மௌலவி ஸஹ்றானைச் சூழப்பட்டுள்ள கருப்பு வட்டம்

  • இர்ஷாட் ஏ. காதர்

ntjகாத்தான்குடி: தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பிரதம பேச்சாளர் எம்.சி.எம். ஸஹ்றான் மௌலவியையும் அதன் அமைப்பையும் சுற்றி காத்தான்குடியின் சமய, மற்றும் சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து பாரிய கறுப்பு வட்டம் ஒன்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் சூழ்ந்திருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற கலாசார மற்றும் மார்க்க விரோதச் செயல்களைக் கண்டித்து மௌலவி ஸஹ்ரான் உரையாற்றியதையடுத்து, காத்தான்குடியின் பிரதான அமைப்புக்களுக்குள் குழப்ப நிலை ஏற்பட்டது.

குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், விழாவுக்கான அதிதிகள், அதிதிகளின் அரசியல் ஆதரவாளர்கள், சம்மேளனம், மற்றும் சுஜா எனும் குறுந்திரைப்பட நடிகர் போன்றோரின் எதிர்ப்புக்கள் மௌலவி ஸஹ்றானை தற்பொழுது சூழ்ந்திருக்கின்றன.

ntj

இதைவிட, “எப்போது பொறியில் மாட்டுவார் இந்த ஸஹ்ரான்?” என, வைத்த கண் வாங்காமல் காத்திருக்கும் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர், அப்துல்லாஹ் பயில்வான் தரப்பினர், ஜம்மிய்யத்துல் உலமா, ஹிஸ்புல்லாஹ் தரப்பு, நல்லாட்சித் தரப்பு மற்றம் தேசிய தௌஹீத் ஜமாஅத்தை எதிர்க்கும் தௌஹீத் வாதிகளும் தௌஹீத் அமைப்புக்களும் மற்றும் இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் தரப்பும் காத்திருக்கின்றனர்.

சிறிய அங்கத்தவர்களைக் கொண்டு, மார்க்க விடயங்களையும் சமகால உலக விடயங்களையும் அச்சமின்றி மக்களுக்கு எடுத்துக்கூறிவரும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி இன்றைய (ஞாயிறு) தினத்துடன் அஸ்தமானமாகிவிடும் என்ற நம்பிக்கையில் மேற்படி தரப்புக்கள் காத்திருக்கின்றன.

மௌலவி ஸஹ்றானனின் “வார்த்தைப் பிரயோகம்” தங்களைத் தாக்கியுள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் ஆதங்கம் தெரிவித்திருக்கும் இந்நிலையில், என்ன பதிலை மௌலவி ஸஹ்றான் வழங்கப்போகின்றார் என்பதையும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்

Published by

3 responses to “மௌலவி ஸஹ்றானைச் சூழப்பட்டுள்ள கருப்பு வட்டம்”

  1. aapilutha kurankin kathai pola aahivittathu nilamai????????????????

  2. Niraikudam thalumpathu

Leave a reply to mohdfareed Cancel reply