இஸ்லாமியப் பிரச்சாரங்களை கடற்கரையில் நடாத்துவது சிறந்ததாக அமையுமா?

kattankudy beach– அபூ ஸைனப்

காத்தான்குடி: காத்தான்குடி மக்களுக்குரிய ஒரே ஒரு பொழுதுபோக்கும் இடமாக அமைவது காத்தான்குடி கடற்கரை மாத்திரமே. என்னதான் கனவன், மனைவிக்கிடையில் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் வந்தாலும், தங்களுக்குரிய பிரச்சினைகளை ஒதுக்கிவைத்து குழந்தைகளுடன் வந்து அமர்வதில் ஓர் சந்தோசம் ஏற்படுகிறது.

பொழுதுபோக்கும் இடங்களாக எத்தனையோ இடங்கள் எம்மைச்சூழ இருந்தாலும், எமது மார்க்கம், கலாச்சாரங்களைக் கருத்திற்கொண்டு காத்தான்குடி மக்கள் குறிப்பாக குடும்பங்களோடு அவ்விடங்களுக்குச் சென்றுவலுவதைத் தவிர்த்தே வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்கப் பிரச்சாரங்கள் என்றடிப்படையில் கடற்கரையில் ஒலிவாங்கிகளை அமைத்து குர்ஆன், ஹதீஸ்களையும், இஸ்லாமிய பிரச்சாரங்களையும் இங்கு மேற்கொள்கின்றனர். மக்கள் இவைகளைக் கேட்பதா, குடும்பத்தோடு பேசுவதா என்ற சங்கடத்தில் இருந்து வருகின்றனர்.

அன்றாடம் உழைக்கும் ஓர் தொழிலாளிகூட அன்றைய தினம் ஓய்வெடுத்து, தனது மனைவி, பிள்ளைகளுடன் அன்பாக கூடி கடற்கரைக்கு வந்து அமரும் ஓர் தினம் வெள்ளிக்கிழமையின் மாலைப் பொழுதுதாகும்.

kattankudy beach

இவ்விடங்களில் இஸ்லாமிய பிரச்சாரங்களைக் காதுதாழ்த்திக் கேட்கக்கூடிய சூழ்நிலைகள் அமைவதென்பது எதிர்பார்க்க முடியாது.

எனவே தங்களது பிரச்சாரங்களை தங்களது பள்ளிவாயல்களிலோ, அமைப்புக்களிலோ நடாத்துவது சாலச்சிறந்தது. இடம் போதாவிட்டால், மைதானங்களிலோ அல்லது காத்தான்குடிக்குரிய கலாச்சார மண்டபத்திலோ நடாத்த முடியும்.

இஸ்லாமிய பிரச்சாரங்களைக் கேட்க விரும்பும் மக்கள் தங்களைத் தேடி வருவார்கள். அதுதான் பிரச்சாரத்திற்கும் அழகு.

எனவே தயவுசெய்து இஸ்லாமிய பிரச்சாரங்களை, மாநாடுகளை எதிர்காலங்களில் மேற்கொள்ள விரும்பும் காத்தான்குடி மார்க்க இயக்கங்கள், ஓர் பொதுவான இடத்தை தேர்ந்தெடுக்குமாரும், காத்தான்குடி கடற்கரையைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லாஹ் எமது நற்பணிகளை அங்கீகரிப்பானாக.

(படம்: முகநூல் நட்பு)

Published by

5 responses to “இஸ்லாமியப் பிரச்சாரங்களை கடற்கரையில் நடாத்துவது சிறந்ததாக அமையுமா?”

  1. Ahmed nooree Avatar

    எம் காத்த நகர் கடற்கரைக்கு பல அமைப்புக்களை சார்ந்தவர்கள் வருவதினாலும் . ஒரு கூட்டத்தை சார்ந்த ஒரு நண்பனும் மற்றய கூட்டத்தை சார்நத .இன்னுமொரு நண்பனும் ஒன்றன களந்து உரையாடும் போது இப்படியான ஒரு தரப்பை சார்ந்தவர்கள் நடத்தும் பிரசங்க கூட்டத்தினால் வருகின்றவர்கள் தங்களுக்குள் தாங்கள் சண்டைகளை பிடித்தக் கொண்டு வீட செல்ல வேண்டிய நிலை ஏட்படுகிறது. எனவேதான் இஸ்லாம் இப்படியான பிளவுகளையும் பித்னாக்களையும் உண்டுபன்னும் எந்த ஒரு விடயத்தையும் செய்யச் சொல்லி சொல்லியதே இல்லை . எனவேதான் ஊரின் சட்ட ஒலுங்கை காப்பாற்றும் ஊர் நகர சபை இதற்கான ஒரு முடிவை எடுக்கவேண்டும் என நான் மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.

  2. Pls inthe ice cream vikkirevankede music keyum cinema patal kalaiyum
    niruthinal innum nalla irukkum .

  3. محمد رفقان Avatar
    محمد رفقان

    காத்தான்குடியில் அனாசாரம் நடக்குற ஒரே இடம் காத்தான்குடி கடற்கரையில் தான்.
    இஸ்லாமிய பிரச்சாரத்தை வேணாம்னு சொல்றிங்களே! நீங்கள்லாம் ஒரு முஸ்லிமா?

    1. அப்போ அதுதான் நீங்களும் உங்க குடும்பமும் பீச்சுக்குப் போறல போல….?

  4. தம்பி நியாஸ் இப்பதான் பேனயப் பிடித்திருக்கிறார். ஏற்கனவே பல செய்திகளால் (?) மூக்குடைபட்டு, குறித்த ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறார். ஒரு தனது வலைமனைக்கு எவனும் வருவதில்லை எனும் பொறாமையில் இவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். என்ன இவரு மொக்குச் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிப்பதில்லை. இது போல்தான் இதுவும் நடந்திருக்கும்.

    செய்தியைத் தளிவாக படிக்காமல் பேஸ்புக்கில் 40பேரை டக்செய்து இப்படியொரு பிழைப்பு இவருக்குத் தேவையா? அச்சு ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் எத்தனையோ எழுத்தாளர்கள் புனைப்பெயரில் எழுதிவருவது பொறாமை இவரது உள்ளத்தை மறைத்துவிட்டது.

    எழுதுவதற்கு எத்தனையோ விடயஙடகளட இருக்கும்போது குறித்த ஊடகத்தின் வளர்ச்சியைத் தாங்கமுடியாத தம்பி நியாஸூக்கு அல்லாஹ் நேர்வழியைக் காண்பிக்கட்டும்.

Leave a reply to Ahamed Cancel reply