Category: Your Kattankudy
-
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி 26ல்
அனுமதிப்பத்திரம் கிடையாதோர் ‘1911’ உடன் தொடர்பு கொள்ளவும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக் கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களூடாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் பரீட்சைகள் திணைக்களத்துடன் ‘1911’ என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பஷீர் சேகுதாவூத்தின் கொடும்பாவி மு.கா. அதிருப்தியாளர்களினால் எரிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் கொடும்பாவி ஏறாவூரில் எரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்குழுவொன்றினால் இக்கொடும்பாவி ௭ரிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் யூ.௭ல்.௭ம். முகைதீன் பாவா தெரிவித்தார் ஏறாவூர் பிரதேசத்தில் சமூக ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அரசியல்கட்சிகளின் சின்னங்கள் ௭தனையும் காட்சிப்படுத்தாமல் பெரியதொரு மேடை ஒன்றினை அமைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சுமார்…
-
காத்தான்குடி க.பொ.த (உ/த) மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு!
காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உ/த) மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு…
-
வேகத்தின் விபரீதம்!
இறக்காமம் அல்-ஹுதா வீதியில் நேற்று (20) திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த கார் வேகத்தைக் கட்டுப்படுத்த முடி யாமல் வீட்டு மதில் மீது பாய்ந்து சேதத்துக்குள்ளாகியிருப்பதைக் காணலாம். (படம்: தினகரன்)
-
16,478 பட்டதாரிகளுக்கு அரச சேவை நியமனம்; ஆறுமாத பயிற்சியை பூர்த்தி செய்தோர் தெரிவு
செப்டம்பர் 01 முதல் நியமனம் 16,478 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனங்களை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்தின் பேரில், ஆறு மாத பயிற்சியைப் பூர்த்தி செய்த பட்டதாரிகள், இதற்காகத் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு செப்டம்பர் 01 ஆம் திகதியிலிருந்து தமது அமைச்சினால் நியமனம் வழங்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்கிறது பாகிஸ்தான்
தென்னிந்திய நகரங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தார் வெளியேறக் காரணமாக இருந்த அச்சுறுத்தல் செய்திகளில் பெரும்பான்மையானவை பாகிஸ்தானிலிருந்துதான் வந்தன என்ற இந்தியாவின் கூற்றுக்கு அவர்கள் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. பீதிக்கு காரணமாக அமைந்த இந்த வதந்திகளில் அதிகமானவை பாகிஸ்தானில் இருந்துதான் ஆரம்பித்ததாக தங்களுக்கு தெரியவந்துள்ளது என இந்திய உள்துறைச் செயலர் கூறியிருந்தார்.
-
இங்கிலாந்திடமிருந்து கைநழுவிப்போன டெஸ்ட் முதலாமிடத்தை, தென்னாபிரிக்கா முடிசூடிக்கொண்டது
-MJ லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய 5ம் நாள் போட்டி ஓர் டெஸ்ட் போட்டி போல் இருக்கவில்லை. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் மைதானத்துக்குள் இருந்து எழுந்த இரசிகர்களின் கரகோசங்களும் ஆதரவுகளும் வானைத்தொட்டுச் சென்றன.
-
‘டெஸ்ட் நம்பர் 1’ இடத்தை தீர்மானிக்கும் நாள் இன்று…..!
-MJ தற்பொழுது இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள், ‘ஏசஸ்’ (Ashes) போட்டிகளைப் பார்க்கிலும் பலத்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றன.
-
தற்காலிக அடையாள அட்டைக்கான கால அவகாசம் ஆக. 27ஆம் திகதி நீடிப்பு!
வட மத்திய கிழக்கு சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விண்ணப்பத்துக்கான இறுதி திகதி ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி ஆகஸ்ட் 27 ஆகும். தற்காலிக அட்டைகளை கிராம அபிவிருத்தி மற்றம் தோட்ட அத்தியட்சகர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் .
-
உலகில் இன்று நடைபெற்ற ஈதுல் பித்ர் தொழுகை ஒரே பார்வையில்..
Pictures: world medias/FB Friends and overseas fans.
-
சூரியன் அஸ்தமிக்காத இடங்களில் ரமலான் நோன்பு வைப்பது எப்படி?
புனித ரமலான் மாதம் நிறைவடைந்து ஈகைப் பெருநாளைக் கொண்டாட உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை நீரும் உணவும் இல்லாமல் முஸ்லிம்கள் நோன்பிருந்தனர்.
-
இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தனைகளை முழுமையாக பின்பற்றுவோம்: ஜனாதிபதியின் பெருநாள் செய்தி
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய கலண்டரில் ஒரு முக்கிய தினமான இன்றைய தினத்தில் புனித அல் குர்ஆனினதும் இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையான ஒரு மாதகால நோன்பை நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினர் ஈத்…