Category: Your Kattankudy
-
சட்டக்கல்லூரியின் பிரவேசப்பரீட்சை
இலங்கை சட்டக்கல்லூரியின் 2013ஆம் கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் குறித்த விண்ணப்பத்தாரிகளுக்கு தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது.
-
இலங்கையில் முன்னோடி மாவட்டமாக மிளிர்ந்து வரும் மீன்பாடும் தேன்நாடு
-எம். எஸ். பாஹிம் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஊடகவியலாளர்களின் சுற்றுப் பயணத்தின் பின்னர் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.) இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு முக்கிய இடமுள்ளது எனலாம். மீன்பாடும் தேன் நாடு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பு எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி) படுவான்கரை (சூரியன்மறையும் பகுதி) என இரு வாவிகளால் பிரிக்கப்படுகிறது.
-
ஹாஸிம் அம்லா
-MJ தென் ஆபிரிக்கா கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘ஹாஸிம் முகம்மட் அம்லா’ இன்று உலக கிரிக்கட்டில் பேசப்படும் ஓர் வீரர். 29 வயதுடைய ஹாஸிம் அம்லா, தென் ஆபிரிக்காவில் டேர்பன் (Durban) நகரில் 1983 மார்ச் மாதம் 31ம் திகதி பிறந்தார்.
-
நோன்பு: தெரியவேண்டிய விடயங்கள்…
– மௌலவி KLM இப்றாஹீம் மதனி இஃதிகாஃப் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
-
விட்டுக்கொடுப்புடன்அரசாங்கம் செயற்படாவிடின் நிலைமை மோசமாகும் : ஹசன் அலி
கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் செயற்படாவிட்டால் நிலைமை மோசமடையக் கூடும். ௭னவே, அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் ௭ன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.
-
மட்டு. நிலைமைகளை ஆராய தேர்தல் ஆணையர் தலைமையில் விசேட கூட்டம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகளை ஆராய விசேட கூட்டமொன்றை நடத்தத் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
-
சவூதி அரேபியா 200 தொன் பேரீத்தம்பழங்கள் அன்பளிப்பு
புனித ரமழானை முன்னிட்டு இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கவென சவுதி அரேபியா அரசாங்கம் 200 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
-
மட்டக்களப்பில் 72 வியாபார நிலையங்களில் திடீர் தேடுதல் — 43 பேர் மீது வழக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த 70 வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 310 கிராம் நிறையில் எடை குறைந்த பாண் விற்பனை செய்தல், நிறுத்தல் அளத்தலுக்கு முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பாவித்தல், சரியான அளவைப்பயன்படுத்தாது வர்த்தகத்திலீடுபட்டுவந்த 40வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
-
தபால் மூல வாக்களிப்பு ஒகஸ்ட் 27, 28ம் திகதிகளில் இடம்பெறும்
-MMS எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
-
SLMC-அஸாட் சாலி உறவு:காங்கிரஸ் போராளிகள் மனக்குமுறல்; ஆதரவாளர்கள் கொதிப்பு
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுவதென இறுதி நேரத்தில் மேற்கொண்ட முடிவு அரசியல் வட்டாரத்தில் விறுவிறுப்பாகப் பேசப்படும் இந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு இடம் வழங்கப்பட்டமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸின் தொண்டர்கள் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மு.கா தயாரில்லை!
முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் பாரிய பிரச்சினையல்ல பதவிகளில் தங்கியிருக்கும் அவசியம் எமக்கில்லை என்கிறார் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனை பூதாகரமாக்க சிலர் முயற்சி செய் கின்றனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இது தொடர்பில் எமது கட்சியை சேர்ந்த சிலரும் கருத்து வெளிட்டனர். இதனை பெரிதாக தூக்கி பிடித்து அரசியல் பிரச்சினையாக்க நான் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழிவிட்டுச் செயற்படத் தயார்! ஹக்கீம் அதிரடி அறிவிப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறியுள்ளது. எனவே, கிழக்கில் கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால்… …அவர்களுக்கு வழிவிட்டு செயற்பட நாம் தயாராகவுள்ளோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.