ஏறாவூர்: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் 12-08-1990 அன்று ஏறாவூர் அப்பாவி முஸ்லிம்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று பாராது முஸ்லிம்கள் என்ற ஒரே நோக்கத்துக்காக 121 பேரை வாளினால் வெட்டியும், கோடரியால் கொத்தியும், துப்பாக்கியால் சுட்டும் சஹீதாக்கப்பட்ட சுஹதாக்களை
இருபத்தி நான்காவது ஆண்டாக நினைவு படுத்தி இகதமுல் குர் ஆன் தமாம் செய்யும் நிகழ்வை ஏறாவூர் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காட்டுப்பள்ளி வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் நூருஸ் ஸலாம் பள்ளிவாசலில் இன்று அசர் தொழுகையை தொடர்ந்து நடாத்தியது.
சம்மேளனத் தலைவர் ஜனாப் ACM சயீத், செயலாளர் சட்டத்தரணி MLM. பளீல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஊக்குவிப்பு, திறன் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பசீர் சேகு தாவூத், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அஹ்மத், கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர், ஏறாவூர் நகர பிதா கௌரவ அல்ஹாஜ் அலி சாஹிர் மௌலானா உட்பட பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment