Category: Your Kattankudy
-
ஐரோப்பா கிண்ணம்: 43 வருடங்களின் பின் சுவீடனை வீழ்த்திய இங்கிலாந்து
-MJ இன்றிரவு நடைபெற்று முடிந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி சுவீடன் அணியை 3:2 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் இருந்த தடைகளை அகற்றியுள்ளது.
-
‘ஜேவிபி கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி’
-MMS அம்பாந்தோட்டை பகுதியில் கட்டுவன என்ற இடத்தில் ஜேவிபி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளியன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.
-
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத குடியேற்றம் தடுக்குமாறு கோரிக்கை
மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணானது. இது நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
-
நில அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்
-MMS எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவித்து அதில் கலந்துகொள்வோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் திங்கட்கிழமை நண்பகல் 1 மணி முதல் 2 மணிவரை நடத்தப்படும், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை, எமது கட்சித் தலைமையூடாக எமது கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-3)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் கொடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) சுவர்க்கத்தில் முத்துக்களின் வகைகளால் உருவாக்கப்பட்ட பல அறைகள் உண்டு, அவைகள் அனைத்தின் உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கத்தையும், வெளிப்பக்கத்திலிருந்து உள் பக்கத்தையும் பார்க்கலாம். எந்தக்…
-
மட்டு. பட்டதாரிகள் 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க ஜோன் செனவிரட்ன உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற பட்டதாரிகளின் நேர்முகப்பரீட்சையின் படி தகுதியானவர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க மீள்குடியேற்ற பிரதியமைச்சரிடம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 950 பேருக்கே நியமனங்களுக்கான தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் மேலதிகமாக உள்ளவர்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
-
அரசாங்கத்துடன் இணையமாட்டேன், ஊழல் ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாப்பேன்: பொன்சேகா
அரசாங்கத்துடன் தான் இணையப்போவதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து கடந்த மாதம் விடுதலையான அவர் இன்று நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார். “உங்களில் பலர் கேட்க விரும்பும் கேள்வி இது. நான் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன். நான் ஆதரிக்கும் கொள்கைகளுக்காக எப்போதும் போராடுவேன். தற்போதைய ஊழல் ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாப்பேன்” என சரத் பொன்சேகா கூறினார்.
-
ஐரோப்பா கிண்ணமும் துவேச சண்டைகளும்
ரஷ்ய ஆதரவாளர் ஒருவர் போலந்து ஆதரவாளர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சி போலந்துக்கு எதிரான முதலாவது கோலை ரஷ்யா இட்டபோது போலந்து ஆதரவாளர்களால் மைதானத்துக்குள் வீசப்பட்ட பட்டாசு -MJ தற்பொழுது உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் ஐரோப்பா கிண்ணப் போட்டிகளில் இனத்துவேசம் ஆதிக்கம் செலுத்தி இருப்பதாக ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சபை வருத்தம் தெரிவித்துள்ளது. குறிப்பாக போலந்தில் நடைபெறும் போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
-
பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் ஜனாதிபதியிடம் கவலை தெரிவிப்பு
‘அதற்காக நான் என்றும் அஞ்சியோ, மனம் குழப்பமடையவோ இல்லை. எனக்கும், எனது பாரியாருக்கும் பூரண பாதுகாப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்திருக்கிறது. அதற்காக நான் நன்றியைத் தெரிவிக்கிறேன்.’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜயத்தின் ஒரே ஒரு நிகழ்ச்சியின் போது மாத்திரம் எல்.ரீ.ரீ.ஈ.யை ஆதரிக்கும் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் முதலீட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. மற்றபடி ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்ட 6 நிகழ்ச்சிகளும் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய…
-
மக்கள் நல நடவடிக்கைகளுக்காக நாளை 20 அமைச்சர்கள் உட்பட 300 பேர் மட்டு. விஜயம்
ஒரு மாத காலத்தில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் வாய்ப்பு: கிராமங்கள் தோறும் கால்நடையாக சென்று களப்பணி ஒரு மாத காலத்துக்குள் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அபிவிருத்தி, மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், 20 அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 300 பேர் நேரடி கள பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
கிழக்கு மாகாண சபை தேர்தலை பிற்போடுமாறு பிரதியமைச்சர் வி.முரளிதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை
புனித றமழானை முன்னிட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதியமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
-
வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை டிசம்பரில் அமுல்
அதிகரித்து வரும் வீதி விபத்துகளை மட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட உள்ள சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை இந்த வருட முடிவுக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸாரும் அறிவூட்டப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார். சாரதிகளின் கவனயீனத்தி னாலே விபத்துகள் அதிகரிப் பதோடு புதிய முறைமையின் மூலம் வீதி விபத்துகள் பெருமளவு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.