PMGG யின் தொடரும் அரசியல் தளம்பல்கள்..

– அவதானி

PMGG-Logo[1]காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இறுதியாக கடந்த வாரம் இடம்பெற்ற வட மாகாணசபையில் தனது கட்சி சார்பாக ஒருவரை நியமித்து தமிழரசுக் கட்சியுடன் கூட்டமைத்து போட்டியிட்டிருந்தது. எனினும் எதிர்பாராத தோல்வியைத் தழுவியுள்ள தமது பிரதிநிதிக்கு எப்படியாவது போனஸ் ஆசனத்தில் வட மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்க அதிக பிரயத்தனங்கள் எடுத்த போதிலும், இறுதியாக இந்த கூட்டமைப்பு அரசியல் எவ்வளவு பலனை தங்களுக்குக் கற்றுத் தந்துள்ளது என்பதை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தற்பொழுது சிந்தித்து வருவது கண்கூடு!

வடமாகாணசபை முதலமைச்சர் நியமனத்தையடுத்து விரைவில் ஒன்றுகூட இருக்கும் நிலையில், இரண்டு போனஸ் ஆசனத்துக்கு பலர் போட்டியில் இருப்பதும் மற்றுமொரு உண்மை. இவற்றில் அஷ்செய்ஹ் அஸ்மின் அவர்களுக்கும் சுழற்சி முறையில் ஒருவருடம் வடமாகாணசபையில்  பிரதிநிதித்துவம்  கிடைக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கினாலும், ஒரே ஒரு வருடம் மாத்திரமே அவரால் அந்த சபையில் தனது செல்வாக்கைச் செலுத்த முடியும்.

நிற்க!

காத்தான்குடியில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை நோக்கி உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி என்ற ஓர் குறுகிய அரசியல் வட்டத்துக்குள் தங்களது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த காலத்தில் ஓர் பிரதான எதிர்க்கட்சியாக காத்தான்குடியில் திகழ்ந்திருந்ததுடன், ஓர் தனித்துவமும் இக்கட்சிக்கு இருந்தது.

எனினும் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் காத்தான்குடிக்கு வெளியில் தங்களது அரசியல் காலூன்றலை முன்வைக்கப்போய் பின்னர் சொந்த மண்ணில் மூக்குடைக்கப்பட்ட நிலையை மறக்க முடியாது.

குறுகிய வளங்களுடன், குறுகிய உறுப்பினர்களுடன் இயங்கி காத்தான்குடியில் அரசியல் களம் பதித்து வந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், சொந்த ஊரில் தற்பொழுது அநாதையாகி வரும் நிலைமையைக் காண முடிகிறது.

அப்பியாசக் கொப்பி வழங்கள், பொருத்துக்கல் வீதியமைத்தல், உணவு முத்திரைகள் மற்றும் ஏனைய உதவி, கல்வி சேவைகள் அனைத்தும், தற்பொழுது தனது கட்சியின் பரந்த சிந்தனையால் மறக்கப்பட்டுள்ளதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது.

காத்தான்குடியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கடந்த நகரசபைத் தேர்தலில் ஓர் ஆட்டம் கண்டதுடன், மாகாணசபைத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவி இருந்தது.

அதிகளவான மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து வளர்ந்துவந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், தனது பரந்த அரசியல் கொள்கையின் காரணமாக, இன்று சொந்த ஊரில் இருக்கும் ஆதரவுகளையும் இழந்துவிடும் அபாயம் எதிர்காலத்தில் இக்கட்சிக்கு இருக்கின்றது.

தனது சொந்த ஊரின்  நகரசபையைக் கைப்பற்றும் அளவுக்கு முடியாத நல்லாட்சி இயக்கத்தால், எவ்வாறு வெளிப் பிரதேசங்களில் தனது அரசியல் காலூன்றல்களை நிலைநிறுத்த முடியும் என்பதாக ஊர்மக்கள் கேட்கின்றதில் பல நியாயங்கள் இருக்கின்றன.

வருடத்தில் ஓர் இப்தாரை ஏற்பாடு செய்து கலைந்துவிடும் அளவுக்குத்தான் இன்றைக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் களம் இருப்பதாக அரசியல் அவதானிகள் ஊரில் கூறிக்கொள்வதையும் காணமுடிகிறது.

Published by

9 responses to “PMGG யின் தொடரும் அரசியல் தளம்பல்கள்..”

