Category: Your Kattankudy
-
கிறிஸ் கெய்ல் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்!
-MJ மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்கெய்ல் இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய கிரிக்கட் சபையினால் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார். 32 வயதையுடைய கெய்ல் 1999ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். இறுதியாக 2011ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (World Cup) விளையாடி இருந்தார். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபைக்கும் கெய்லுக்கும் இடையே மனக்கசப்புக்கள் ஏற்பட்டு வந்திருக்கும் இந்நிலையில் கெயில் மீண்டும் விளையாட அழைக்கப்பட்டிருக்கின்றார்.…
-
தரம் குறைந்த மொன்டிசூரி பாலர் பாடசாலைகள் செயற்படுவதை அரசு தடைசெய்ய வேண்டும்
பாலர் பாடசாலைகளை நாம் பொதுவாக மொன்டிசூரி பாட சாலைகள் என்றே அழைக்கின்றோம். மரியா மொன்டிசூரி அம்மையார் பாலர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற் படுத்தாமல் அவர்களுக்கு பூரண சுதந்திரத்தையும் அவர்கள் விரும் பியவற்றை செய்வதற்கான அனுமதியை சில கட்டுப்பாடுகளுடன் கொடுக்கும் மொன்டிசூரி கல்வியை 1907 ஆம் ஆண்டில் ஆரம் பித்தார். இவர் பாலர்களையும் சுற்றாடலுடனான தனது அனுபவத்தை யும் மையமாக வைத்தே இந்த மொன்டிசூரி கல்விமுறையை நெறிப்படுத்தினார். 1911 ஆம் ஆண்டில் மொன்டிசூரி கல்விமுறை அமெரிக்காவில் பிரபல்யம் பெற்றிருந்தது.…
-
வாகண விபத்தில் சாய்ந்தமருது இளைஞர் பலி
-MMS சாய்ந்தமருது ‘பெஷன் ஹவுஸ்’ உரிமையாளர் முஹம்மது றியாஸ் எனும் 29 வயதுடைய வாலிபர் வாகன விபத்தில் சிக்கி இன்று மாலை அகால மரணமானார். கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நிந்தவூர் – ஒலுவில் பிரதான வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது லொறி ஒன்றுடன் மோதுண்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் வழியிலே மரணமடைந்துள்ளார். இவர் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவருமாவார். பொலிசார் மேலதிக விசாரணைகளை…
-
லண்டனில் ஜனாதிபதி மஹிந்த: மகத்தான வரவேற்பு!
-MMS எலிசபெத் மஹாராணியின் 60வது முடிக்குரிய அரசாட்சி கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகத் தலைவர்கள் லண்டனை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஸவும் இன்று லண்டன் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு லண்டனிலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகள், பிரித்தாணிய பிரமுகர்கள் உட்பட பலர் மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர்.
-
எலிசபெத் மஹாராணியின் வைரவிழாக் கொண்டாட்டம்: கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வம்! (படங்கள்)
-MJ அறுபது வருட (1952-2012) எலிசபெத் மகாராணியின் முடியாட்சியை கௌரவிக்கும் முகமாக வைரவிழாக் கொண்டாட்டங்கள் பிரித்தாணியாவில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. வழமையை விட 4 நாட்கள் பொது விடுமுறை இந்நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்டிருக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தேம்ஸ் நதிக்கரையில் ஆரம்பமான மகாராணியின் படகுச்சவாரியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையிலும் நின்று கண்டுகளித்து தமது ஆதரவுக்கரங்ளை இராணிக்கு வழங்கி கௌரவித்தனர்.
-
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மட்டக்களப்பில்
மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இன்று (04) திங்கட்கிழமை காலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இவ் விஜயத்தின் போது, கடந்த வருட நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களைப் பார்வையிடுவதுடன் கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களையும் பார்வையிடவுள்ளார்.
-
நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி! தொடர் சமநிலையில் முடிவு
-MMS நேற்று நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றிகொண்டது. இதனால் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் முடிவடைந்த இத்தொடரின் கிண்ணத்தை இருஅணித் தலைவர்களும் பெற்றுகொள்கின்றனர்.
-
நைஜீரியாவின் விமானம் விபத்து: பயணித்த அனைவரும் பலி!
-MMS நைஜீரியாவின் ‘டனா ‘ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் நேற்று நைஜீரியாவில் வெடித்து நொறுங்கியது. அபுஜாவில் இருந்து லாகோஸ் நோக்கிப் பயணித்த இவ்விமானத்தில் 153பேர் இருந்தனர். பெரும்பாலானோரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக நைஜீரியாவின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்விமானத்தில் பயணித்த 153 பேரும் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விமானத்தின் சிதைவுகளை அகற்றி கறுப்புப் பெட்டியைத் தேடும் நடவடிக்கையும் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
-
இலங்கையில் அல் கய்தா புரளி!
-SHM இஸ்ரேல் பிரதிநிதிகள் இலங்கை வந்து சென்ற பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் மீதான ஓர் அடக்குமுறை மேற்கொள்ளப்படுகின்றதா என சந்தேகிக்கும் அளவுக்கு அண்மைக்காலமாக முஸ்லிம்களின் சமய விவகாரங்களில் இலங்கையின் பெரும்பாண்மை இனத்தின் சில குழுக்கள் செயற்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கது. முஸ்லிம்கள் மீது பழி சுமத்தும் இவ்வாறான சில குழுக்கள் கிழக்கில் இன்னும் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் செயற்படுவதாக சில ஊடகங்கள் இதற்கு முன்னர் சந்தேகம் தெரிவித்து ஆக்கங்கள் வெளியிட்டிருந்தமையும் மறக்க முடியாது.
-
கிழக்கு மாகாண பட்டதாரி நியமனத்தில் எந்தவிதமான அரசியல் பலமும் பயன்படுத்தப்பட மாட்டாது
கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள பட்டதாரி நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளோ முகவர்களோ பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டால் அது தொடர்பில் எனக்குத் தெரியப்படுத்துங்கள் அத்துடன் இதில் எந்தவிதமான அரசியல் பலமும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதுடன் ஆண்டு அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முழுப் பலத்தையும் வெளிக்காட்டுவோம்
மு. கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்: இன்றைய தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்துள்ள கேள்வி-பதில் ஆக்கம் கேள்வி: கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற வகையில் இந்த முடிவை வரவேற்கின்றீர்களா?
-
அக்கரைப்பற்றில் கொமர்ஷல் வங்கியின் இஸ்லாமிய வங்கி திறப்பு
-MMS கொமர்ஷல் வங்கி அதன் பிரத்தியேக கிளையான அல் அதாவா இஸ்லாமிய வங்கிச் சேவையின் கிழக்கு மாகாணத்திற்கான கிளையை அக்கரைப்பற்றில் தொடங்கியுள்ளது. இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் இஸ்லாமிய அடிப்படையிலான நிதிச் சேவைகளுக்கு ஷரீஆ இணக்கப்பாட்டுடன் கூடிய தனது வங்கிச் சேவையை வழங்கும் நோக்குடன் அக்கரைப்பற்றுக் கிளையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.