஊதி அரேபியாவில் சகோதரி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுக்கவும் பல விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் என்றவகையில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில: