யாழ்ப்பாணம்;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும் என்று யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியிலில் வாக்குரிமை இல்லாத யாழ்ப்பாணத்தை சேர்ந்த அய்யூப் அஸ்மி என்பவர் இடம் பெற்றுள்ளதானது.மன்னாரில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களின் உச்ச கட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமது கட்டப்பாட்டுக்குள் ஒரு முஸ்லிமை வைத்துக் கொண்டு இன்னும் அந்த சமூகத்திற்கு எதிரான உள்விவகாரங்களை அறிந்து செயற்பட வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டுவதாக அஸ்கர் ரூமி மேலும் தெரிவித்தார்..
நல்லாட்சிக்கான இயக்கம் என்ற ஒரு அமைப்பின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மட்டும் போடப்பட்டிருப்பதன் பின்னணி,முஸ்லிம்களை பிளவுபடுத்த கையாண்டுள்ள தந்திரோபாயம் என்பது தெளிவாகின்றது.
வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறவருகின்ற போது,அவர்களை வெளிமாவட்ட முஸ்லிம்களாக காண்பித்து சிங்கள பௌத்த இனவாதிகளை விடவும் படு மோசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்தவொரு முஸ்லிமையும் பெற்றுக் கொள்ள முடியாத வங்குரோத்து நிலையில் யாழில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வேட்பாளராக அஸ்மி நிறுத்தியிருப்பதன் பின்னணி தெளிவாகின்றது.
கடந்த 20 வருடமாக பயங்கரவாதம்,மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு செய்த துரோகமும் அநியாயமும் அழியாத வடுக்கலாக இருக்கின்ற நிலையில் வேட்பாளர் அஸ்மியும் இந்த முஸ்லிம் சமூகத்தற்கு எதிரான கொள்கைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது கவலைத்தருவதாகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.
சமூக சேவையென்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட அய்யூப் அஸ்மியை யாழ் மக்கள் ஏற்கனவே நிராகரித்துவட்ட நிலையில்,வட மாகாண முஸ்லிம்களுக்கும்,சகோதர தமிழ் மக்களுக்கு அளப்பரிய பணியாற்றிவரும் எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் விசமத்தனமான பிராசாரங்களை செய்துவரும் நிலையில் அதற்கு துணையாக முஸ்லிம் ஒருவரை பயன்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வகுத்த வலையில் அய்யூப் அஸ்மி விழுந்துள்ளார்.
மன்னார் மாவட்ட மக்கள் அவரது சுய விபரங்களையும் பின்னணியினையும் அறிந்து கொள்ள ஒரு சந்தரப்பம் ஏற்படடுள்ளது என்று தெரிவித்துள்ள யாழ் மாநாகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி,இவரது பெயரை சிபாரிசு செய்துள்ள நல்லாட்சிக்கான இயக்கம் என்பது கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

Leave a reply to புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ் Cancel reply