  1. தனது சொந்தப் பெயரில் எழுதத் தெரியாத அவதானி சில விடயங்களை அவதானிக்கத் தவறி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    சற்று ஏனைய ஊடகங்களையும் பரவலாக ஆராய்ந்து விடயங்களை உறுதிப்படுத்திய பின்னர் கருத்துக்களை வெளியிடுவதுதான் ஒரு நடுநிலையான கருத்தாளனின் தகுதி என நான் நினைக்கிறேன்.

    வட மாகாணசபையில் நியமன முறையில் நியமிக்கப்பட்டிருக்கும் அய்யூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் பதவி முழுமையானது என்றும் எஞ்சியிருக்கும் மற்ற நியமனம் ஏனைய ஐந்து பேருக்கு வருடத்திற்கு ஒருவர் வீதம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வழிமுறையான மீளைளைத்தல் முறையில் வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் குறிப்பிட்டிருப்பதை அவதானி அவதானித்திருக்க வேண்டும்.

    இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது விழுமிய அரசியல் வழிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றக் கூடியவாறு அமைந்திருக்கிறது என்றால் அதுவும் ஒரு பாரிய வெற்றி என்றே கூறவேண்டும்.

    அதுமாத்திரம் இல்லை மீளைத்தல் முறையை மாத்திரம் அல்ல வட மாகாணசபையில் அமையவிருக்கின்ற நான்கு அமைச்சுப் பதவிகளும் தனியொருவருக்கு இல்லாமல் கூட்டுத் தீர்மான முறையில் அதாவது சூறா முறையில் அமையவிருப்பதாக வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவதானியின் அவதானத்தில் பாரிய ஓட்டை இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

  2. 1009 விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பதுதான் கேள்வி. ஓர் ‘தயவு’ இல்லாமல் 1009 வாக்குகளைப் பெற்றவர் எப்படி வட மாகாணபைக்குள் நுழைவார்? 1009 ஐ விடவும் அதிகமான விருப்புவாக்குகளைப் பெற்றவர்கள் பலர் அதே தொகுதியில் தெரிவாகாமல் உள்ளனர். எனவே ஆக்கம் வரவேற்கத்தக்கதே! ‘

    1. அம்சத் முஹம்மத் Avatar
      அம்சத் முஹம்மத்

      சகோதரரே… ஏற்கனவே TNA உடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது… இவருக்கு போனஸ் ஆசனம் கொடுப்பதாக….

  3. இந்த அவதானியின் குருட்டத்தனமான அவதானிப்பையிட்டு நான் கவலையடைகின்றேன்.

    எனது இந்தக் கருத்துப் பதிவினை அடுத்து மள மளவென நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எதிரான அன்பர்கள் பலரும் என்னைக் கைக்கூலி என்றும், வயிற்றுப்பிழைப்புக்கு பத்திரிகை நடாத்துபன் என்றும், பிரதம ஆசிரியராக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்றும் வசை பாடி கருத்துக்களை பதிவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

    எனினும் இத்தகைய தாக்குதல்களுக்கு அஞ்சாமல் காத்தான்குடியிலுள்ள உண்மை நிலவரத்தைப் பதிவிடுவதற்கே விரும்புகின்றேன்.

    நல்லாட்சிக்கான மகக்ள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு, த.தே. கூட்டமைப்புடன் இணைந்து வட மாகாண சபையில் மன்னார் மாவட்டத்தில் அஸ்ஸெய்க் அஸ்மின் அய்யூப் நளீமி அவர்களை நிறுத்தியிருந்தது. அவர் 1009 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

    அம்மாவட்டத்தில் த.தே. கூட்டமைப்புக்கு கிடைத்த உறுப்பினர் எண்ணிக்கையில் அவர் தெரிவு செய்யப்படவில்லை. அதன் காரணமாக த.தே. கூட்டமைப்பு அவருக்கு மாகாண சபைக் காலம் முழுவதும் இருக்கத்தக்கதாக தனது போனஸ் உறுப்பினர்களில் ஒன்றை வழங்கியுள்ளது.

