-
அப்சல் குருவை 8 பேர் முன்னிலையில் 8 நிமிடம் தூக்கிலிட்டுள்ளனர்
-OIT அப்சல் குருவை 8 பேர் முன்னிலையில் 8 நிமிடங்கள் தூக்கிலிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தூக்கிலிடும் முன்பு அவன் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறை அதிகாரி தெரிவித்தார்.
-
இந்தியாவில் மற்றுமொரு கற்பழிப்பு சம்பவம்: காதலன் உள்பட 12 பேர் கும்பல் 3 நாட்கள் கற்பழிப்பு
-OIT இந்தியா, தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை அவரது காதலன் ஏமாற்றி கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று அங்கு ஹோட்டலில் தங்க வைத்து மயக்கமருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவன் தவிர மேலும் 11 பேரும் இந்த பயங்கரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
-
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!
-OIT அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது மீடியாக்கள் மூலம் தான் தங்களுக்கு தெரிய வந்தது என்று அவருடயை குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
-
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதி!
-OIT இலங்கையில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
-
கடந்த வருடம் 6,18,053 சாரதி அடையாள அட்டைகள் வினியோகம்!
போக்குவரத்துத் திணைக்களம் கடந்த வருடத்தில் மாத்திரம் 6,18,053 சாரதி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்கா தெரிவிக்கிறார்.
-
மாட்டிறைச்சிக்கு பதிலாக பன்றி, குதிரை இறைச்சி விநியோகம்: மற்றுமொரு அதிர்ச்சியில் பிரித்தானிய அரசு!
-MJ குறிப்பிடப்பட்ட இறைச்சி வகைகளில் குறிப்பிடப்படாத வேறு பிராணிகளின் இறைச்சிகளை கலந்து அல்லது திணித்து உணவுப் பண்டங்களை வழங்கும் ஏமாற்று உணவு நிறுவனங்களால் தற்பொழுது பிரித்தானிய அரசும் மக்களும் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
-
கதுருவெலயை நோக்கி பயனித்த லொறி ஒன்று மன்னம்பிட்டிய பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது
ஏ.எல்.எம்.தாஹிர் கதுருவெலயை நோக்கி பயனித்த எல்(க)ப் லொறி ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் மன்னம்பிட்டிய பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
-
‘மொனாஸ் அகடமி’யின் சுதந்திர தின கொண்டாட்டம்
காத்தான்குடி MONASH ENGLISH ACADEMY, 65 ஆவது சுதந்திர தினத்தை, காத்தான்குடி வயோதிபர் இல்லத்தில் தமது மாணவர்களுடன் கொண்டாடியது.
-
அல்- அக்ஸா வடிவில் காத்தான்குடியில் பாரிய பள்ளிவாசல்!
காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்க செலவில் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாசல் வடிவில் மிகப் பெரிய பள்ளிவாசல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த பள்ளிவாசலின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் ஊடாக 87 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்துள்ளது.
-
முறையற்ற வகையில் மாணவர்களிடம் பணம் அறவிடும் அதிபர், ஆசிரியர்களை உடன் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
இரண்டு வாரகாலத்துள் சுற்றறிக்கை முறையற்ற விதத்தில் மாணவர்களிடம் பணம் அறவிடும் அதிபர் அல்லது ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சுற்றறிக்கையொன்றை இரண்டு வாரத்திற்குள் வெளியிட தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
ஜனாதிபதி மஹிந்தவுக்கான எதிர்ப்பால் டெல்லிக்குப் போகாமல் புத்தகயா சென்று வழிபாடு
– OIT மதிமுகவினர் டெல்லியில் போராட்டம் நடத்தியதை அடுத்து டெல்லி செல்லாமல் பிளானை மாற்றி புத்தகயா சென்று வழிபட்டார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
-
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்: 94 பேர் பலி
இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளு) தொற்று நோயினால் 94 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.