காத்தான்குடி: காத்தான்குடி-5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயலுக்குச் சொந்தமான காத்தான்குடி 5 சந்தையிலும், சந்தைக்கு வெளிப்புற கடைகளிலும் மௌலவி அப்துர் ரஊபின் ஆதரவாளர்கள் வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
இறைச்சிக்கடை, மரக்கறிக் கடை மற்றும் உணவகங்களை பெரும்பாலும் அப்துர் ரஊப் மௌலவியின் ஆதரவாளர்களே அன்று நடாத்திவந்தனர்.
இக்காலப்பகுதியில் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினரும் காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா சபை தரப்பினரும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டுவந்திருந்தனர்.
மேலும் அப்துர் ரஊப் மௌலவியின் ‘எல்லாம் அவனே’ எனும் கொள்கைப் பிரச்சாரங்கள் மௌலான கபுறடி உட்பட ஊரின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே இடம்பெற்றுவந்த காலம்.இதன்காரணமாக இருதரப்புக்குமிடையில் முறுகல் முற்றிப்போயிருந்தது.
1984 ரமழான் 16ம் நாள், பகற்பொழுது. சந்தைத் தொகுதியில் வியாபாரத்திலீடுபட்டிருந்த அப்துர் ரஊப் மௌலவியின் ஆதரவாளர்கள் பள்ளிவாயல் மலசல கூடங்களை உபயோகிப்பதற்கும், கைகால்களைக் கழுவிச் செல்வதற்கும், ஒரு சிலர் ழுஹர் தொழுகைக்கும் (ஜமாஅத் தொழுகைக்கு அல்ல) ஜாமியுழ்ழாபிரீனுக்கு வந்து செல்வது வழமை.
ஏற்கனவே இரு தரப்புக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் முற்றிப்போயிருந்ததால், ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள், இவ்வாறு பள்ளிக்கு வந்துசெல்லும் அப்துர் ரஊப் மௌலவியின் ஆதரவாளர்களை பள்ளிக்குள் வரவேண்டாம் எனவும், பள்ளிவாயலை உபயோகப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றனர்.
இதன்காரணமாக பி.ப. இரண்டு மணியளவில் சிறு அசம்பாவிதம் ஒன்று ஜாமியுழ்ழாபிரீன் வளாகத்தில் இடம்பெறுகிறது.
அப்துர் ரஓப் மௌலவி தரப்பு இன்றிரவு தறாவீஹ் தொழுகைக்கு ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலுக்கு வந்து தொழுகை நடாத்துவதாகவும், இயலுமென்றால் தடுத்துப்பாருங்கள், பள்ளிவாயலைக் கைப்பற்றுவதென்றும் பல வகையான கதைகளால் அன்றைய அஸர் தொழுகையின் பின்னர் ஜாமியுழ்ழாபிரீனில் சின்ன சலசலப்பு இடம்பெறுகிறது.
17ம் இரவு பத்று யுத்த இரவாக அன்றைய பள்ளிவாயல்களில் விசேட நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையாக இருந்தது.
பத்று மௌலீது, சிற்றுண்டி, தேநீர், பத்ர்யுத்த பயான் இவ்வாறு நீண்ட நிகழ்ச்சி நிரல் ஜாமியுழ்ழாபிரீன் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது.
17ம் இரவு என்பதால் வழமையைவிடவும் அதிகமானவர்கள் பள்ளிவாயலுக்கு வருவது அன்றைய ஊர் வழமையாக இருந்தது.
காத்தான்குடி 5, பத்ரிய்யாவிலும் சம்பவம் இடம்பெற்றதிலிருந்து சலசலப்புக்கள் இடம்பெற்று வந்தன. அப்போதிருந்த சுமார் 300 அளவிலான தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்குமாரும், இஷாத் தொழுகைக்கு முன்னர் பத்ரிய்யாவுக்கு வருகை தருமாரும் அப்துர் ரஓப் மௌலவி தரப்பினருக்குள் செய்திகள் செல்கின்றன.
சில ஆயுதங்களுடன் சுமார் 200 பேர் அளவில் குழுவுடன் ‘பத்ர்’ போருக்குத் தயாராகிய நிலையில் பத்ரிய்யா காட்சியளித்தது.
ஜாமியுழ்ழாபிரீனில் அன்றைய கதீப், பேஷ் இமாமாக ஆதம்லெவ்வை (ஹஸ்ரத்) மௌலவி இருந்தார். வஹ்ததுல் வுஜூத் கொள்கையை எதிர்ப்பதில் ஆதம் லெவ்வை மௌலவியின் அன்றைய பங்கு அளப்பரியது.
மஹ்ரிப் தொழுகைக்கு செய்து வந்துவிட்டது. ரஊப் மௌலவி தரப்பினர் தறாவீஹ் தொழுகைக்கு பள்ளிக்கு வாரயாம் என்று.
