Category: Your Kattankudy
-
யார் இந்த காசெம் சுலேமானீ?
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் காசெம் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.
-
“12.5 வீத வாக்குகளை பெற்றால் மட்டுமே பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கு தகுதி”
அரசியல் கட்சிகள் தேர்தல் ஒன்றில் மாவட்ட மட்டத்தில் 12.5 வீதமான வாக்குகளை பெற்றால் மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவங்களை பெற முடியுமான வகையிலேயே அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த யோசனை பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
-
தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது: அலி கொமைனி
ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.
-
உடுதும்புற பள்ளியில் சிலை வைக்கப்பட்டதுக்கு யார் மீது பொறுப்பு கூறுவது ?
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள உடுகும்புற பிரதேச நூர் ஜும்மாஹ் மஸ்ஜித்துக்கு சொந்தமான காணியில் கடந்த 29.12.2019 அதிகாலை இரண்டு மணிக்கு புத்தர் சிலையொன்று இமாம் தொழுகை நடாத்துகின்ற பள்ளியின் மிஹ்ராபுக்கு பின்புறமாக வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு மூன்று பாதைகள் குறுக்கிடுகின்ற முச்சந்தியாகும். அந்த இடத்தில் அவசியம் புத்தர் சிலையை வைப்பதென்றால் உத்தியோகபூர்வமாக அந்த காணிக்கு சொந்தக்காரர்களான பள்ளிவாசல் நிருவாக சபையிடம் அனுமதியை பெற்று பகல் நேரத்தில் வைத்திருக்கலாம்.
-
கல்முனை மாநகர சபையில் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு
அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன் கல்முனை மாநகர சபையில் அரச சேவை உத்தியோகத்தர்களின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பொறியியலாளர் ரி.சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மிருக வைத்திய அதிகாரி வட்டப்பொல, சிரேஷ்ட உத்தியோகத்தர்களான எம்.எம்.ஜௌபர், எம்.எம்.இஸ்மாயில், புவனேந்திர ராஜா, குணரட்ணம், ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த தலைமை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
-
குறுச்செய்தியால் 31 இலட்சம் ரூபாவை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பம் !
பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி பணியாற்றி வரும் நிலையில் தாயும் , மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள்.
-
ரிஷாட் பதியுதீனிடம் CID வாக்குமூலம் பதிவு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவரிடம் இன்று (30) முற்பகல் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
காத்தான்குடி மத்திய கல்லூரி உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் – 2019
Bio Old syllabus 2AB – 11-N.Najaf Ahamed 2AC – 46- HMF.Haseena 3 B – 60- MM.Fazath katheeja Bio New Syllabus 2AB -11-BF.NASEEFA 2AB -13- MMM.MUFARIS ABC -22- MAF.JEZA 2AC -30- ALM.AZAM 2BC -33- AN.NAZEEMUL HAQ 2BC -49- MAF.ASNA 2BC -53- TF.THIKRA 2BC -54 – MF.FATHHIN MAZA
-
வைத்தியசாலையில் வைத்து ராஜித கைது
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் அவர் நாரஹென்பிட்டி லங்கா ஹொஸ்பிட்டல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
-
“மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும்”
இம்முறை பொதுத் தேர்தலை நடத்த 650 கோடி தொடக்கம் 700 கோடி ரூபாய்கள் தேவைப்படும் எனவும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பே இந்த செலவுகளுக்கு காரணம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கத்தில் இருக்கின்றார் என்பது அறிய முடிகின்றது.
-
ராஜிதவின் இல்லத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஆர்.பி. நெலும்தெனிய பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இன்றைய தினம் அவரை கைதுசெய்ய விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை
இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.