Category: Your Kattankudy
-
பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ள விஸ்வரூபம் நீதிபதிகளுக்கு திரையிடப்பட்டது
விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய சமூகத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை தடை செய்யக் கோரினர். அதை ஏற்று, இரண்டு வாரங்கள் படத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கமல். தமிழக அரசின் தடைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, நாளை மறுதினம் வரை தடை தொடரும் என அறிவித்துவிட்டார். மேலும் படத்தைப் பார்த்த பிறகுதான் தடையை விலக்குவதா இல்லையா என முடிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.
-
அடைமழை; வெள்ளம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மூழ்கின
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதன் இரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு மாவட்டங்களும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. போக்குவரத்துக்களும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அதேநேரம் அறுவடைக்குத் தயாராகவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.
-
கல்வி முறைமையில் மாற்றங்கள் அவசியம்
* பல்கலை வாய்ப்பு கிட்டாதவர்களின் வாழ்வை ஒளிமயமாக்க விசேட திட்டம் * சர்வதேச தரத்தில் கல்வியை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கம் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 3 வீத மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மூன்று இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கான விசேட திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
-
பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு
இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள்.
-
மட்டக்களப்பில் மீண்டும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சுமார் ஒரு வாரங்களுக்கு பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
-
யுனப்ஸ் நிறுவனத்தினால் காத்தான்குடியில் திண்மக்கழிவுகளை பசளைகளாக மாற்றும் திட்டம் அமுல்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடிப் பிரதேசத்தில் நாளாந்தம் சேரும் திண்மக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக திண்மக்கழிவுகளை பசளைகளாக மாற்றும் திட்டமொன்றை காத்தான்குடி நகரசபை ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கள் ஸ்தாபனத்துடன் (யுனப்ஸ) இணைந்து மோற்கொள்ளவுள்ளது.
-
தொற்று நோய் பரவும் அபாயம்! விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் தோன்றி இருப்பதால் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணினைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
-
மட்டு. காத்தான்குடியில் 04டெங்கு நோயாளர்கள் – டெங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
-
தேசிய மீலாத் விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் அகில இலங்கை தேசிய மீலாத் விழா இன்று திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் அல்குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்
– டீன் பைரூஸ். காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் புதிதாக அல்குர்ஆன் மனனப்பிரிவு (25.01.2013 வெள்ளிக்கிழமை) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் அதிபா் மௌலானா மௌலவி அல்ஹாஜ்.MA. அப்துல்லாஹ் (றஹ்மானி) அவா்கள் கலந்து கொண்டு சிறப்பத்தார்கள்.
-
உலக சமாதானத்துக்கு நபிகளாரது போதனைகள் மிக பொருத்தமானவை
-மீலாத் செய்தியில் ஜனாதிபதி- சமாதானம்- ஐக்கியம்- சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை வலியுறுத்தும் நபிகளாரது போதனைகள் உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் பொருத்தமானதாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-
கமல் எனது 40 வருடகால நண்பர்: அவரை நினைத்து மனம் கலங்குகிறேன்-ரஜனி
விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் கமல் எவ்வளவு துன்பத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதை நினைத்து மனம் கலங்குகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார். இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: