ஏறாவூரில் சுஹதாக்கள் நினைவு தினம்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் 12-08-1990 அன்று ஏறாவூர் அப்பாவி முஸ்லிம்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று பாராது முஸ்லிம்கள் என்ற ஒரே நோக்கத்துக்காக 121 பேரை வாளினால் வெட்டியும், கோடரியால் கொத்தியும், துப்பாக்கியால் சுட்டும் சஹீதாக்கப்பட்ட சுஹதாக்களை

இருபத்தி நான்காவது ஆண்டாக நினைவு படுத்தி இகதமுல் குர் ஆன் தமாம் செய்யும் நிகழ்வை ஏறாவூர் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காட்டுப்பள்ளி வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் நூருஸ் ஸலாம் பள்ளிவாசலில் இன்று அசர் தொழுகையை தொடர்ந்து நடாத்தியது.

eravur

சம்மேளனத் தலைவர் ஜனாப் ACM சயீத், செயலாளர் சட்டத்தரணி MLM. பளீல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஊக்குவிப்பு, திறன் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பசீர் சேகு தாவூத், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அஹ்மத், கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர பிதா கௌரவ அல்ஹாஜ் அலி சாஹிர் மௌலானா உட்பட பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

eravur (2)

eravur (3)

Published by

2 responses to “ஏறாவூரில் சுஹதாக்கள் நினைவு தினம்”

  1. சுஹதாக்கள் தினத்தில் நாம்பெறும் பாடம் என்ன?

    பாசிசப்புலிகளால் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்ட அப்பாவிமக்களை (சுஹதாக்களை) நினைவுகூறும் இந்நாளில் கடந்தகாலத்தில் முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான வழிமுறைகள் பற்றி விழிப்பூட்டி தக்க அரசியல் நடவடிக்கைகளை சாணக்கியத்தோடு முன்னெடுத்தோம்.

    ஆனால், இன்று எமக்கு முன்னால் உருவாகியுள்ள மற்றுமொரு பாசிசத்தை தூண்டும் அபாயகரமான இனவாத முன்னெடுப்பை கருத்திற்கொண்டு மீண்டும் பல சுஹதாக்கள் தினங்கள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக மிக நிதான போக்குடன் முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடப்படும் அறிவியல் முன்னெடுப்புக்களை (பள்ளிவாயலுக்கு எதிரான ஹிஜாபுக்கு எதிரான ஹலாலுணவுக்கு எதிரான) எதிர்கொள்ள உரிய சிந்தனாரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இஸ்லாம்பற்றிய மிகச்சரியான நிலைப்பாட்டை பௌத்த மக்களுக்கு முன்வைத்து தஃவா செய்யவேண்டிய பொறுப்பு பற்றி சிந்திக்கும் தருணமாக இந்த சுஹதாக்கள் தினத்தை கருதி பாடம்பெற வேண்டும்.

  2. இன்று 121 சுஹதாக்களை எமதூரில் கண்டு கண்ணீர்வடிக்கும் நாம் முஸ்லிம் உம்மத்தில் எத்தனையோ சுஹதாக்கள் காலனித்துவ சக்திகளின் திட்டமிட்ட செயற்பாட்டாலும் யூதநசாராக்களினது இராணுவ முன்னெடுப்புக்களாலும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதனையும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

Leave a reply to A.LMohideen Cancel reply