“மன்னார் முனாபிக் ஒருவர் இந்த அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார்” : மாத்தளையில் மஹிந்த

mahinda_rajapaksa_addresses[1]மாத்தளை: நேற்றுவரை அரசாங்கம் வழங்கிய சகலவி தமான சலுகைகளையும், வளங்களையும் ஒன்றுவிடாது அனுபவித்துவிட்டு இன்று எதிரணிக்குச் சென்ற மன்னார் முனாபிக் ஒருவர் இந்த அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டுரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். சகலதையும் அனுபவித்துவிட்டு ஒரே நாளில் கட்சி மாறிச் செல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இவர் போன்றவர்களால் அவரது சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு உறுதுணையாக இருந்த அஸ்வர் அவர்களது பாராளுமன்ற ஆசனத்தை நயவஞ்சகமாக அபகரித்தது மட்டுமல்லாது அதற்கு வியாக்கியானம் வேறு கூறித்திரிகிறார்கள். இவர்களை “முனாபிக்” என்று அழைப்பதில் தவறில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Published by

3 responses to ““மன்னார் முனாபிக் ஒருவர் இந்த அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார்” : மாத்தளையில் மஹிந்த”

  1. அய்யோ பாவம்..உங்களது அரசாட்சியில் பள்ளி உடைப்பவன்,அதற்கு சாமரம் வீசுபவன் எல்லோரும் நல்லவன்.முஸ்லிம்களுக்கு செய்யும் அநியாயத்தை பார்த்து சாமரமா சார் வீச சொல்கின்றீர்கள்.அதற்கு நல்லம் உங்களுடன் இருப்பவர்கள்.அலலாஹ் போதுமானவன்.ஒருவனை பார்த்து முனாபிக் என்று நி சொன்னால் அவர் முனாபிக்காக இல்லாத பட்சத்தில் அது திரும்பி உனக்கே வரும்…அப்போது தன்னை தானே முனாபிக் என்று கூறுவாய்…..

  2. ஜனாதிபதி வேட்பாளர் அவர்களே! அரசியல்வாதிகள் செய்யும் அடாவடித்ததனங்களையும், தகிடுதத்தங்களையும், துரோகங்களையும், கேடுகளையும் மக்களுக்குக் கேவலமாக, அவமானமாகச் சித்தரிக்க, பொறுப்புச்சாட்ட, குற்றவாளிகளாக்க வேண்டாம் என அன்பாய் வேண்டுகின்றோம்!

    நாசுவன் குப்பையில் மயிரைத் தவிர எதுவமில்லை என்பதைதா மக்கள் நன்கறிந்துள்ளதால், மக்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாது தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கி விட்டார்கள்! அதற்குக் காரணம் தாங்களே! நீங்கள் மக்கள் பிரதிநிதிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கிக் கொண்டதால், தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த வேறு வழியின்றி அவர்களே களத்தில் நேரடியாக இறங்கிவிட்டார்கள், அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு.

    இனி நீங்கள் அரசியல்வாதிகளை வாங்குவதும் விடுவதும் எவ்வித மாற்றத்தையும் இத்தேர்தலில் விளைத்துவிடப் போவதில்லை!

  3. Ayyyo ayyo (vadivelu style), the whole world know, that mr.asuooowar is No.1 munafic

Leave a reply to kamal khan Cancel reply