முதலை விழுங்கிய
ஆடு ஒன்றின்
பிழுக்கை கிளறி
பகுப்பாய்வு நடக்கிறது
விழுங்கப்பட்டது
தெருநாயாகவோ
பாயும் புலியாகவோஅல்லது
ஓடும் எலியாகவோ
இருக்கக்கூடும் என்னும்
ஊக மூட்டைகளும்கிலோ கணக்கில்
அவிழ்த்து விடப்படுகிறதுநிறம்
இனம்
மதம் என்று
பற் பல தகவல்களும்ஆட்டை இழந்தவன்
வாக்குமூலமாய்
பதியவும் படுகிறதுஇறுதியாய்
தாகமெடுத்த
ஆடு குடித்துகுளம் வற்றி
முதலைமூச்சு திணறி இறந்ததாய்
தீர்ப்பெழுதிஇடையன் கையில்
விலங்கும் மாட்டப்படுகிறது.
Published by


Leave a reply to பிரகாசக்கவி அன்வர் Cancel reply