Category: Your Kattankudy
-
சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க முப்படை, பொலிஸ் கூட்டு நடவடிக்கை
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து ஆட்களை கடத்துவதை தடுப்பதற்கான பாரிய நடவடிக்கையொன்றை பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தும் கும்பல்களைத் தேடி புலனாய்வுத்துறையினரும் பொலிஸாருடன் இணைந்து இராணுவம், கடற்படை, விமானப்படையினர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
-
சமூக ஒருமைப்பாட்டு வாரம் ஜுலை 16 முதல் 22வரை!
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு எதிர் வரும் ஜுலை 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சமூக ஒருமைப்பாட்டு வாரமாக கொண்டாடவிருக்கிறது. இந்த சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜுலை 16ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறுமென தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் எஸ்.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.
-
அம்பாறை மாவட்டத்துக்கு புதிய அமைப்பாளர் நியமனம்!
அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கையளித்தார்.
-
காத்தான்குடி சந்தித்த கறுப்பு ஜூலை….
-SHM இலங்கையில் முஸ்லீம் சமூகம் ஒன்று இருக்கின்றதா? என்று உலகம் நினைத்தது 1990 பள்ளிவாயல் படுகொலைக்குப் பின்னரே! இலங்கையில் பௌத்தம், இந்து (சிங்கள-தமிழ்) இரு இனமுமே இருப்பதாகவும், பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான தமிழர்களுக்குமிடையே ஓர் இனப் போராட்டம் நடைபெறுவதாக உலகம் நம்பிக்கொன்டிருந்த காலம். அச்சு ஊடகங்களையும், வானொலி, தொலைக்காட்சி செய்திகளையும் தவிர, தகவல் தொழிநுட்பம் இணையத்தள வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தாத ஓர் காலம்.
-
சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் பிணையில் செல்வதை தடுக்க சட்டம்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
நாட்டில் அதிகரித்திருக்கும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தி அவற்றை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒவ்வொரு விசேட அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
-
காத்தான்குடி அரசியற்களம்: 3 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி பதிவு
-MMS எதிர்வரும் கிழக்குமாகணசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் நேற்று கட்டுப்பணம் செலுத்தி இருந்தனர். வழமையைவிட ஓர் தேர்தல் போரும் போட்டியும் இம்முறை காத்தான்குடியை ஆக்கிரமிக்கவுள்ளது. மக்களின் சிந்தனையாளும் எழுச்சியினாலும் பல மாற்றங்கள் காத்தான்குடி அரசியலில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவது கவனிக்கத்தக்கது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 3 சுயேட்சைக் குழுக்கள்…
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் P.M.M.ஹம்ஸா அவர்களுக்கான பாராட்டு விழா
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் P.M.M.ஹம்ஸாவுக்கு பாராட்டுவைபவம் சம்மேளனத்தால் 29.06.2012 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து ஜாமியுழாபிரின் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு அவ்வாறு இரண்டாவது பாராட்டு விழா 01.07.2012 ஞாயிற்றுக்கிழமை தலைவர் அல்ஹாஜ் மர்சூக் அஹமட் லெவ்வை அவர்களின் தலைமையில் சம்மேளன காரியாளயத்தில் நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்திலும் மேற்க்கொள்ளப்பட்டது.
-
மாகாணசபைத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்டத்தில் 347,099 பேர் வாக்களிக்கத் தகுதி
-MMS தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் மொத்தம் 3,336,415 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
-
கருணா, ஹிஸ்புல்லாவின் சகோதரிமாரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட, அமைச்சர்களின் உறவினர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். அமைச்சர் அதாவுத செனிவிரத்னவின் மகன், அமைச்சர் சந்திரசேனவின் சகோதரர், அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீரவின் மகன், அமைச்சர் ஜெகத் பாலசூரியவின் மகன், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் மகன், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சகோதரி, அமைச்சர் அதாவுல்லாவின் மகன், அமைச்சர் ஜோன் செனிவிரத்னவின் மருமகன், பிரதி அமைச்சர் கருணாவின் சகோதரி உள்ளிட்ட பலர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட…
-
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு (ஜுலை மாதம்) இம்மாதம் 13ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும். அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்- மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் -கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க விருக்கின்றனர்.அரசாங்க…
-
பொறியியற்றுறை சாதனையாளருக்கான விருது வழங்கல் வைபவம்: 16ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்
இலங்கை பொறியியலாளர் நிறுவகம் 2012ம் ஆண்டில் சாதனை புரிந்த பொறியியலாளரைக் கெளரவிக்கு முகமாக பொறியியற்றுறை சாதனையாளர் விருதினை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக நிறுவன நிறைவேற்றுச் செயலாளர் தெரிவிக்கின்றார்.
-
‘பெடரர்’ 7வது முறையாக சம்பியன்: ஆதரவாளர்களைக் கண்கலங்கச் செய்த ‘முரே’ இன் தோல்வி!
-MJ நேற்று, பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் புயல் ரோஜர் பெடரர் 7வது முறையாக விம்பிள்டன் சம்பியன்ஸ் பட்டத்தை வெற்றியீட்டி முடிசூடிக் கொன்டார். முப்பது வயதுடைய ரோஜர் பெடரர் 4-6 7-5 6-3 6-4 எனும் இலக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.