    இதனை கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

    இரண்டாவது போனஸ் உறுப்பினரையே சுழற்சி முறையில் வழங்குவதற்கு த.தே. கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் முதலாவது சுழற்சிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 64 விருப்பு வாக்குகளால் தெரிவாகத் தவறிய திருமதி. மேரி கமலா குணசீலனின் பெயர் தேர்தல் ஆணையாளரிடம் சமாப்பிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை வரை சர்வதேச இணையதளங்களில் பரவலாக இந்தத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையிலும், ஒரு வருடத்திற்கு மாத்திரமே அஸ்மின் அய்யூபை கூட்டமைப்பு போனஸ் உறுப்பினராக நியமிக்கும் என்று இந்த ‘அவதானி’ தெரிவித்திருப்பது, அவரது அவதானிப்பின் கூர்மையை நன்கு புலப்படுத்துகின்றது.

    மேலும், ந.ம. இயக்கம் காத்தான்குடிக்கு அப்பாலும் அதன் சமூக அரசியல் களத்தில் கால் பதித்துள்ளதனால் எந்தவிதமான பின்னடைவையும் அது எதிர் கொள்ளவில்லை. மாறாக தேசிய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும் அதன் பெயரும், புகழும் நாளுக்கு நாள் ஓங்கியே வருகின்றன.

    இந்த வாரம் வெளிவந்த ‘நவமணி’ பத்திரிகையில் கூட ந.ம.இயக்கம் த.தே. கூட்டமைப்புத் தலைமைகளுடன் சந்தித்துக் கலந்துரையாடிய படத்தை பெரிய அளவிலும், ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் உள்ளிட்ட மு.கா. தலைமைகள் அரசியல் மேடைகளிலேயே இன்னமும் இருந்து கொண்டிருக்கும் படத்தை சிறிய அளவிலும் பிரசுரித்திருப்பதைக் கொண்டு ந.ம.இயக்கத்தின் வளர்ச்சியைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

    இப்போதும் காத்தான்குடி நகர சபையில் இந்த இயக்கம் இரண்டு உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் ஆளும் கட்சியாக வருவதற்கு அவ்வியக்கம் தொடர்ந்து முயற்சிக்கும். அழ்ழாஹ் நாடினால் ஆளுந்தரப்பு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருப்பதில் அவ்வியக்கத்திற்கு எந்தவிதமான மாற்றுணர்வும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற இலக்கை எந்த இடத்தில் இருந்து செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து அவ்வியக்கம் செய்யும். செய்தும் வருகின்றது.

    அப்பியாசக் கொப்பி வழங்கும் திட்டம் அதன் வருடாந்தத் திட்டமாகும். அது டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகும்.

    பொருத்துக்கல் வீதி அமைக்கும் நடவடிக்கை ஆளுந்தரப்பினரும், அரையமைச்சர் ஹிஸ்புல்லாவும் நிராகரித்த காலத்தில் முன்மாதிரியாகச் செய்து காட்டப்பட்டவை. இப்போது உழைக்கும் நோக்கத்துடன் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கொங்றீட் வீதிகளையும், பொருத்துக்கல் வீதிகளையும் அமைப்பதில் தீவிரமாக ஆர்வங்காட்டி வருகின்றனர். நகர சபை நிர்வாகம் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பாரபட்சமற்ற வகையில் வீதியமைப்பு வேலைகளைப் பகிர்ந்தளித்தால் இவ்வியக்கத்தினரும் தமது மேலதிக நிதிகளையும் செலவழித்து மேலும் தரமான வீதிகளை அமைத்து உங்களைப் போன்றவர்களின் அவதானிப்புக்கு கையளிப்பார்களேயன்றி ஆளுந்தரப்பு உறுப்பினர்களைப்போல் அதில் கொமிஷன் பெற்றுக் கொண்டு தரங்குறைந்த வீதிகளை அமைக்க மாட்டார்கள்.

    முதலாவது நகர சபைத் தேர்தலில் ஒரு உறுப்பினரைப் பெற்ற ந.ம. இயக்கம், இரண்டாவது நகர சபைத் தேர்தலில் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றது, இந்த அவதானியின் அவதானிப்பில் ஆட்டம் கண்டதாகத் தெரகின்றது.

    முதல் தவணையில் 100 மார்க்குகள் பெற்ற மாணவன் இரண்டாவது தவணையில் 75 மார்க்குகளைப் பெற்றால்தான் அவனை ஆட்டம் கண்டவனாகவோ, தோல்வியடைந்தவனாகவோ கருத முடியும்.

    கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் முதல் தடவையாகப் போட்டியிட்ட ந.ம. இயக்கத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 வாக்குகள்தான் கிடைத்திருந்தாலும் அது முதல் வெற்றியே என்பதை இந்த அவதானி அவதானிக்க வேண்டும். இன்ஷா அழ்ழாஹ், அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தற்போது உள்ளதை விட அதன் வாக்கு வங்கி குறைந்தால்தான் ஆட்டம் கண்டுள்ளதாகச் சொல்ல முடியும். இவ்வாறுதான் வட மாகாண சபைத் தேர்தலிலும் 18 நாள் பிரச்சார முயற்சியில் இவ்வியக்கம் 1009 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது ஒரு சாதனையே அன்றி சோதனை அல்ல!

    மெர்தத்தில் முன் வீட்டுப் பிள்ளை ஆரோக்கியமாக வளர்வதைக் கண்டு பொறாமைப்படும் எதிர் வீட்டுப் பெற்றோரின் நிலையில்தான் இந்த அவானியும் உண்மைக்குப் புறம்பான அனுமானங்களை “யுவர் காத்தான்குடி”யில் பதிவிட்டிருக்கிறார் என நான் கருதுவதோடு, என்போன்றவர்கள் இவ்வாறான கருத்துக்களுக்கு பதிலிடுவார்கள்.. அப்போது வாங்கு வாங்கென வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் எழுதியிருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி-

  4. கட்­டுரை எழு­தி­ய­வர்தான் அறி­யாத்­த­ன­மாக எழு­தி­யி­ருப்பார் என்­றால் யுவ காத்­தான்­குடி இணை­ய­தள நிர்­வா­கி­க­ளுக்­கா­வது நடை­முறை செய்­திகள் தெரியாதா?
    நீங்­கள்தான் நேற்று அஸ்­மி­னுக்கு மாகாண சபையின் முழுக்­கா­லத்­திற்கும் போனஸ் ஆசனம் வழங்­கப்­பட்­டுள்ள செய்­தியைப் போட்­டு­விட்டு இன்று செய்­தி­களை அவ­தானிக்­கத் தெரி­யாத அவ­தா­னியின் அவ­தா­னத்தைப் பிர­சு­ரித்­­துள்­ளீர்கள்… இவ்­வ­ள­வுதான் உங்கள் செய்தி அறி­வு…வாழ்க உங்கள் இணை­யம்….வ­ளர்க உங்கள் காழ்ப்­பு­ணர்ச்­சி….

  5. தம்பி அவதானி
    pmgg வடமாகாண தேர்தலில் களம் இரங்காத பட்சத்தில் tna இதுபோன்று ஒரு வெற்றியை பெற்று இருக்கும் தட்போது கிடைத்திருக்கும் 30 ஆசனம் கிடைத்திருக்கும் அந்த 30 ஆசனம்களில் தமிழ்சகோதரர் இருந்து இருப்பார் நம்முடைய சகோதரர்கல் அங்கு சென்று எவ்வளவு சிரமப்பட்டு 1௦௦9 வாக்குகளை பெற்றார்கள் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியாது இறைவனுக்கு மட்டும் தெரிந்துஇருக்கும் தயவுசெய்து நல்ல மனிதர்களை ஒரு வார்த்தையால் அவமதிக்க வேண்டாம் பிழை இருந்தால் நியாயமான முறையில் சொல்லுங்கள் ஏற்று கொள்வார்கள் அப்படி நல்ல கருத்துக்களை மறுக்கும்போது நாகளும் இதை விமர்சிப்போம்

    இது அவதானியின் மூலைக்கு

    சரி இப்ப pmgg களம் இரங்கி 1௦௦9 வாக்குகளை பெற்று போனஸ் முறையில் ஒரு ஆசனத்தை பெற்று உள்ளது இதில் உங்களது மாற்று கருத்து ஏதும் உண்மையில் பிழையாக இருந்தால் ஒருநியாயமான முறையில் பிழை இருந்தால் pmgg ஏற்றுகொள்ளும் இப்படி ஒரு மொக்குதனமான கருத்துக்கு pmgg ஏற்று கொள்ளாது

    கண்டியில்

    pmjd அக்குரணையில் இம்முறை தேர்தலில் சகோதரர் ரௌவுப் ஹக்கீமுக்கு தகுந்த பாடம் ஒன்றை கட்டி
    கொடுத்து உள்ளது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் pmgg களம் இரங்கி இங்குள்ள பிழையான அரசியலை திருத்தாத பட்சத்தில் இப்படியான முட்டாள் தனமான கருத்துக்களை எதிர்பார்க்குறோம்

