Category: Your Kattankudy
-
இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படவில்லை!
போர் குற்றம் தொடர்பிலான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் இலங்கை கட்டாயம் முகங்கொடுக்க வேண்டும் என சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலையாகிய ஒரு நாளில் பீபீசி செய்திச் சேவைக்கு அவர் அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் சில தலைவர்கள் போர் குற்றம் புரிந்தது போல் தங்களுடைய முகங்களை மறைத்துக் கொள்வதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
-
சத்துருக்கொண்டானில் விபத்து இரு ஏறாவூர் சகோதரர்கள் ஸ்தலத்திலேயே பலி!
மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் உள்ள சத்துருக்கொண்டான் எனும் இடத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். ஏறாவூர் சத்தாம் ஹுசைன் கிராம வாசிகளான அப்துல் சமத் வயது 24 மற்றும் அவரது சகோதரர் நாகூர் முஹம்மத் சாலி வயது 34 ஆகியோரே பலியானவர்களாவர்.
-
கட்டார் ‘பேர்ள்’ நிறுவனத்தில் ஜனாதிபதி
கட்டார் நாட்டில் நிர்மானத்துறையில் மிகப்பிரபல்யம் வாயந்த நிறுவனமான பேர்ள் நிறுவனக் கட்டடத் தொகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்து பார்வையிட்டார். இங்கு காணப்பட்ட பல புதிய தொழில் நுட்பங்கள் குறித்து அங்கிருந்த நிபுணர்களுடன் ஜனாதிபதி அலவலாவினார். ஏ.எச்.எம்.பௌசி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ரவூப் ஹகீம் ரிஷாரட் பதியதீன் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி செயலாளர் மற்றும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் உட்படப் பலர் ஜனாதிபதியூடன் கலந்துகொண்டனர்.
-
தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடம்
கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் 158 புள்ளிகளை பெற்று முதலிடத்தினை பெற்றள்ளது. அத்துடன் 136 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டம் இரண்டாமிடத்தையும் 130 புள்ளிகளை பெற்று கல்முனை கல்வி மாவட்டம் மூன்றாமிடத்தையம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மொழி தினப்போட்டி 20, 21 திகதிகளில் திருகோணமலை உவர் மலை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது.
-
மும்மொழி வலயங்களாக 30 இடங்கள் அடையாளம்
‘குறிப்பாக புகையிரத நிலையங்களில் மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மேற்கொள்வதற்கும், பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் அல்லது தமிழ் பேசக்கூடிய சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங் களிலும் மொழிப் பிரச்சினை களைக் கையாள்வதற்கு சமூக மேம்பாட்டு உதவுனர்கள் நியமிக்கப்படவிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணய கார தெரிவித்தார். கூடிய விரைவில் அனைத்து…
-
சரத்பொன்சேகா தனது குடும்பத்துடன்
-MMS நேற்று விடுதலையான முன்னால் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சுமார் 3 வருடங்களின் பின் கொழும்பிலுள்ள தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உணவு பரிமாரும் ஓர் காட்சி.
-
கடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு
இதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலத்தினாலான புத்தகங்கள் அடுத்தவாரம் வெளியீடு! இதுவரையில் 60 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களின் சிறப்பு தன்மை, குறைவான விலை மற்றும் அதன் மீது மாணவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியன காரணமாக இவற்றை அநேகமானோர் விரும்பி வாங்குவதனை காணக் கூடியதாகவுள்ளது. கல்வியமைச்சு நடந்து முடிந்த க. பொ. த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சை வினாத்தாள்களை விடைகளுடன் புத்தகங்களாக அச்சிட்டு விற்பனைக்கு வைத்துள்ளது. இப்புத்தகங்களை…
-
நிபந்தனையற்ற முறையில் இலங்கைக்கு கட்டார் உதவி புரியும்!
இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைவதைக் காண்பதே கட்டார் ராஜ்ஜியத்தின் இலக்கு என்று அந்நாட்டு அமீர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஹமாத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இலங்கையின் துரித அபிவிருத்திக்காக ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள் இன்றி தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு கட்டார் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவர்கள் மேற்கண்டவாறு…
-
இன்னும் 10 வருடங்கள் சிறை வைத்திருந்தாலும் தைரியம் இழந்திருக்க மாட்டேன்: பொன்சேகா
அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது’ என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சற்று முன்னர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா,
-
சிறையில் தனக்கு ஏற்பட்ட வேதனைகள் ஏனையோருக்கும் ஏற்பட இடமளிக்காத தலைவர்
மனித சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் ஓர் உன்னத தலைவராக விளங்கிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலகட்டத் தில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்றைய அரசாங் கத்தினால் மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மஹிந்த ராஜபக்ஷ அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் சிறை வைக்கப்பட்டார். ஒரு சிறிய அறையில் அவர் தனியாக தடுத்து…
-
மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்திகளை பார்வையிட கிழக்குமாகாண பணிப்பாளர் விஜயம்
-MMS மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளை பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.லியனகே நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.