அனுராதபுரம்: வடமேல் மாகாண சபையில் அமைச்சர்கள் பதவியேற்றதை அடுத்து, தனது அமைச்சுப் பதவியை இழந்த மாகாண சபை உறுப்பினர் டி.பி. ஹேரத், தனது உத்தியோகபூர்வ வாகனத்தை கையளித்துவிட்டு முச்சக்கர வண்டியில் புறப்பட்டுச் சென்றார். இன்று (14) இடம்பெற்ற இப்பதவியேற்பு நிகழ்வின் பின்னரே சுகாதார, சுதேச வைத்திய மற்றும் விளையாட்டு அமைச்சராக கடமை புரிந்த முன்னாள் மாகாண சபை அமைச்சர் டி.பி. ஹேரத் இவ்வாறு சென்றிருந்தார்.
பதவியேற்பின் பின்னர் பிற்பகல் வேளையில் அமைச்சு செயலாளரான டி.பி. விக்ரமசிங்கவிடம் தனது உத்தியோகபூர்வ வாகனத்தின் திறப்பை கையளித்த பின்னர் அமைச்சு காரியாலய உத்தியோகத்தர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றுச் சென்றார்.
பிரதான வாயிலுக்கு வந்த அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி மாகாண சபையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Published by
![d.p._herath_5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/d-p-_herath_51.jpg?w=150&h=100)
![d.p._herath_5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/d-p-_herath_51.jpg?w=600&h=400)
Leave a comment