ஆடைக்குள் மறைத்துவைத்து தடைசெய்யப்பட்ட மாத்திரைகளைக் கடத்த முற்பட்ட நான்கு பெண்கள் மதீனா விமான நிலையத்தில் கைது!

saudi drugs– MJ

மதீனா: சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மட் இப்னு அப்துல் அஸீஸ் மதீனா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தடைசெய்யப்பட்ட மாத்திரைகளைக் கடத்த முற்றபட்ட நான்கு பெண்களை மதீனா விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்திருக்கின்றனர்.

குறித்த நான்கு பெண்களும் தங்களது ஆடைக்குள் மறைத்து சவுதிக்குள் கடத்த முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் 52,850 ‘ஸனக்ஸ்’ Xanax மாத்திரைகளை தங்களது ஆடைக்குள் வைத்து கடத்த முற்பட்டவேளையிலேயே கைது செய்துள்ளதாக மதீனா விமான நிலைய சுங்க இயக்குனர் பைஸல் அல் தப்பாஹ் தெரிவிக்கிறார்.

saudi drugs

ஸனக்ஸ் ரக மாத்திரைகனை சவுதி அரேபியா தடைசெய்திருக்கின்றது. பெண் சுங்க அதிகாரி ஒருவரின் சாதாரண பரிசோதனையிலேயே இம்மாத்திரைகள் அகப்பட்டதாகவும், இவர்கள் நால்வரிடமிருந்து தலா 16,200, 13,800, 11,850 மற்றும் 11,000 ஆகிய மாத்திரைகளே கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பைஸல் அல் தப்பாஹ் தெரிவிக்கிறார்.

Published by

Leave a comment