‘இலங்கை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை கண்டிக்கிறோம்’

RISHATH[1]Fowzie01[1]கொழும்பு: இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளோ, தீவிரவாத குழுக்களோ இருப்பதாக செய்யப்படும் உள்நோக்கத்துடனான பொய்பிரச்சாரத்தை மறுப்பதாகவும் கண்டிப்பதாகவும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இலங்கை அரசில் இருக்கும் ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் (ரவுப் ஹக்கீம், ஏ எச் எம் ஃபௌசி, ரிஷாத் பதியுதீன், பஷீர் ஷேகு தாவூத், ஏ எல் எம் அதாவுல்லா) இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக சிலதரப்பாரால் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

hakeem

இலங்கை முஸ்லீம்கள் பல நூற்றாண்டுகளாக தமது தாய்நாடான இலங்கையில் அமைதியாகயும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதாகவும், இலங்கை என்கிற தம் தாய்நாட்டின் நில அடிப்படையிலான ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்கும் பணியில் தமது பங்கை தொடர்ந்து ஆற்றிவந்திருப்பதாகவும் அவர்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

bazeer

இலங்கை முஸ்லீம்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட இனத்துவேஷத்துடனான திட்டமிட்ட தாக்குதல்களில் இருந்து இலங்கை முஸ்லீம் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வெளியே வரத்துவங்கியிருக்கும் சூழலில், இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளும், தீவிரவாத குழுக்களும் இருப்பதாக சிலதரப்பாரால் திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருப்பதாகவும், இலங்கை முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை தாம் கடுமையாக மறுப்பதுடன், வன்மையாக கண்டிப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறாரகள்.

Athaullah[1]

Published by

One response to “‘இலங்கை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை கண்டிக்கிறோம்’”

  1. // இலங்கை முஸ்லீம்கள் பல நூற்றாண்டுகளாக தமது தாய்நாடான இலங்கையில் அமைதியாகயும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதாகவும், இலங்கை என்கிற தம் தாய்நாட்டின் நில அடிப்படையிலான ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்கும் பணியில் தமது பங்கை தொடர்ந்து ஆற்றிவந்திருப்பதாகவும் //

    இலங்கை முஸ்லிம்கள், இந்நாட்டின் ஆதிக்குடிகளின் வழியில் வந்தோரே தவிர, எங்கிருந்தும் இறக்குமதியானவர்கள் அல்லர்.

    இவ்வாதிக் குடிகளில் ஏகத்துவத்தை ஏற்று வாழ்ந்து வந்தோர், இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பின்னர், அரேபியர்களின் வருகையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள். இவர்கள் தமிழ் பேசும் மக்களின் சந்ததியினர்.

    இவர்கள் இஸ்லாத்தை ஏற்று தமிழைப் பேசிக் கொண்டிருந்தமையால், அரேபியர் இவர்களுடன் தொடர்பாடலுக்காக, அரபுத் தமிழ் என்ற புது மொழியை, Transliteration முறையில் ஏற்படுத்தினர். இவை வரலாறு தரும் உண்மை.

    ஆதலால், அரைகுறையாகத் தெரிந்த அரசியல்வாதிகள், இஸ்லாமியர் அரேபியர்களின் வாரிசுகளாகவும்,சிங்களவர்களை மணந்து பிறந்தவர்களாகவும் கூறிக் கொண்டிருப்பது ஏற்க முடியாதது. அரேபியரும் இங்குள்ளோரை மணந்திருக்கின்றனர் என்பது, இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் அரேபியரின் வழித் தோன்றல்கள் என்பதாகாது.

    இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தமிழர்களின் வரலாற்றிலிருந்து கணிக்கப்பட வேண்டியது. மக்கத்துச் சோனகர்கள் மாந்தைக் கம்மாளர்களை மணமுடித்ததாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கிபி 6,7ஆம் நூற்றாண்டுகளில், அரேபியர்களின் கப்பல்கள் அப்பகுதிகளுக்கு வந்து போயுள்ளமையை கலாநிதி சு. வித்தியானந்தன் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார்.

    மாந்தைத் துறைமுகத்தை .லகுவில் வந்தடைவதற்காக, அரேபியரால் நிர்மானிக்கப்பட்ட வெளிச்ச வீடு தற்போதும் மன்னாரின் வட காட்டில் காணப்படுவதும் சான்றுகளில் ஒன்றாகும்.

    எப்படி புத்தம் இலங்கைக்குள் நுழைந்ததோ, அப்படியே இஸ்லாமும் நுழைந்துள்ளது. மதம் என்ற ரீதியில் பிந்தியவர்கள் முஸ்லிம்கள் எனக் குறிப்பிட்டாலும், அவர்களும் சிங்க‌ளவரைத் தமிழரைப் போன்ற ஆதிக்குடிகளே!

Leave a reply to nizamhm1944 Cancel reply