கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நுகேகொட பகுதியில் பொது கூட்டமொன்று இன்று நடைபெற்றது. ‘மஹிந்தவுடன் நாட்டை வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளினால் குறித்த பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய பொதுக் கூட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார். ஆனால் இங்கும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கூடியிருக்கின்றனர். இதைப் பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் அவர் நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார் என தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க மெதமுலனவுக்கு கேட்கும் வகையில் கூட்டாக குரலெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவ மிக்க நாளாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் மக்கள் கூட்டம் கூடியிருக்கின்றது. எதிர்காலத்தை மாற்றிமைக்கும் சாட்சியாக இன்றைய நாள் காணப்படுகின்றது. நல்லாட்சி என்ற பெயரில் நாடு பயங்கரவாதத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. இந்த அச்சுறுத்தலான நிலைமையினை மாற்றியமைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும். இதனைத் தெளிவுப்படுத்தவே இங்கு மக்கள் வெள்ளம் திரண்டுள்ளது.
இன்றைய கூட்டத்திற்கு முடியும் என்றால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார்.
இங்கு வர உள்ள மக்கள் கூடத்தின் எண்ணிக்கையை கணக்கெடுக்க அவருக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் தலைமைத்துவம் அவருக்கு அனுமதி வழங்கியிருக்காது. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் ஒரு நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அன்னத்திற்கு வாக்களித்தால் விடுதலைப் புலிகளின் இயக்கம் உயிர் பெறும் என அறிவித்தோம். அதன் தரிசனத்தை தற்போது நாம் காண்கின்றோம்.
Published by


Leave a comment