காத்தான்குடி: நேற்றிரவு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இவ் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகளில் ஓர் இரசிகர் போட்டியை இலங்கை முஸ்லிம்களிடத்தில் காண முடியும். அதிலும் காத்தான்குடி தனிச் சிறப்புப் பெற்றது.
ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணியின் இரசிகர்கள் பட்டாசுகள் கொழுத்தியும் ஒலிகளை எழுப்பியும் காத்தான்குடியை ஊர்வலம் வந்தனர்.
வெற்றி ஊர்வலம் வரும் இளைஞர்களை கண்டு மகிழ வீதியெங்கும் பெண்கள் வீட்டுக் கதவுகளுக்குள் காத்திருந்ததையும் காண முடிந்தது.
மேலும் வீதிகள், ஒழுங்கைகள் எங்கும் பட்டாசுகள் போடப்பட்டு கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதையும் காணமுடிந்தது.
காத்தான்குடி கடற்கரை வீதி பூகா புத்தக நிலையத்துக்கு முன் இடம்பெற்ற இலங்கை அணி ஆதரவாளர்களின் வெற்றிக் களிப்பின் காட்சிகள் இங்கு பதிவேற்றப்படுகின்றன.




Leave a reply to Mansoor Cancel reply