இலங்கை அணி வெற்றி: பட்டாசுகளால் அதிர்ந்தது காத்தான்குடி

kky– AK 48

காத்தான்குடி: நேற்றிரவு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இவ் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகளில் ஓர் இரசிகர் போட்டியை இலங்கை முஸ்லிம்களிடத்தில் காண முடியும். அதிலும் காத்தான்குடி தனிச் சிறப்புப் பெற்றது.

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணியின் இரசிகர்கள் பட்டாசுகள் கொழுத்தியும் ஒலிகளை எழுப்பியும் காத்தான்குடியை ஊர்வலம் வந்தனர்.

வெற்றி ஊர்வலம் வரும் இளைஞர்களை கண்டு மகிழ வீதியெங்கும் பெண்கள் வீட்டுக் கதவுகளுக்குள் காத்திருந்ததையும் காண முடிந்தது.

மேலும் வீதிகள், ஒழுங்கைகள் எங்கும் பட்டாசுகள் போடப்பட்டு கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதையும் காணமுடிந்தது.

காத்தான்குடி கடற்கரை வீதி பூகா புத்தக நிலையத்துக்கு முன் இடம்பெற்ற இலங்கை அணி ஆதரவாளர்களின் வெற்றிக் களிப்பின் காட்சிகள் இங்கு பதிவேற்றப்படுகின்றன.

kky1kky2kky

 

 

Published by

2 responses to “இலங்கை அணி வெற்றி: பட்டாசுகளால் அதிர்ந்தது காத்தான்குடி”

  1. என்னவாம் இலங்கைக்கு ஆதரவாமா?

    எவ்வளவுதான் எங்க நாடு என்று போற்றினாலும் துதிபாடினாலும் ஜனாதிபதியின் காலை உங்கள் தலையில் வைத்துக் கும்பிட்டாலும் மஸ்ஜிதுகள் உடைக்கப்படுவது நிற்கப்போவதுமில்லை, மூடப்படுவது நிற்கப்போவதுமில்லை, முஸ்லிம்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனும் கோஷம் மாறிவிடப்போவதுமில்லை.

    வேலையில்லாத கூட்டமே புரிந்துகொள்ளுங்கள்.

    1. அதே போல் நீங்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதால் அவர்கள் வந்து உங்களை காப்பாற்றப் போவதுமில்லை. வெளி நாடுகளில் வசிப்பவர்களுக்கே அவரவர் நாட்டை மட்டுமே விசுவாசிக்க வேண்டும் என்ற உண்மை விளங்கும். நாங்களும் பாகிஸ்தானின் அதி தீவிர ரசிகர்கள் தாம். வெளி நாட்டுக்கு வந்து சேர்ந்த பொழுதுதான் உண்மை விளங்கியது.

Leave a comment