-
வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் அதிபர் திரு. ஆர். கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
-
வாய்மூடிய பொம்மை முஸ்லீம் சமூகத் தலைவர்களும் இலங்கையின் இன்றைய முஸ்லீம்களின் அவல நிலையும்
-MJ ஹலால் எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 6 மாதங்களுக்குள் ஹலால் முத்திரைக்கு இலங்கையில் ஆபத்து ஏற்பட்டு, இன்று முஸ்லிம்களின் உரிமைகளில் ஒன்று களையப்பட்டிருக்கின்றது.
-
றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு என்பன நாளை (01.03.2013) காத்தான்குடியில் வெளியிடப்படவுள்ளன
காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்படும் இந்த நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபவம் நாளை (01.03.2013) வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு பெண்களுக்கும், இரவு 8 மணிக்கு ஆண்களுக்குமாக இந்த வெளியீட்டு வைபவம் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்த்தபா தெரிவித்தார்.
-
உடல் ஆரோக்கியமானவர்களே விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்
விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பாக மெய்வல்லுனர் போட்டி களில் பங்குபற்றும் மாணவ, மாணவியர் அவர்கள் அப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன்னர் அவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்து உடல்நிலை சீராக இருக்கிறது என்ற மருத்துவ சான்றிதழை பெறுவது அவசியம் என்றும் அதன் பின்னரே பாடசாலை மாணவ, மாணவியர் விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
-
‘தேவையற்ற தீர்மானம்’ – ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ளார்.
-
சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் மாநகர மேயரின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானக் காணி சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் இன்று (27.02.2013) முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது.
-
‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சிக்கு சமாந்தரமாக பொலநறுவையில் திறக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டடங்களின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சர் ஆலோசனை
பழுளுல்லாஹ் பர்ஹான் ‘தேசத்திற்கு மகுடம்’ அபிவிருத்தி கண்காட்சிக்கு சமாந்தரமாக பொலநறுவையில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் நிர்மாண வேலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி ஆராய்வதற்காக நீதியமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் அங்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
-
உறவுகளை பேணுதல்
ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில் அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது. முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின் கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
-
ஜம்இய்யதுல் உலமா சபையின் சேவைகளை குறைத்து மதிப்பிட முடியாது
கலாநிதி ஹஸன் மெளலானா அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இந்நாட்டுக்கும், இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் ஆற்றிவரும் சேவைகளை எவரும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்று ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
சமுர்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர்களின் 15 ஆவது வருடாந்த மாநாடு
சமுர்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர்;களின் 15 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இன்று (26) நடைபெற்றது.
-
கொழும்பில் நடைபெற்ற நிறைவானதோர் நூல் வெளியீட்டு விழா
கலாபூஷணம் புன்னியாமீனின் ‘ஓர் ஈர நெஞ்சனனின் உலவியல் உலா ‘ உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப்பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய கலாபூஷணம் புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனனின் உளவியல் உலா “நூல் வெளியீட்டுவிழா கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
-
ஹலால் சான்றிதழை அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டும் : அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா
ஹலால் சான்றிதழ் தொடர்பில் எற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும் வகையில் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.