‘தவளையும் தன் வாயால் கெடும்’

upfa asadகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நுகேகொட பகுதியில் பொது கூட்டமொன்று இன்று நடைபெற்றது. ‘மஹிந்தவுடன் நாட்டை வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளினால் குறித்த பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய பொதுக் கூட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார். ஆனால் இங்கும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கூடியிருக்கின்றனர். இதைப் பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் அவர் நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார் என தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க மெதமுலனவுக்கு கேட்கும் வகையில் கூட்டாக குரலெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவ மிக்க நாளாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் மக்கள் கூட்டம் கூடியிருக்கின்றது. எதிர்காலத்தை மாற்றிமைக்கும் சாட்சியாக இன்றைய நாள் காணப்படுகின்றது. நல்லாட்சி என்ற பெயரில் நாடு பயங்கரவாதத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. இந்த அச்சுறுத்தலான நிலைமையினை மாற்றியமைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும். இதனைத் தெளிவுப்படுத்தவே இங்கு மக்கள் வெள்ளம் திரண்டுள்ளது.

upfa asad

இன்றைய கூட்டத்திற்கு முடியும் என்றால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார்.

இங்கு வர உள்ள மக்கள் கூடத்தின் எண்ணிக்கையை கணக்கெடுக்க அவருக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் தலைமைத்துவம் அவருக்கு அனுமதி வழங்கியிருக்காது. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் ஒரு நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அன்னத்திற்கு வாக்களித்தால் விடுதலைப் புலிகளின் இயக்கம் உயிர் பெறும் என அறிவித்தோம். அதன் தரிசனத்தை தற்போது நாம் காண்கின்றோம்.

Published by

One response to “‘தவளையும் தன் வாயால் கெடும்’”

  1. கம்மன்பிலல, வீரவன்ச போன்ற செல்லாக் காசாகிவிட்ட அரசியல்வாதிகள் சிலபேர் சேர்ந்து, தோல்வியடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் பெயரைப் பாவித்து, தமது அரசியலைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுவே, தற்போதைய கூச்சலும், கூட்டமும்.

    மஹிந்தருக்கு ஆதரவு தேடித்தருவது போன்ற இவர்களது பேச்சு அமைந்துள்ளது ஆச்சரியத்தைத் தருகின்றது. அவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக இருமுறை இருந்தவர். மக்கள் ஆதரவையும் பெற்றிருந்தார். அவர் மூன்றாம் முறையும் வர நினைந்து, சட்டத்தை மாற்றி, தமது இச்சையைத் தீர்த்துக் கொள்ள நினைத்தாலேயேயும், இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை வளர்ப்பதில் ஈடுபட்டார் என மக்கள் அறிந்ததாலும் மக்கள் அவரை கடந்த தேர்தலில் தோற்கடித்தனர். ஆதலால் அவர் 58 இலட்சம் வாக்குகள் பெற்றதை ஒரு பெரிய கண்டுபிடிப்பாகக் கொண்டு பிரச்சாரங்களை மேற் கொள்கின்றனர்.

    தேர்தலில் தோற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், வென்றவரைவிட சிறிது குறைளவிந்த அளவில் வாக்குகளைப் பெற்றவர்களே. ஆதலால் இது பெரிய கண்டுபிடிப்பல்ல. இலங்கைத் தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதியாக வரவிரும்பும் ஒரு வேட்பாளர் பதிவான செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஐம்பது விகிதத்ததுடன் மேவதிகமாக ஒரு ‌வாக்குப் பெற்றால் போதும். அதனால், தோற்றவர் சிறிதளவு வாக்குகளினால்தான் தோற்றிருப்பார். அதை ஒரு கருவியாக்கி அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது எனக் கூறிக் கொண்டிருப்பதும், அவரை வைத்து அரசியல் வியாபாரம் பார்க்க முனைவதும், நாட்டின் சட்டத்திற்கு எதிராகப் பேசிக் கொண்டிருப்பதே தவிர இல்லை. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்புக் கொடுக்காத தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனக் கூறிக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமே அது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, தாம் அதில் குளிர் காய நினைப்பதும்கூட!

    ஒவ்வொரு பிரஜைக்கும் ஜனநாயகத்தில் தரப்பட்டுள்ள உரிமைகள், நாட்டின் சட்ட அமைப்பை மீறுவதற்குப் பாவிக்கப்படுவததற்கும், நாட்டின் இன ஒற்றமையைக் குலைக்கப் பாவிப்பதற்கும், குழப்பத்தை உருவாக்க முனைவதற்கும் அல்ல என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

Leave a reply to nizamhm1944 Cancel reply