“மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை”

hizbullah– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை என காத்தான்குடி பிரதேசத்தில் கடமைபுரியும் திவிநெகும முகாரமயாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றயதினம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ எம் ஹிஸ்புள்ளாவின் அழைப்பின்பேரில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்திற்கு ஜனாதிபதி வருகை தொடர்பாக விளக்கமளிக்கும் விஷேட கூட்டம் அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது இதன்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

hizbullah

இது தொடர்பாக தான் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி விரைவாக பெற்றத்தர நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்
அவர் மேலும் தனதுரையில் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ இன்ஷா அல்லாஹ் வெற்றியீட்டுவார் ஐனாதிபதியானதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும். திவிநெகும உத்தியோகத்தர்களாகிய நீங்கள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட்டுள்ளீர்கள் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் வறுமையை போக்கவும் மேலும் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் இதற்கு நீங்கள் பூரண ஒத்தழைப்பு நல்க வேண்டும் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

hizbullah

Published by

One response to ““மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இதுவரையிலும் தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை””

  1. தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்கள் காத்தான்குடியில் கொங்கிறீட் வீதி அமைப்பது போல் தான் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு திணைக்களத்தில் இருந்தும் அரைவாசிப் பேர் தெரிவுசெய்யப்பட்டும் அரைவாசிப்பேர் நிராகரிக்கப்படுகின்றனர். அதிலும் கூடுதலாக மஹிந்தவுக்கு வாக்களிக்காதவர்களுக்கே கூடுதலாக தெரிவுசெய்யப்படுகின்றனர். இங்கும் ஊ……………..ழ………………………..ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ???????????

Leave a reply to mohmedrislan Cancel reply