Category: Your Kattankudy
-
முஸ்லிம் சமூகத்தை ஹிஸ்புல்லா காட்டிக்கொடுத்து விட்டார் முஜீபுர் ரஹ்மான்
-Tamilmirror தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் பொய்யான அறிக்கையினை ஊடகங்களுக்கு வழங்கியதன் மூலம் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து விட்டார் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
-
‘ரியல் மெட்ரிட்’ வெளியே! அதிகமான விளையாட்டு இரசிகர்கள் ஏமாற்றம்!
‘பெனால்டி’ உதைகளில் நம்பிக்கை நட்சத்திரங்களான ரொனால்டோ, ககா, ராமோஸ் ஆகியோர் கோல்கள் இடவில்லை! -MJ UEFA கிண்ண இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஐரோப்பிய கனவு கழகமாகக் கருதப்படும் ரியல் மெட்ரிட் (Real Madrid) பேயர்ன் மியுனிச் (Bayen Munich) அணியுடன் இன்றிரவு நடைபெற்ற போட்டியில் பெனால்டி உதைகள் மூலமான கோல் அடிப்படையில் தோல்வியைத் தழுவியதன் மூலம் அதிகமான உலக இரசிகர்களின் கனவுகளையும் கலைத்துச் சென்றுள்ளது.
-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.
CMM. அமானி கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலை அடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுத்த அறிவித்தல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகிறது.
-
தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய
ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார்.
-
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்; நோன்பு பிரார்த்தனைக்கு ஜம்இய்யத்துல் உலமா அழைப்பு
கடந்த வாரம் தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்காக நாளை வியாழக்கிழமை 26ஆம் திகதி நோன்பு நோற்கும் படியும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சனியன்று கூடுகிறது! முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தம்புள்ளை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தம்புள்ளை பிரச்சினையை தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வராத நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் பெரும்பாலும் கேள்வி எழுப்பப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
கிழக்கில் 327 பட்டதாரி, டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம்
கிழக்கு மாகாண பட்டதாரி மற்றும் டிப்ளோமா ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று 24ம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
-
UEFA – ‘பார்சிலோனா’ அதிர்ச்சி தோல்வி! இறுதிப்போட்டிக்குத் ‘செல்சி’ தெரிவு
-MJ நான்கு முறை UEFA உலக கழக சம்பியன் பட்டம் வென்ற உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டமைந்த ‘பாசிலோனா’ நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ‘செல்சி’யுடன் விளையாடி மொத்தகோல் (Aggregate)அடிப்படை விதிக்கமைய அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இதனால் இவ்வருடத்துக்கான UEFA இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துள்ளது.
-
தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்பும் எழும் சந்தேகங்களும்
தம்புள்ளை பள்ளிவாயலை அகற்றக்கோரி புதுவகையான செய்திகள் தினம் தினம் ஒன்றுக்கு ஒன்று மாற்றமாக வெளியாகி வருகின்ற நிலையில், இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகங்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.
-
ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்
தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ்; ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழா தலைமைலான குழு தம்புள இனாமலுவ மகாநாயக்க தேரரை சந்திப்பு! சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு..
–ஜூனைட் எம். பஹ்த்– கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்ற தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டாத இழுபறி நிலையில் இருந்த பள்ளிவாசல் விவகாரம் நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் துரித முயட்சினால் தம்புள்ள மகா நாயக்க தேரர் அவர்களோடு பல மணி நேர பேச்சுவார்த்தைகள் தம்புள்ள விகாரயில் இடம்பெற்றது.
-
கொமர்ஷல் வங்கியின் இஸ்லாமிய வங்கிச் சேவை
தனியார் வங்கி முன்னோடிகளில் ஒன்றான கொமர்ஷல் வங்கி அல் அதாலாஹ் எனும் ஷரிஆ இஸ்லாமிய வங்கிச் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு முன்வைத்துள்ளது. ‘வதியாத்தமான்’ நடைமுறைக் கணக்குகள், முதாரபாஹ் சேமிப்புக் கணக்குகள் மற்றும் தவணை முதலீடுகள் முராபஹா, முஷாரகா, டிமினிசிங் முஷாரகா, இஜாரா லீசிங் மற்றும் இறக்குமதிக்கான நிதிச் சேவைகள் என்பனவே வங்கி இஸ்லாமிய வங்கிச் சேவை மூலம் வழங்கும் சேவைகளாகும்.