ஜாமியுழ்ழாபிரீனைச் சூழவுள்ள சில இளைஞர்களும் தயாராகின்றனர். ஆதம் லெவ்வை மௌலவியும் தயாராகிறார். ஜமாஅத்தார்களும் தயாராகின்றனர். ஜாமியத்துல் பலாஹ்விற்கு செய்தி போகிறது. 17ம் இரவு என்பதால் மத்ரஸா மாணவர்கள் ஊரின் முக்கிய பள்ளிவாயல்களில் நிகழ்வுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். எனினும் முடியுமான மாணவர்களை ஜாமியுழ்ழாபிரீனுக்கு அனுப்பி வைத்தனர்.
இஷாத் தொழுகை ஜாமியுழ்ழாபிரீனில் நிவைடைகிறது. அப்துர் ரஊப் தரப்பினர் ஜாமியுழ்ழாபிரீனை ஆக்கிரமிக்கின்றனர்.
தறாவீஹ் தொழுகைக்கு இரு ஹாபிழ்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.அப்துர் ரஊப் மௌலவியைச் சுற்றி அவரது ஆதரவாளர்களும், ஆதம் லெவ்வை ஹஸ்ரதை சுற்றி ஜமாமியுழ்ழாபிரீன் இளைஞர்களும் சூழ்ந்து கொண்டனர்.
ஆதம் லெவ்வை ஹஸ்ரத் ஒரு எட்டும் பின்வாங்கவில்லை.
தஹாவீஹ் தொழுகை ஆரம்பமானது. கூக்குரலிட்டனர் அப்துர் ரஊப் தரப்பினர். “எங்களது மௌலவிக்கு தொழுகை நடாத்த அனுமதிக்க வேண்டும்”. “நாங்கள் அவர் பின்னால் நின்று தொழ வேண்டும்” என்றனர் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர். “முடியாது” என்றனர் உலமா தரப்பினர்.
வாய்த்தர்க்கம் அதிகமாகி கைகலப்பு இடம்பெற்றது. மீண்டும் தறாவீஹ் தொழுகையை நடாத்த ஆதம் லெவ்வை ஹஸ்ரத் முயற்சித்தார். மீண்டும் அப்துர் ரஊப் மௌலவி தரப்பினர் இடை நிறுத்தி தடுத்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.
அப்துர் ரஊப் மௌலவி தரப்பினரும் ஜமாஅத் ஒன்றை நடாத்த முயற்சித்தனர் இறுதிவரை அவர்களுக்கு முடியாமல் போயிருந்தது. சில நிமிடங்கள் ஒரே நேரத்தில் இருதரப்பு ஜமாஅத்களும் நடந்தன. எனினும் தொடர முடியவில்லை.
ஆதம் லெவ்வை ஹஸ்ரத்தை நோக்கி முன்னேற முயன்ற அப்துர் ரஊப் மௌலவி தரப்பினர் உலமா தரப்பு இளைஞர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பத்ர் களம் போல் காட்சியளித்தது. ஜாமியுழ்ழாபிரீன். பள்ளிவாயல் மின்சார ‘மெயின் சுவிட்ச்’ அப்துர் ரஓப் மௌலவி தரப்பால் சேதப்படுத்தப்பட்டதால் பள்ளிவாயலுக்குள் மின்சாரம் தடைப்பட்டது. இருட்டில் கைகலப்புக்களும் கூக்குரல்களும் இடம்பெற்றன.
இப்போது போன்று தொலைத்தொடர்பு வசதிகள் அன்றிருக்கவில்லை.
எப்படியோ மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவல் செல்கிறது. அன்று காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் இருக்கவில்லை.
‘கட்டைக்களிசனு’டனும் பாதணியுடனும் பொலிஸார் பள்ளிவாயலுக்குள் நுழைந்து சண்டையை நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக இரு முஸ்லிம் குழக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையாகவும், பொலிஸார் சமாதானம் செய்துவைத்த நிகழ்வாகவும் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
இதன் பின்னர் அப்துர் ரஊப் மௌலவி தலைமையில் அவரும், அவரது ஆதரவாளர்களும் ஜாமிழ்ழாபிரீனை விட்டு நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர் என்ற கோசத்துடன் பத்ரிய்யாவுக்குள் சென்றனர்.
அதன் பின்னர் ஆதம்லெவ்வை ஹஸ்ரத் தலைமையில் உலமா சபையினர் ஜாமியத்துல் பலாஹ்வுக்குள் சென்றனர்.
ஜாமியுழ்ழாபிரீன் ‘மெயின் சுவிட்ச், சில யண்ணல் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தன.
ரமழான் 17ம் அன்று ளுஹர் தொழுகைக்குப் பின்னர் ஜாமியுழ்ழாபிரீனை மஹல்லாவாசிகள் கழுவி சுத்தம் செய்கின்றனர்.MJ
Published by


Leave a comment