காத்தான்குடி: காத்தான்குடி மக்களுக்குரிய ஒரே ஒரு பொழுதுபோக்கும் இடமாக அமைவது காத்தான்குடி கடற்கரை மாத்திரமே. என்னதான் கனவன், மனைவிக்கிடையில் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் வந்தாலும், தங்களுக்குரிய பிரச்சினைகளை ஒதுக்கிவைத்து குழந்தைகளுடன் வந்து அமர்வதில் ஓர் சந்தோசம் ஏற்படுகிறது.
பொழுதுபோக்கும் இடங்களாக எத்தனையோ இடங்கள் எம்மைச்சூழ இருந்தாலும், எமது மார்க்கம், கலாச்சாரங்களைக் கருத்திற்கொண்டு காத்தான்குடி மக்கள் குறிப்பாக குடும்பங்களோடு அவ்விடங்களுக்குச் சென்றுவலுவதைத் தவிர்த்தே வருகின்றனர்.
இந்நிலையில், மார்க்கப் பிரச்சாரங்கள் என்றடிப்படையில் கடற்கரையில் ஒலிவாங்கிகளை அமைத்து குர்ஆன், ஹதீஸ்களையும், இஸ்லாமிய பிரச்சாரங்களையும் இங்கு மேற்கொள்கின்றனர். மக்கள் இவைகளைக் கேட்பதா, குடும்பத்தோடு பேசுவதா என்ற சங்கடத்தில் இருந்து வருகின்றனர்.
அன்றாடம் உழைக்கும் ஓர் தொழிலாளிகூட அன்றைய தினம் ஓய்வெடுத்து, தனது மனைவி, பிள்ளைகளுடன் அன்பாக கூடி கடற்கரைக்கு வந்து அமரும் ஓர் தினம் வெள்ளிக்கிழமையின் மாலைப் பொழுதுதாகும்.
இவ்விடங்களில் இஸ்லாமிய பிரச்சாரங்களைக் காதுதாழ்த்திக் கேட்கக்கூடிய சூழ்நிலைகள் அமைவதென்பது எதிர்பார்க்க முடியாது.
எனவே தங்களது பிரச்சாரங்களை தங்களது பள்ளிவாயல்களிலோ, அமைப்புக்களிலோ நடாத்துவது சாலச்சிறந்தது. இடம் போதாவிட்டால், மைதானங்களிலோ அல்லது காத்தான்குடிக்குரிய கலாச்சார மண்டபத்திலோ நடாத்த முடியும்.
இஸ்லாமிய பிரச்சாரங்களைக் கேட்க விரும்பும் மக்கள் தங்களைத் தேடி வருவார்கள். அதுதான் பிரச்சாரத்திற்கும் அழகு.
எனவே தயவுசெய்து இஸ்லாமிய பிரச்சாரங்களை, மாநாடுகளை எதிர்காலங்களில் மேற்கொள்ள விரும்பும் காத்தான்குடி மார்க்க இயக்கங்கள், ஓர் பொதுவான இடத்தை தேர்ந்தெடுக்குமாரும், காத்தான்குடி கடற்கரையைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அல்லாஹ் எமது நற்பணிகளை அங்கீகரிப்பானாக.
(படம்: முகநூல் நட்பு)
Published by


Leave a reply to Ahmed nooree Cancel reply