Category Archives: Your Kattankudy

‘லியனல் மெஸ்ஸி’ இன் 200வது கோல்

உலக உதைப்பந்தாட்டக் கழகங்களுள் முன்னணிக் கழகமான  Barcelona விற்கும் மற்றும் Valencia  ஆகிய அணிகளுக்கிடையில் நேற்றிரவு நடைபெற்ற லாலிகா (La Liga) ஸ்பெயின் லீக் போட்டியில் ஐந்து கோல்கள்  இட்டு  Barcelona வெற்றியீட்டிருந்தது.  உலகின் முன்னணி உதைப்பந்தாட்ட விருது பெற்ற வீரரும் ஆர்ஜண்டீனாவின் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘லியனல் மெஸ்ஸி’  (Lionel Messi) நான்கு கோல்களை இப்போட்டியின் போது தனது அணிக்காக பெற்றுக்கொடுத்ததன் மூலம் இந்த லீக்கில் 200வது கோல் மைல்கல்லையும் தொட்டார். மெஸ்ஸியின் மகிழ்ச்சியின் ஓரு ‘கிளிக்’.

-yourkattankudy/spotrs.

ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் சிரியாவின் துறைமுகத்தில்

ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் சுயஸ்கால்வாய்  (Suez Canal ) ஊடாக சிரியாவின் டார்டோஸ் துறைமுகத்தில் (port of Tartous) வந்து சேர்ந்திருப்பதாக உலக செய்தி நிறுவனங்கள் நேற்றிரவு செய்து வெளியிட்டிருந்தன. இத்தகவலை ஈரானின் மாநில ஊடகம்  மற்றும் The Mehr News Agency   ஆகியவை உறுதிப்படுத்தியிருந்தன.

கனடா ஆசைகாட்டி 269 பேர் டோஹோவில் கைது…

இலங்கையிலிருந்து 260 க்கும் மேற்பட்டோரை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு  டோஹோ மற்றும் மாலிக்கு கொண்டு சென்று கைவிட்ட பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவுக்கு தொழில் வாய்ப்பினைத் பெற்றுத் தருவதாகக் கூறியே சுமார் 269 பேரை ஆபிரிக்க நாடான டோஹோவுக்கும் மாலிக்கும் அனுப்பியுள்ளார். குறித்த நபர் பற்றிய இரகசிய தகவலென்றின் மூலம் சந்தேக நபரைப் பின்தொடர்ந்த புலனாய்வு பிரிவினர் வெள்ளவத்தையிலுள்ள விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர். Continue reading கனடா ஆசைகாட்டி 269 பேர் டோஹோவில் கைது…

நேற்றைய CRICKET நிமிடங்கள்…

பாகிஸ்தான் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று Dubai யில் நடந்த 3வது ஒருநாள் தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்த  துடுப்பாட்டத்தின் ஓர் ‘கிளிக்’.

PIETERSEN – COOK (C) ஆகியோர்    170 ஆரம்ப இணைப்பாட்டத்தைப் (Duo Shared) பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

YourKattankudy/Sports.

பள்ளிவாயல்கள்-Update

அஸ்ஸலாமு அலைக்கும்

பள்ளிவாயல்கள் பகுதி புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

நன்றி.

-Your Kattankudy

TNA – SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை!

எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை?

இவர்களா அரசாங்கத்துடன் பேசி தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறார்கள் ?

னப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இதுவரை தமக்கிடையே ஒரு நிலையான நிலைப்பாட்டிற்கோ அல்லது ஒரு இறுதியான தீர்மானத்திற்கோ வரமுடியாத நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தை எவ்வாறு ஒரு முடிவிற்கு வரமுடியும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. Continue reading TNA – SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை!

தேசத்திற்கான மகுடம்-2012

(படங்கள் இணைப்பு)

இவ்வருடத்திற்கான ‘தேசத்திற்கான மகுடம்’ (Dayata Kirulla) கண்காட்சி அனுராதபுர மாவட்டத்தின்  நட்சதுவ-ஓயன்மடுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கண்காட்சிக்காக இப்பகுதியின் ஐநூறு ஏக்கர் விவசாய காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பெப்ரவரி 4 தொடக்கம் பெப்ரவரி 12ம் திகதிவரை எட்டு நாட்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியை முப்பத்தைந்து இலட்சம் மக்கள் கண்டுகளித்தனர்.  அடுத்த வருடத்திற்கான ‘தேசத்திற்கான மகுடம்’ கண்காட்சி கிழக்கு  மாகாணத்தில் அம்பாறையில் இடம் பெற இருப்பதாக அறியப்படுகிறது. Continue reading தேசத்திற்கான மகுடம்-2012

UPDATES

அஸ்ஸலாமு அலைக்கும்.

உலக விளையாட்டு பொது தகவல்கள் விளையாட்டுக் கழகங்கள் பகுதியில் புதிப்பிக்கப்படுகின்றன.

மேலும் அறிவகம் பகுதியும்  புதிப்பிக்கப்பட்டு வருகின்றன.

நன்றி.

என்றும் உங்களுடன்

உங்கள் காத்தான்குடி.

எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தை குறைகூறுவது நல்லதல்ல

நாட்டில் சில தீய சக்திகளின் தூண்டுதலின் பேரில் இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்களை எமது நாட்டில், மக்களால் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கும் ஜே.வி.பி. போன்ற மக்கள் ஆதரவற்ற கட்சிகளும் நாட்டிற்கு என்னவானாலும் பரவாயில்லை தனது தலைமைத்துவ பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெ ன்ற ஆசையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சுயநல நோக்குடன் மேற்கொண்டு வரும் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆதரவாளர்களும் ஊக்குவிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் இப்போது வலுவிழந்து வருகின்றன.

எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது. உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை எதிர்பாராத அளவிற்கு திடீரென்று அதிகரித்ததே இதற்கான உண்மைக்காரணம் என்பதை இப் போது மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். உலக நாடுகளுக்கு வழங்கும் எரிபொருளில் ஐந்தில் ஒரு பகுதியை ஈரானே உற்பத்தி செய்து விநி யோகிக்கின்றது. Continue reading எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தை குறைகூறுவது நல்லதல்ல

பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதை முற்று முழுதாக ஒழித்துக்கட்டப்படும்

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தேர்வுசெய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில்களை கொமர்ஷல் வங்கி வழங்கியுள்ளது. ஆறாவது வருடமாக இவ்வருடமும் தேர்வுசெய்யப்பட்ட முகாமைத்துவ மற்றும் மருத்துவபீடங்களைச் சேர்ந்த 25 பேருக்கு நேற்று புலமைப் பரிசில் வழங்கப்பட் டது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் கொமர்ஷல் வங்கியின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் இப்புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தனர். இம்மாணவர்களுக்கு மடிக்கணனிகளும் கொமர்ஷல் வங்கியால் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு கொழும்பு 2ல் உள்ள கொமர்ஷல் வங்கியின் கேட்போர்கூடத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. Continue reading பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதை முற்று முழுதாக ஒழித்துக்கட்டப்படும்