அப்துர் ரஊப் மிஸ்பாஹிக்கு இஸ்லாமிய மாநாட்டில் தாருல் அதர் அத்தஅவிய்யா பகிரங்க அழைப்பு

SAM_1297– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில்  ஞாயிற்றுக்கிழமை (20), காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இஸ்லாமிய மாநாடு ஒன்று நடைபெற்றது.

காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாடு பொலிசாரின் வேண்டுகோளுக்கமைய இடம் மாற்றம் செய்யப்பட்டது.

மாலை 6.45 மணியலவில் ஆரம்பமான இம் மாநாடு, இரவு 9.45 மணிக்கு நிறைவு பெற்றது.

‘கலிமாவை அறிவதன் அவசியம்’ எனும் தலைப்பில் மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீத் (ஷரயி)யும் ‘அறிவுபூர்வமான மார்க்கம் இஸ்லாம்’ எனும் தலைப்பில் மௌலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி)யும் சொற்பொழிவாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஜே.பி. உட்பட உலமாக்கள், பெருந் தொகையான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இம் மாநாட்டின் இறுதியில் ‘பிழையான வழிகாட்டலில் அப்பாவி பொதுமக்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்றுகொண்டிருக்கும் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களையும், அவரது றப்பானீக்களையும் சுமுகமான கலந்துரையாடலுக்கோ அல்லது பகிரங்க விவாதத்திற்கோ வருமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா இம் மேடையில் பகிரங்கமாக அழைக்கிறது எனவும், இன்றிலிருந்து (20.04.2014) சரியாக 1 மாத காலத்திற்குள் இதற்கான பதிலை அவர்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும்’ மௌலவி பீ.எம். அஸ்பர் (பலாஹி) அழைப்பு விடுத்தார்.

இம் மாநாட்டில் தர்ஹா வழிபாடு மற்றும் சேகுமார்களின் மார்க்க விரோத செயல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

3 responses to “அப்துர் ரஊப் மிஸ்பாஹிக்கு இஸ்லாமிய மாநாட்டில் தாருல் அதர் அத்தஅவிய்யா பகிரங்க அழைப்பு”

  1. அபூ ஜமாலீ Avatar
    அபூ ஜமாலீ

    தீர்ப்பு யார் சொல்வதாம்? காலம் பதில் சொல்லும் பொறுத்திருந்து பார்ப்போம்!

    1. தீர்ப்பு சொல்வது யாராக இருக்க வேண்டும் என்பது தங்களின் எதிர்பார்ப்பு? ஏற்கனவே உங்களுக்கு உலமா சபை யினரால் சில தீப்புக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதையும் மறக்க வேண்டாம்.

  2. இப்படியான மேடைகள் மீண்டும் ஒரு கலாவரத்தை உருவாக்கும் அறைகூவல் களே தவிர மார்க்க உபன்யாசங்கள் அல்ல,( இதுவா நபிகளாரின் நடைமுறை) பல வழிகளிலும் எப்படியோ சீண்டி 2004 காலத்தில் உருவாக்கியதை போல் மீண்டுமோர் கலவரத்தை உருவாக்கி அதன் தொகுப்பை பணம் வாங்கிய வெளிநாட்டு அமைப்புகளுக்கு காட்டவே இவர்கள் துடி துடிக்கிறார்கள் என்பது மிக தெளிவா புலனாகிறது. இல்லையேல் ஏன் ஒரு தனி மனிதனை இவ்வளவு சிரமம் எடுத்து சீண்ட வேண்டும் நாட்டில் இஸ்லாத்துக்கு எதிரான பல வன்முறைகள் நடக்கின்றனவே ஒரு வார்த்தை வெளி இடங்களில் பகிரங்கமாக இவர்களால் பேச முடிகிறதா இல்லை, அல்லது இவர்களின் தஃவா மூலமாக ஒரு மாற்று மதத்தவரை இஸ்லாத்தில் இணைக்க முடிகிறதா? இவர்கள் முடியுமாக இருந்தால் இவார்களின் கணக்கறிக்கையை இணையதளங்களிலும் மட்டுமல்லாது நேரடி பகிரங்க மேடை களிலும் நிருபிக்கட்டும் ( மாதாந்த வரவு செலவுகள் அத்துடன் சஹ்றான் ஜப்பான் போனது வரை) அல்லாஹ்வுக்கு பயந்தால் உண்மையான கணக்கும் மக்களுக்கு பயந்தால் பொய்யான சாட்டு போக்கும் எது என காத்திருந்து பார்ப்போம் கடைசிவரை முடியாது இவர்களால் உண்மை அறிக்கை சமர்ப்பிக்க

Leave a reply to அபூ ஜமாலீ Cancel reply