    புவி றஹ்மதுழ்ழாஹ் அவர்களுக்கு

    நீகள் சமூகத்தில் அதுவும் இந்த காத்தான்குடி மண்ணில் ஒரு பெறுமதி மிக்க மனிதர் ஆனால் நீகள் இந்த ஊரில் அணியனத்தை தட்டிகேட்பதால் உங்களை இந்த ஊரில் உள்ள பள்ளிவாசல்கள் அரசியல்வாதிகள் சமூகநிருவனம்கள் மததலைவர்கள் என்று அனைவரும் உங்களை விமர்சிக்கின்றனர்கள் நீகள் பல தடைகளை தாண்டியும் இந்த சமூகத்துக்காக உண்மையை சொல்ல எவ்வளவு சிரமப்படுகுரீர்கள் என்று உண்மையை நேசிக்கும் அணைத்து உள்ளம்களுக்கும் தெரியும் உங்கள்கருத்துக்களை இந்தசமூகம் எப்பொழுது இது ஒரு சமூகத்தின் கருத்து என்று சிந்திக்குமோ அன்றுதான் இந்த சமூகம் நிமிர்த்து நிக்கும் இதை விட்டு விட்டுநான்தான் இங்கு ராஜா என்று நிக்கும் மனிதர்கள் அல்லாவை மறந்துவிட வேண்டாம் உலகமே இன்று ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்லும்போது இதை விளங்காத சில மனிதர்கள் இங்கும் உள்ளனர் இவர்களுக்கு இறைவன்தான் நல்ல மனதை கொடுக்கவேண்டும் உங்கள் பனி தொடரனும் இறைவன் உங்கள் பக்கம் உள்ளான் இந்த பணியை செய்பவர்களுக்கு இங்கு நன்மை கிடைக்காது மறுமையில்கிடைக்கும் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

    இறுதியாக

    நான் ஒருவருடைய மனதையும் புண் படுத்த இதை எழுதவும்
    இல்லை எவருடையா தேவைக்கு எழுதவும் இல்லை எனக்கு ஒருஇலாபாமும் இல்லை ஒரு சமூகம் நல்ல வழியில் செல்லும் பொழுது பிழை வந்தால் நியாயமான முறையில் விமர்சிக்கவும் மிகவும் மன வேதனையை உள்ளது வடமாகாணசபை தேர்தலை முடிவுகளை பார்க்கும் பொழுது தமிழ் மக்கள் நம்முடைய சமூகத்துக்கு விரலை நீட்டி ஒரு பாடம் கற்றுதந்து உள்ளனர் இதுதான் ஒற்றுமை கிடைத்தவெற்றி என்று இப்போதாவது சிந்திக்கவும் நாம் அடுத்த கட்டம் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசையாய் உள்ளது நம்முடைய சமூகம் இப்படியான ஒரு தேர்தல் வெற்றியை பெறவேண்டும் என்று அல்லாஹ் இதை அங்கீகரிக்க வேண்டும் முடித்தால் உங்கள் மனதை தேற்று இறைவனிடம் துஆ சைய்யவும் அரசியலில் என்னை சரியான வழியில் கொன்று செல் என்று அப்பபொழுது இந்த சமூகத்துக்கு உண்மையான வெற்றி கிடைக்கும்

  6. நாட்டில் அனைத்து ஊடகங்களும் அறிந்த விடயத்தை ‘யுவர் காத்தான்குடி.காம்’ அறியாததுபோல் இந்த ஆக்கத்தை பதிவேற்றி இருப்பது கவலைக்குரியது.

  7. மம்தும் முகம்மட் Avatar
    மம்தும் முகம்மட்

    கட்டுரையை எழுதியவர் “அவதானி” அல்ல “அவர் ஒரு ஆணி”… எப்படி ஒரு பரந்த அறிவு… ஒருவேளை அவர் ஒரு “கிணற்றுத் தவளை”யாய் இருப்பாரோ..!!!???

  8. முதல் காத்தான்குடி நகர சபையை கைப்பற்றுவதக்குரிய நடவடிக்கையை பாருங்க. அதற்குப் பிறகு எங்க வேண்டுமானாலும் போய் சிரைங்க. வந்திட்டாக விளக்கம் மட்டும் சொல்றதுக்கு.

Leave a comment