காத்தான்குடி: மிக நீண்ட நாட்களின் பின்னர் ஹிஸ்புல்லாஹ்-சல்மா அமீர் ஹம்சா ஆகியோர் ஒற்றுமையாக இணைந்திருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களின் ஒற்றுமையை நினைத்து எவராவது பொறாமைப்பட்டால் அவர்கள் இதயமில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஏனெனில், அவர்களை இரத்த உறவு இணைத்திருக்கிறது. இரத்த உறவுகளைப் பிரியாமல் அவர்களது அரசியல் தொடர வேண்டும் என வாழ்த்தியவனாக,
நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தனது சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்ட நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சல்மா ஹம்ஸா அவர்கள்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த அபிவிருத்திகளையும் இந்த ஊரில் செய்யவில்லை எனவும், அரசாங்கத்தை நம்பி இருப்பதைவிட அரபு நாட்டு நிதியுடன் இந்த ஊருக்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
தனது சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் சல்மா அ. ஹம்ஸா
இதேபோல், தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு புதியவர்களை குறித்த கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியதும் ஓர் காரணமாகும் எனவும் கூறியிருந்தார்.
எம்மைப் பொருத்த மட்டடில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 25 வருடங்களுக்கு ஒரு வீதியையாவது எமது ஊரில் அமைத்துத் தரவில்லை என்பதை நியாபூர்மாக ஏற்க முடியும்.
ஆனால், ஹிறா பவுண்டேசன் ஆரம்பித்த காலம் முதலே தனது சகோதரன் அரபு நாட்டுப் பணத்துடனேயே காத்தான்குடியை அதிகமாக அபிவிருத்தி செய்துவருவது உங்களுக்கு பல வருடங்களுக்கு மேலாகவே தெரிந்த விடயம்.
ஏன் நீங்கள் அப்போதே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்யவில்லை?
இவ்வாறிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஓர் வேட்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மு.கா. கட்சித் தலைமையிடம் தாங்கள் விடுத்திருந்ததாகவும், “முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காத்தான்குடியில் ஓர் பெண் வேட்பாளரா?” என எழும் இலங்கை முஸ்லிம்களின் விமர்சனங்களை கட்சி தாங்கிக்கொள்ள முடியாததால், அது நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதன் காரணமாகவே தாங்கள் SLMCயுடன் அதிருப்தியடைந்து தற்பொழுது சகோதரருடன் இணைந்துள்ளீர்கள் என்பதும் தெளிவாகிறது.
இவ்விடயத்தை தயவுகூர்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்தினால் சந்தேகங்கள் அகன்று, தங்களின் எதிர்கால அரசியல் திட்டத்தை காத்தான்குடி பெண் சமூகம் மேலும் அறிந்துகொள்ள எங்களுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
யுவர்காத்தான்குடிக்காக இர்பானா ஏ. சத்தார், காத்தான்குடி
Leave a comment